• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

திரு.மாணிக்கம் – விமர்சனம்

by Tamil2daynews
December 26, 2024
in விமர்சனம்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

திரு.மாணிக்கம் – விமர்சனம் 

 

குடும்பப்படம் எடுப்பதில் வல்லவரான நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி அனன்யா நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் திரு. மாணிக்கம்.

மாணிக்கமாக வரும் சமுத்திரக்கனி. மனைவி, அன்பான இரு குழந்தைகள் என்று வாழ்ந்து வருகிறார். குமுளி பேருந்து நிலையத்தில் லாட்டரி டிக்கெட் கடை வைத்து நடத்துகிறார். அந்த கடையில் பாரதி ராஜா சில லாட்டரி டிக்கெட் வாங்குகிறார். கையில் பணம் இல்லாததால் அந்த லாட்டரி டிக்கெட்களை நாளை வந்து வாங்கி கொள்வதாக சொல்லி சென்று விடுகிறார். ஆனால் பிறகு பாரதி ராஜா கடைக்கு வரவே இல்லை. பாரதி ராஜா செலக்ட் செய்து வைத்த லாட்டரி டிக்கெட்க்கு இரண்டு கோடி பரிசு விழுகிறது. சமுத்திரக்கனி லாட்டரி டிக்கெட்டை இடுக்கியில் உள்ள பாரதி ராஜாவிடம் தர செல்கிறார். கனியின் மனைவியும் உறவினர்களும் பணம் கொடுத்து வாங்காத டிக்கெட் நமக்கு தான் சொந்தம். எனவே பரிசு பணமும் நமக்கு தான் வேண்டும் என்று கனியை தடுகிறார்கள். சமுத்திரக்கனி யார் பேச்சையும் கேட்காமல் லாட்டரி டிக்கெட் தர இடுக்கி நோக்கி பயணம் செய்கிறார். லாட்டரி டிக்கெட்டை உரிய நபரிடம் சேர்த்து மாணிக்கமாக இந்த மாணிக்கம் ஜொலித்தாரா என்பது இப்படத்தின் கதை.
Thiru Manickam release update: Samuthirakani's film to hit theatres on this date

படத்தின் முதல் பாதி பரபப்பான காட்சிகளுடன் வேகமாக நகர்கிறது. இரண்டாம் பாதி செண்டிமெண்ட், எமோஷனல், தத்துவம் என்று சென்று த்ரிலிங் அனுபவத்தை குறைத்து விடுகிறது. படம் பார்க்கும் போது பம்பர் படம் நமக்கு நினைவு வந்து விடக்கூடாது என்பதற்காக சமுத்திரக்கனிக்கு சிறு வயது போர்ஷன் ஒன்றை வைத்துள்ளார் டைரக்டர் என்று நினைக்க தோன்றுகிறது. இந்த போர்ஷினில் பாயாக நடிக்கும் நாசர் பாயின் நடிப்பு நன்றாக உள்ளது. சமுத்திரக்கனி வழக்கமான அட்வைஸ் செய்வதை குறைத்து கொண்டு நடிப்புக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு மாறுபட்ட சமுத்திரக்கனியை பார்க்க முடிகிறது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு அனன்யா கம்பேக் தந்துள்ளார். இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக, சராசரி மனைவியாக ஜொலிக்கிறார் அனன்யா. ஹீரோயினாக நடித்த காலங்களில் அனன்யாவின் திறமையை வெளிப்படுத்த படங்கள் வரவில்லை. இப்போது வந்திருக்கிறது. “சரியாக பயன் படுத்தி கொள்ளுங்கள் அனன்யா”.
Ananda Vikatan - 08 November 2023 - “ரத்தம், வயலன்ஸ், கத்தி... எதுவும் இல்லாமல் ஒரு படம்!” | director Nandha Periyasamy interview about Thiru Manickam movie - Vikatan

மலைப்பகுதியில் ஒளிப்பதிவு செய்வது என்றால் சுகுமார்க்கு அல்வா சாப்பிடுவது போல் இருக்கும் என்று தெரிகிறது. குமுளி மலைப்பகுதியில் கேமராவில் ஒரு ஓவியத்தை வரைந்து விட்டார். விஷால் சந்திரசேகர் இசை எமோஷனல் காட்சிகளில் மட்டுமே ஸ்கோர் செய்கறது.

மொத்தத்தில் குடும்பத்தினர் அனைவரும் ரசிக்கும் விதமாக படம் எடுக்கும் நந்தா பெரியசாமி இந்த முறையும் ஜெயித்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

மொத்தத்தில் இந்த

திரு.மாணிக்கம் இரத்தினமாணிக்கமாக ஜொலிக்கிறான்.
Previous Post

மழையில் நனைகிறேன்- விமர்சனம்

Next Post

‘கிச்சா சுதீப்’ நடித்த அதிரடி படம் MAX கன்னடத்தில் பிளாக்பஸ்டர் மற்றும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது!

Next Post

'கிச்சா சுதீப்' நடித்த அதிரடி படம் MAX கன்னடத்தில் பிளாக்பஸ்டர் மற்றும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது!

Popular News

  • 2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly) … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!

    2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly) … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும் ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “‘டோரதி’ படத்தில் என் கதாபாத்திரத்திற்கு கிடைத்து வரும் ரசிகர்களின் அன்பு எனக்கு மகிழ்ச்சியையும் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது”- நடிகர் முத்துக்குமார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • துபாயில் வெளியிடப்பட்ட ‘தி ரீல் ஃபைல்ஸ்’ சீசன் 4-ன் அதிகாரப்பூர்வ டிரெய்லர் மற்றும் இயக்குநர் ஜெனோபர் பாத்திமாவை பாராட்டிய சோஹைல் கான்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ”’டோரதி’ திரைப்படம் நான் எதிர்பார்த்திருந்த அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளது”- நடிகை ஜீவா சுப்பிரமணியம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly) … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!

2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly) … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!

October 17, 2026
ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும்  ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’  படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும் ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

October 17, 2026

“‘டோரதி’ படத்தில் என் கதாபாத்திரத்திற்கு கிடைத்து வரும் ரசிகர்களின் அன்பு எனக்கு மகிழ்ச்சியையும் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது”- நடிகர் முத்துக்குமார்!

October 17, 2026

துபாயில் வெளியிடப்பட்ட ‘தி ரீல் ஃபைல்ஸ்’ சீசன் 4-ன் அதிகாரப்பூர்வ டிரெய்லர் மற்றும் இயக்குநர் ஜெனோபர் பாத்திமாவை பாராட்டிய சோஹைல் கான்!

October 17, 2026

”’டோரதி’ திரைப்படம் நான் எதிர்பார்த்திருந்த அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளது”- நடிகை ஜீவா சுப்பிரமணியம்!

October 17, 2026

நடிகர் சூரியின் புதிய திரைப்படத்தை கிளாப் அடித்து தொடங்கி வைத்த நடிகர் சிவகார்த்திகேயன்!

October 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.