• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அக்டோபர் 10ல் வேட்டையன் தரிசனம்

by Tamil2daynews
August 20, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
அக்டோபர் 10ல் வேட்டையன் தரிசனம்

மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘வேட்டையன்'(தலைவர் 170) திரைப்படத்தின் பிரமாண்டமான வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது லைகா புரொடக்ஷன்ஸ்.இத்திரைப்படம் அக்டோபர் 10-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தனது படைப்புகளின் மூலம் சமூகம் சார்ந்த கதை சொல்லலுக்கு பெயர் போன புகழ்பெற்ற இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ள இந்தப் படம், அவருக்கு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் முதல்முறையாக இணைந்து பணிபுரியும் பெருமைமிகு படைப்பாக அமைகிறது.

இந்த பான்-இந்திய படமானது லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ரஜினிகாந்திற்கு இடையிலான வெற்றிகரமான கூட்டணியில்  2.0,தர்பார்,சமீபத்தில் வெளியான  லால் சலாம் போன்ற பிளாக்பஸ்டர்களை படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக மீண்டும் இணையும் படமாகும். அதே போல இன்னொரு அதிரடியான கூட்டணியான ரஜினிகாந்த் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திர இருவரும்  பேட்ட, தர்பார், ஜெயிலர் ஆகிய திரைப்படங்களில் இணைந்து பணியாற்றிய பிறகு நான்காவது முறையாக மீண்டும் இணைந்துள்ளனர்.

தயாரிப்பாளர் சுபாஸ்கரன் பிரமிக்க வைக்கும் நட்சத்திர நடிகர்களை ஒன்றிணைத்திருப்பது, மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் ‘பாலிவுட் மெகாஸ்டார்’ அமிதாப் பச்சன் உட்பட ஒரு தனித்துவமான நட்சத்திரப் பட்டாளத்தை கொண்டுள்ளது. அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் அந்தா கனூன், கெராஃப்தார் மற்றும் ஹம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக ரஜினிகாந்துடன்  திரையைப் பகிர்ந்து கொள்கிறார்கள். மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோரும் சூப்பர் ஸ்டாருடன் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர் ஜி.கே.எம். தமிழ் குமரனின் நிர்வாகத்தின் கீழ் தயாரிப்பிற்கு பிந்தைய பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், ‘வேட்டையன்’ அதன் பிரம்மாண்டமான மற்றும் அழுத்தமான கதை சொல்லல் மூலம் ரசிகர்களை கவர்ந்திழுக்கும். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் பான்-இந்தியா சினிமா அனுபவத்திற்கான உத்திரவாதம் அளிக்கிறது.

நடிகர்கள் :-

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி,ரோகிணி,அபிராமி,ரித்திகா சிங், துஷாரா விஜயன்.

படக்கழு :-
தயாரிப்பு : லைகா புரொடக்ஷன்ஸ்
தயாரிப்பாளர் : சுபாஸ்கரன்
இயக்குனர் : த.செ. ஞானவேல்
இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
ஒளிப்பதிவாளர் : எஸ். ஆர். கதிர்
எடிட்டர் : பிலோமின் ராஜ்
தயாரிப்பு வடிவமைப்பு : கே கதிர்
ஸ்டண்ட் இயக்குனர் : அன்பறிவ்
ஒப்பனை : பானு, பட்டினம் ரஷீத்
ஆடை வடிவமைப்பாளர் :  அனு வர்தன்
லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை நிர்வாகி :  ஜி. கே. எம். தமிழ் குமாரன்
மக்கள் தொடர்பு : ரியாஸ் K அஹ்மத்
Previous Post

‘சூரியின் ‘கருடன்’ பட வெற்றி கூட்டணியுடன் இணையும் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ்

Next Post

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

Next Post

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

Popular News

  • நடிகர் நெப்போலியன் நடிக்கும் ‘அமெரிக்கா ஆவி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் கருணாஸ் நடிப்பில் வெளியான, ‘என்ன விலை’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் ஊடகங்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் பாராட்டிய ஃப்ளாக் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரேவதி இயக்கத்தில் நடிகர்கள் பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குட் வொய்ஃப்’ சீரிஸின் டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தங்கலான்’ – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.