• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பீப்பிள் மீடியா பேக்டரி தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ‘வடக்குபட்டி ராமசாமி’ படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர் ரவீந்திரன் வாங்கியுள்ளார்

by Tamil2daynews
September 2, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பீப்பிள் மீடியா பேக்டரி தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ‘வடக்குபட்டி ராமசாமி’ படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர் ரவீந்திரன் வாங்கியுள்ளார்

 

பாக்ஸ் ஆபிஸின் வெற்றிக் கூட்டணி புதிய படத்திற்காக இணையும் போது, நிச்சயம் அது வெற்றி என்பதில் சந்தேகம் இல்லை. அப்படியான ஒரு கூட்டணிதான் ‘டிக்கிலோனா’ படப்புகழ் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம்.

சமீபத்தில் வெளியான அவரது ‘டிடி 3’ படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இது இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் அவரது நட்சத்திர அந்தஸ்தை மேலும் உயர்த்தி இருக்கும் நிலையில், தற்போது பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் டி.ஜி. விஸ்வபிரசாத் தயாரிப்பில் சந்தானம் நடித்திருக்கும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன்  பெற்றுள்ளார்.
Imageடிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன், திரைப்படங்களின் தயாரிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றில்  பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்ப சிறந்த படங்களைத் தேர்ந்தெடுத்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது என்ற செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தினை ஏற்படுத்தியுள்ளது.  தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மத்தியில் பாக்ஸ் ஆஃபிஸ் நாயகனாக மாறியுள்ள சந்தானத்தின் நட்சத்திர வேல்யூவை கருத்தில் கொண்டு, டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் பெரிய அளவில் புரோமோஷனல் விஷயங்களைத் திட்டமிட்டுள்ளது. மேலும், சரியான வெளியீட்டுத் தேதியையும் விரைவில் அறிவிக்க உள்ளது.

இந்த படத்தில் சந்தானம் மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் தமிழ் வில்லனாக நடிக்கிறார். ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவிமரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷூ, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் இந்த நட்சத்திரக் குழுவில் உள்ளனர்.

ஷான் ரோல்டனின் இசையமைப்பிலும், தீபக்கின் ஒளிப்பதிவிலும், சிவ நந்தீஸ்வரனின் படத்தொகுப்பிலும் இந்தப் படம் உருவாகி வருகிறது. கலை இயக்குநர் ராஜேஷ், கிரியேட்டிவ் தயாரிப்பாளர் வி.ஸ்ரீ நட்ராஜ் மற்றும் நடன இயக்குநர் ஷெரிப் ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.

‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தை ‘டிக்கிலோனா’ புகழ் கார்த்திக் யோகி இயக்கி இருக்க, டி.ஜி.விஸ்வபிரசாத் தயாரிப்பில், விவேக் குச்சிபோட்லா இணைந்து தயாரித்துள்ளார்.

Previous Post

‘குஷி’ – விமர்சனம்

Next Post

சாதிக்க துடிக்கும் சாய் ஸ்ரீ.

Next Post
சாதிக்க துடிக்கும் சாய் ஸ்ரீ.

சாதிக்க துடிக்கும் சாய் ஸ்ரீ.

Popular News

  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • பீப் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பாரிஸ் கபே – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கிறிஸ்டினா கதிர் வேலன்’ திரைப்பட இயக்குனரின் புதிய படம்: “ஸ்கார்” (SCAR)

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026

வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

September 20, 2026

பீப் – விமர்சனம்

September 20, 2026

‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

September 20, 2026

‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின் வாழ்க்கை, போராட்டம், கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை – ஹிப்ஹாப் தமிழா ஆதி

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.