• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சூப்பர் சிங்கர் ஜூனியரில், நிகழ்ந்த நெகிழச்சி சம்பவம் !!

by Tamil2daynews
September 9, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சூப்பர் சிங்கர் ஜூனியரில், நிகழ்ந்த நெகிழச்சி சம்பவம் !!  

 

இசையுலகில் மிக முக்கிய நிகழ்ச்சியாகக் கொண்டாடப்படும் ஜூனியர் சூப்பர் சிங்கர் 9 வது சீசன் கோலாகலமாக நடந்து வருகிறது. பல ஆச்சர்ய தருணங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், கடந்த வார நிகழ்ச்சியில் மிகவும் நெகிழ்வான ஒரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில்,  பல வருடங்களாக வெற்றி நடை போட்டு வருவதுடன்,  தமிழ் இசை உலகில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சி மூலம் பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில், கோலோச்சி  வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர்,  ஜூனியர்  என பிரிவுகளாக இளைஞர்களுக்கும், சிறு வயதினருக்குமாக நடைபெறுகிறது.  தற்போது சிறுவர்களுக்கான ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9 வது சீசன் கோலாகலமாக நடந்து வருகிறது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், இளம் சிறுமி சனு மித்ரா தனது அற்புத குரலில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். கடந்த வார நிகழ்ச்சியில்  அவரின் கதையை பகிர்ந்து கொண்டபோது, மொத்த அரங்கமும் சோகத்தில் ஆழ்ந்தது.

சனு மித்ராவின் இசை ஆசைக்கு, உறுதுணையாக இருந்த பாசமிகு தந்தை, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் முதல் கட்ட ஆடிசனுக்கு அவரைக் கூட்டி வந்து செல்கையில், விபத்தில் பறிபோன கதையைப் பகிர்ந்து கொண்டார்.

சூப்பர் சிங்கர் இசைப்போட்டியில் ஜெயிக்க வேண்டும் எனும்  அவரது தந்தையின் கனவை நனவாக்க, தன் தாயின் துணையுடன் போராடும் சனு மித்ராவின் பயணம் அனைவரையும் உருக வைத்தது.
இதைத் தொடர்ந்து தொகுப்பாளிணி பிரியங்கா,  என் தந்தையையும் என்னுடைய 11 வயதில் ஹார்ட் அட்டாக்கில் இழந்தேன். என் அம்மா  தான் தந்தையை போல் பார்த்து கொண்டார்.  தந்தை நம்மை எப்போதும், நம்மோடு இருந்து, ஆசிர்வதிப்பார் என்று ஆறுதல் சொன்னார்.

இந்நிகழ்ச்சியில் நீதிபதியாக இருந்து வரும் இசையமைப்பாளர் தமன், தன் தந்தை குறித்துப் பகிர்ந்து கொண்டார்,  என் ரயிலில் பயணிக்கையில் ஹார்ட் அட்டாக்கால் பாதிக்கப்பட்டு என்  தந்தை என்னுடைய 9 வயதில் தவறிவிட்டார் என தன் சோகத்தை பகிர்ந்தவர், சனுவிடம்  “நாங்கள் அனைவரும் உன் கூட இருப்போம், எதற்கும் கவலைப்படக்கூடாது” என்று ஆறுதல் கூறினார். மேலும் ஆண்டனி தாசன் அவர்கள் அந்த சிறுமியின் துக்கத்தைப் போக்கும் விதமாக, அவர் தந்தை குறித்து ஒரு அருமையான பாடலை பாடி அனைவரையும் உருகவைத்தார்.

இந்த வாரம் நடந்த இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ வைத்ததாக அமைந்தது. இசையில்  திறமை மிக்கவர்களுக்கு ஒரு அற்புதமான  மேடையாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி விளங்கி வருகிறது.
Previous Post

‘ஸ்ட்ரைக்கர்’ – விமர்சனம்

Next Post

’800’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

Next Post

’800’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

Popular News

  • விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

    0 shares
    Share 0 Tweet 0
  • மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் ‘மாகாளி’ – பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026

நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

September 5, 2026

‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

September 5, 2026

பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

September 5, 2026

நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.