• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இசைஞானியின் இசையில் “நினைவெல்லாம் நீயடா” படப்பிடிப்பு நிறைவு பெற்றது..!

by Tamil2daynews
August 31, 2022
in சினிமா செய்திகள்
0
டைரி – விமர்சனம்
0
SHARES
25
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இசைஞானியின்  இசையில் “நினைவெல்லாம் நீயடா” படப்பிடிப்பு நிறைவு பெற்றது..!
லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிக்க, ஆதிராஜன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி வரும் படம் “நினைவெல்லாம்  நீயடா”. இசைஞானி இளையராஜாவின் 1417 வது படமாக உருவாகி வரும் இதில்  பிரஜன் நாயகனாக நடிக்க, நாயகியாக மனிஷா யாதவ் வித்தியாசமான வேடத்தில்‌ நடித்திருக்கிறார். மற்றொரு நாயகியாக சினாமிகா அறிமுகம் ஆகிறார். இளம் நாயகன் நாயகியாக ரோகித்-யுவலட்சுமி ஜோடி அறிமுகமாகிறது.

 இவர்களுடன் முக்கிய இடத்தில் ரெட்டின் கிங்ஸ்லி காமெடியில் கலக்கியிருக்கிறார். மற்றும் மனோபாலா முத்துராமன் மதுமிதா ரஞ்சன் குமார் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் தமிழ்செல்வி  ஆகியோரும் நடித்திருக்கின்றனர். மனநல மருத்துவராக முக்கிய வேடத்தில் பிரபல இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்  முத்திரை பதித்திருக்கிறார்.

 ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவை கையாள ஆசிஸ் ஜோசப் படத்தொகுப்பை கவனிக்கிறார்.  பிரதீப் தினேஷ் மாஸ்டர் சண்டை காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். கலையை முனிகிருஷ்ணா  கவனிக்க பாடல்களை பழனி பாரதி, சினேகன் எழுதியிருக்கிறார்கள். “இதயமே… இதயமே” என்று தொடங்கும் ஒரு பாடலை இளையராஜா எழுதி கொடுத்திருக்கிறார். அந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியிருக்கிறார்.மாஸ்டர்கள்   தினேஷ்,  தினா ஆகியோர் நடன காட்சிகளை ரசனையாக வடிவமைத்திருக்கின்றனர்‌‌. தயாரிப்பு நிர்வாகம்: இளங்கோ.
பள்ளிப் பருவத்தில் தோன்றும் முதல் காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும்  இந்த படத்தை சென்னை கொடைக்கானல் திருப்போரூர் திருமழிசை உள்ளிட்ட பகுதிகளில் 41 நாட்களில் படமாக்கி முடித்திருக்கிறார் ‌இயக்குநர் ஆதிராஜன். இத‌ற்காக தயாரிப்பாளர் ராயல் பாபு இயக்குநருக்கு பாராட்டு தெரிவித்தார்.

இறுதி நாள் படப்பிடிப்பு சென்னையை அடுத்த ஈவிபி ஸ்டுடியோவில் நடைபெற்றது. கொட்டும் மழையில் பிரஜன், சினாமிகா, யுவலட்சுமி மற்றும் மாணவியர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. மாலையில் வெற்றிகரமாக படப்பிடிப்பை முடித்து பூசணிக்காய் உடைக்கப்பட்டது. இந்த மகிழ்ச்சியை படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடினர்.

தற்போது படத்தின் டப்பிங் நடந்து வருகிறது. படத்தை நவம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
Previous Post

‘மேதகு-2’ திரைப்படம் ‘மூவி வு’ட் ஒடிடி தளத்தில் வெளியானது..

Next Post

ஜீவன் – நட்டி இணைந்து கலக்கும் புதிய படம் ‘ எம்.எஸ். முருகராஜ் தயாரிக்கும் “சிக்னேச்சர்”.

Next Post
டைரி – விமர்சனம்

ஜீவன் - நட்டி இணைந்து கலக்கும் புதிய படம் ' எம்.எஸ். முருகராஜ் தயாரிக்கும் "சிக்னேச்சர்".

Popular News

  • நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ படத்தின் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • “பாபா பிளாக்‌ ஷீப்” படத்தில் நடிப்பில் மிரட்டிய விருமாண்டி அபிராமி!!

    0 shares
    Share 0 Tweet 0
  • தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், நடிகை மகாலட்சுமி சங்கர் திருமணம் இன்று இனிதே நடைபெற்றது

    0 shares
    Share 0 Tweet 0
  • இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் ஆகும் பிரைம் வீடியோவின் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா

July 28, 2026

ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் ஆகும் பிரைம் வீடியோவின் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்

July 28, 2026

‘அன்பே டயானா’ நன்றி அறிவிப்பு விழா!!

July 28, 2026

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

July 28, 2026

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்தின் இதமான காதல் பாடலான ‘வானே வானே- Vaane Vaane’ வெளியீடு

July 28, 2026

மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ – டிரைலர் வெளியீடு!

July 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.