“லாக் டவுன் டைரி” விமர்சனம்
அங்கிதா புரடக்ஷன் எஸ். முரளி அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படம் “லாக் டவுன் டைரி”.
900 படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியிருக்கும் ஜாலி பாஸ்டியன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் பி.கே.எச் தாஸ். இசை ஜாசி கிஃப்ட் & AB முரளி
இதில் ஜாலி பாஸ்டியன் மகன் விஹான் ஜாலி (அமீத்) கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார் சஹானா கதாநாயகியாக நடிக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர்,. மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘லாக் டவுன் டைரி’ படம் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்.
உலகத்தையே புரட்டிப்போட்ட ஒரு விஷயம் சமீபத்துல வந்த லாக் டவுன் தான்.
அதேபோல் நடுத்தர மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டார்கள் என்பதை தெள்ளத் தெளிவாக காட்டும் படமே இந்த லாக்டவுன் டைரி.
கதாநாயகன் ஒரு கால் டாக்ஸி ஓட்டுனராக இருக்கிறார் அவருடைய நேர்மைக்கும் மனித நேயத்தை பார்த்து ஒரு கோடீஸ்வரர் பெண் அவரை காதலிக்கிறார்.
தன்னை நம்பி வந்த அந்த கோடீஸ்வரன் பெண்ணை எப்படி கஷ்டப்பட்டாவது நல்லபடியாக வாழ வைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு கிளம்பி வரும் நாயகன் அவர்களின் இல்லற வாழ்க்கைக்கு அடையாளமாக ஒரு பெண் குழந்தை பிறக்கிறது திடீர்னு இந்த குழந்தை இதய நோயால் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான பணம் செலவாகும் என்ற சூழ்நிலை வருகிறது.
கதாநாயகனாக நடித்திருக்கும் விகான் படத்தின் பெரும் பகுதி கதையை ஆக்கிரமித்து அசத்திருக்கிறார் கதாநாயகி தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக நிறைவு செய்திருக்கிறார் பல படங்களில் ஸ்டண்ட் இயக்குனராக இருந்து இந்த படத்தை தனது மகனுக்காக தயாரித்திருக்கும் அவரை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.
மொட்டை ராஜேந்திரன்,எம் எஸ் பாஸ்கர் இவர்களுடன் கார் செட் காட்சிகள் எல்லாம் படத்தில் நிச்சயமாக கைதட்ட வைக்கும்.
பாடல்கள் அனைத்தும் சுமாராக இருந்தாலும் லாக் டவுன் பத்தி வருகிறார் ஒரு ராப் சாங் அருமை.
பொதுவா சமூகத்தில் நடக்கிற கதைகளை நிறைய பேர் எப்படி எப்படி சொல்லுவாங்க ஆனா இந்த லாக்டவுன்ல நடந்த விஷயத்தை தெள்ளத்தெளிவா ஒரு குடும்பம் படும் கஷ்டத்தை கண்முன் இவ்வளவு அழகா நேர்த்தியா கொண்டு வந்த இயக்குநரை பாராட்டியாக வேண்டும்.
ஒரு மனிதன் வாழ்க்கையில் நேர்மையாக இருந்தால் அவன் எந்தெந்தவாறு கஷ்டப்படும் என்பதை தெள்ளத் தெளிவாக காட்டுகிறது இந்த படம்.









