• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சாதிக்க துடிக்கும் சாய் ஸ்ரீ.

by Tamil2daynews
September 2, 2023
in சினிமா செய்திகள்
0
சாதிக்க துடிக்கும் சாய் ஸ்ரீ.
0
SHARES
92
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சாதிக்க துடிக்கும் சாய் ஸ்ரீ

 

முதல் படத்திலேயே முத்திரை பதிக்கும் முகம் இந்த சாய் ஸ்ரீ.

பொதுவாக அம்மா கதாபாத்திரம் என்றாலே அனைவருக்கும் பிடித்தது தான்.அப்படி நடித்த நடிகைகளில் சில பேரை ரசிகர்களின் மனதை விட்டு என்றுமே நீங்க மாட்டார்கள்.

அப்படி எல்லோருக்கும் பரிச்சயமான ஒரு அம்மா நடிகை என்றால் கொஞ்சம் சில நாட்களாகவே சரண்யா பொன்வண்ணனை சொல்லலாம்.

சரண்யா பொன்வண்ணனை ஏன் ரசிகர்கள் அதிகம் நேசித்தார்கள் அவருடைய வயதிற்கு தகுந்த கதாபாத்திரம் என்பதால்தான்.

ஆனால் அவரைத் தொடர்ந்து சரியான அம்மா கதாபாத்திரத்திற்கு நடிக்க சரியான நடிகைகள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த குறையை நீக்க தான் தற்பொழுது வெளியான ‘ரங்கோலி’ என்கிற படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கும் சாய் ஸ்ரீ யை சொல்லலாம்.

(முக்கிய குறிப்பு)

இவரின் வயது கதாநாயகிக்கு சவால் விடும்  வயது தான்.ஆனால் அம்மா கதாபாத்திரத்தில் இவரை நடிக்க வைத்திருக்கிறார்கள். ஒரு நடிகைக்கு எந்த கதாபாத்திரம் என்றால் என்ன அந்த கதாபாத்திரமாகவே மாற வேண்டியது தான் ஒரு நடிகையின் வேலை. அதை கனக்கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார் சாய் ஸ்ரீ.

முதலில் இந்த அம்மா கதாபாத்திரத்திற்கு சாய் ஸ்ரீ யை நடிக்க வைத்த இயக்குனருக்கு ஒரு சபாஷ் சொல்லலாம். அப்படி ஒரு அற்புதமான தேர்வு.

புதுக்கோட்டை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட நடிகை சாய் ஸ்ரீ தமிழ் சினிமாவில் எப்படியாவது நடித்து நல்ல பெயரை வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னைக்கு வந்து பட வாய்ப்புகள் தேட அவருக்கு அமைந்தது ஹேய் சினாமிகா, நட்சத்திரங்கள் நகர்கிறது, இந்தியன் பாகம் 2, படங்களில் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார்.

முந்தைய மூன்று படங்களில் இரண்டு படங்கள் வெளிவந்து ரசிகர்களின் மனதில் ஒட்டாத இந்த சாய் ஸ்ரீ ரங்கோலி படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தது தான் அவருடைய அதிர்ஷ்டம் என்றே சொல்லலாம்.அதிர்ஷ்டத்தை மீறிய நடிப்பு ஆற்றல் அவரிடம் மிக நிறைய உள்ளது என்று ‘ரங்கோலி’படம் பார்த்து அவரின நடிப்பை கண்டு வியந்தவர்கள் சொல்வதை நம் காதில் கேட்க முடிந்தது.

பத்திரிகையாளர்களின் பாராட்டையும் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கும்  இந்த நடிப்பு ராட்ஷசிக்கு அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் தான் இந்தியன் பாகம் 2..

தமிழ் சினிமாவில் பெருமை சேர்த்த இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் இயக்கத்தில் நடிப்பது அவ்வளவு சுலபமா என்ன,

அனைவரும் ரசிக்கும் படியும் அனைவரையும் கவரும் படியும் படம் எடுப்பதில் கைதேர்ந்தவர் ஷங்கர் இந்தியன் 2 படத்தில் கேரக்டர் ரோலாக நடிக்கிறேன் என்று சொன்ன சாய் ஸ்ரீ யின் வார்த்தைகள் ஒரு நம்பிக்கையாகவே இருந்தது.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிப்பு என்பதை மீறி வரும் நடிகைகள் பல பேர் காணாமல் போய் இருப்பதை கண்முன்னே பார்த்திருக்கின்றோம் .

அதில் இவர் நிச்சயமாக தமிழ் படங்களில்  தனக்கென ஒரு ராஜ்ஜியம் படைப்பார் என்றே சொல்லலாம் ஏனென்றால் அவருடைய குடும்பபாங்கான   முகமும் வித்தியாசமான தமிழ் உச்சரிப்பும் நம்மை மிகவும் ரசிக்க வைக்கின்றது.

அதுமட்டுமல்லாமல் கன்னடத்தில் ஒரு படத்திலும் தற்பொழுது நடித்துக் கொண்டிருக்கிறார் இந்த நடிப்பு ராட்சசி சாய் ஸ்ரீ.

கன்னட ரசிகர்களே தயாராக இருங்கள் உங்கள் கன்னட மொழியை இவரின் உச்சரிப்பு மூலம் கேட்க.

நிறைய காட்சிகளில் இடது,வலது,எந்த காட்சியாக இருந்தாலும் கேமரா கோணத்தில் கதாநாயகிக்கு  சளைத்தவர் இல்லை முகமாகவே இருக்கிறார்  இந்த சாய் ஸ்ரீ.

எது எப்படியோ தமிழ் சினிமாவிற்கு நல்ல,நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க ஒரு அருமையான நடிகை கிடைத்துவிட்டார்.

நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் நடிகர்,நடிகைகளை தமிழ் சினிமாவும், தமிழ் சினிமா ரசிகர்களும் என்றுமே கைவிட்டதில்லை.

தமிழ் பட ரசிகர்களே  உங்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கப் போகிறார் நடிகை  சாய் ஸ்ரீ.

மொத்தத்தில் பார்த்தவுடன் பசை இல்லாமல் மனதில்  ஒட்டும் முகமே இந்த சாய் ஸ்ரீ.

             சிந்தனை தொகுப்பு
            சரண்
Previous Post

பீப்பிள் மீடியா பேக்டரி தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ‘வடக்குபட்டி ராமசாமி’ படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர் ரவீந்திரன் வாங்கியுள்ளார்

Next Post

கவுண்டமணி பாராட்டில், நடிகர் முத்துக்காளை!

Next Post

கவுண்டமணி பாராட்டில், நடிகர் முத்துக்காளை!

Popular News

  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

    0 shares
    Share 0 Tweet 0
  • சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

    0 shares
    Share 0 Tweet 0
  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, ‘ரைட்டர்’ பட இயக்குநரும் ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு மற்றும் புது வரவான பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்ற விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.

    0 shares
    Share 0 Tweet 0
  • முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!

August 26, 2026

சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

August 26, 2026

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

August 26, 2026

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

August 26, 2026

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் வெளியீட்டு தேதி & பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

August 26, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

August 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.