T சுரேஷ்குமார் இயக்கத்தில் அன்சன் பால், ரெபா மோனிகா ஜான், மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார், கிஷோர் ராஜ்குமார், ஷங்கர் குரு, வெற்றிவேல் ராஜா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் இந்த “மழையில் நனைகிறேன்”
கணவன் மனைவியான மேத்யூ வர்கீஸ் & அனுபமா குமார் நல்லதொரு வசதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். இவர்களது மகனாக வருகிறார் அன்சன் பால். பெற்றோர் வசதி என்பதால், எந்தவொரு வேலைக்கும் செல்லாமல், ஊர் சுற்றுவது, குடிப்பது என தனக்கு தோன்றியதை செய்யும் நபராக இருக்கிறார் அன்சன்.
அப்பா கண்டிப்புடன் இருந்தாலும் அம்மாவின் செல்லத்தில் வளர்கிறார் அன்சன்.
அமெரிக்கா சென்று வேலை பார்ப்பது தான் தனது இலட்சியம் என்று இருந்து வருகிறார் நாயகி ரெபா மோனிகா ஜான்.
இந்தசூழலில், ரெபா மோனிகா ஜானை கண்டதும் அவர் மீது காதலில் விழுகிறா நாயகன் அன்சன். மாதங்களாக அவரை பின் தொடர்ந்து தனது காதலை வளர்த்து கொள்கிறார். ஒருநாள் தைரியத்தை வரவழைத்து ரெபாவிடம் தனது காதலை கூறிவிடுகிறார்.
அன்சனின் காதலை ஏற்க மறுக்கிறார் ரெபா. மனமுடைகிறார் அன்சன். தன் காதலை ஏற்கும் வரை காத்திருப்பேன் என்று கூறி சென்று விடுகிறார். ரெபாவின் வழியில் செல்லாமல் தனித்தே இருக்கிறார் அன்சன்.
நாட்கள் கடந்து செல்ல, அன்சனின் ஒரு சில குணாதிசயங்கள் ரெபாவிற்கு பிடித்துப் போக, அவர் மீது ரெபா காதல் வயப்பட்டு விடுகிறார். ஒரு தலை காதலானது இருதலை காதலாக மாறுகிறது.
தனது காதலை அன்சனிடம் சொல்வதற்கு தயாராகிறார் ரெபா. இருசக்கர வாகனத்தில் இருவரும் சென்று கொண்டிருக்கும் போது பெரும் விபத்திற்குள் இருவரும் சிக்கிக் கொள்கின்றனர். இருவருமே பலத்த காயமடைகின்றனர்.
அதன்பிறகு கதையில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் அன்சன்பால். மலையாள சினிமாவில் அறிமுகமாகி நல்லதொரு கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தொடர்ந்து சில தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார் அன்சன். ஒரு முழு காதல் கதையின் ஹீரோவாக இப்படத்தில் நடித்திருக்கிறார்.
பிகில் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நாயகி ரெபா மோனிகா ஜான், இப்படத்தின் ஹீரோயினாக நடித்திருக்கிறார். வழக்கமான க்யூட் பெர்பார்மன்ஸை கொடுத்திருக்கிறார் ரெபா.
பெற்றோர்களாக நடித்த மேத்யூ வர்கீஸ் & அனுபமா குமார் இருவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை அளவாக செய்து முடித்திருந்தார்கள்.
இருவருக்குமான காதல் பயணம் படத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது. இரண்டாம் பாதியில் இன்னும் சற்று காதலை உரச வைத்திருந்திருக்கலாம் என்று தோன்றியது.
காதலுக்கான ஃபீலிங்க்ஸ் அதிகம் இருந்தாலும், ஒரு சில காட்சிகளை தவிர்த்திருந்திருக்கலாம் என்று தோன்றியது. இரண்டாம் பாதியில் இருவருக்குமான தொடுதலை சற்று கொடுத்திருந்திருக்கலாம்.
முதல் பாதியில் கதையோடு ஒன்றிணையாத காட்சிகளை நன்றாகவே கட் செய்திருந்திருக்கலாம். காமெடிக்கான இடம் படத்தில் அதிகம் இருந்தும் இயக்குனர் ஏன் அதை சரியாக பயன்படுத்தவில்லை என்று தெரியவில்லை.
ஆபாசம் இல்லாத, சண்டைக் காட்சி எதுவும் இல்லாத நல்லதொரு காதல் படமாக இருந்தாலும், ஒரு சில இடங்களில் ஏற்படும் திரைக்கதை தொய்வு, படத்தை பார்ப்பதற்கு சற்று சலிப்பை கொடுத்து விடுகிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் இருக்கும் ட்விஸ்ட் ரசிக்க வைத்திருக்கிறது.
பாடல்கள் ஓகே ரகமாக இருந்தாலும், பின்னணி இசை படத்திற்கு சற்று பலமாக இருக்கிறது.
காட்சிகளை ரம்மியமாக கொடுத்ததில் ஒளிப்பதிவின் பங்கு அலப்பறியது. ஒவ்வொரு காட்சிக்குமான மெனக்கெடல் என்பது திரையில் நன்றாகவே பலனளித்துள்ளது.
மொத்தத்தில்,