• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இந்த கிறிஸ்துமஸ் நன்நாளில் அன்பையும் நட்பையும் கொண்டாடும் ஒரு அற்புதத்தை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி!!

by Tamil2daynews
November 3, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இந்த கிறிஸ்துமஸ் நன்நாளில் அன்பையும் நட்பையும் கொண்டாடும் ஒரு அற்புதத்தை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி!!

 

‘டங்கி  டிராப் 1’  ஷாருக்கின் பிறந்தநாளான இன்று வெளியிடப்பட்டது, இது அனைத்து ரசிகர்களுக்கும் விருந்தாக அமைந்துள்ளது !!

இந்தியத் திரையுலகின்  தலைசிறந்த கதைசொல்லியாகப் போற்றப்படும் ராஜ்குமார் ஹிரானி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட பல அற்புதமான திரைப்படங்களை  வழங்கியுள்ளார், தற்போது ரசிகர்களின் மனதை இலகுவாக்கும் மற்றுமொரு அற்புதமான நகைச்சுவை திரைப்படைப்பான டங்கி  மூலம் பார்வையாளர்களுக்கு விருந்தளிக்க உள்ளார்.

டங்கி  திரைப்படம், இந்த தலைமுறையில் ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும்,  இரண்டு மிகப்பெரும் திரைக் கலைஞர்களான SRK மற்றும் ராஜு ஹிரானி  ஆகிய இருவரும் இணையும் திரைப்படமாகும்!.  நமக்குள் அன்பான  நினைவுகளைத் தூண்டி, சினிமாவின் இனிமையையும், அதைக் கண்டுகளிக்கும் ஏக்கத்தையும் நம்முள் திரும்பக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இப்படம்.

இன்று வெளியிடப்பட்ட ‘டங்கி  டிராப் 1″,  ராஜ்குமார் ஹிரானி அமைத்திருக்கும் அற்புதமான உலகத்தைப் பற்றிய ஒரு சிறு அறிமுகப்பார்வையை நமக்குத் தருகிறது, இது இதயம் வருடம் ஒரு அழகான நான்கு நண்பர்களின் நட்பின் கதை. நிஜ வாழ்க்கை அனுபவங்களிலிருந்து உருவாக்கப்பட்ட இக்கதை, ஒரு கனவை நனவாக்க அவர்கள் மேற்கொள்ளும் அட்வென்சரான பயணத்தை, ரசிகர்கள் பிரமிக்கும் வகையில், காதல், அன்பு, நட்பு கலந்து சொல்லும் திரைப்படம் தான்  டங்கி.  இப்படம்  உங்கள் இதயத்தை மயிலிறகால் வருடும் ஒரு அழகான படைப்பாக இருக்கும்.

இந்த வீடியோ ஷாருக்கானுடன் இணைந்து நடித்துள்ள பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட மிகவும் திறமையான  நடிகர்களின்,  வண்ணமயமான கதாபாத்திரங்களுடன், உங்களை ஒரு ரோலர்-கோஸ்டரில் பரபரப்பான பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது.

மனதை மயக்கும் ஒரு தனித்துவமான கதையுடன், திரையில் சாகசமிக்க ஒரு பயணத்தை, இந்த கிறிஸ்துமஸில் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்காக வழங்கவுள்ளது!

இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து  தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ள, “டங்கி” திரைப்படம்,  இந்த டிசம்பர் 2023 இல் வெளியிடப்பட உள்ளது.

https://www.youtube.com/watch?v=LOzucm1jbzs&ab_channel=RedChilliesEntertainment
Previous Post

Dwarka Productions தயாரிப்பில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் காமெடி திரில்லர் பூஜையுடன் இனிதே துவங்கியது !!

Next Post

நவ-12 காலை 7 மணியிலிருந்து டைகர் 3 காட்சியை யஷ்ராஜ் பிலிம்ஸ் திரையிடுகிறது ; நவ-5ல் முன்பதிவு துவக்கம்

Next Post

நவ-12 காலை 7 மணியிலிருந்து டைகர் 3 காட்சியை யஷ்ராஜ் பிலிம்ஸ் திரையிடுகிறது ; நவ-5ல் முன்பதிவு துவக்கம்

Popular News

  • ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் 47 ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணையும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ‘KHxRK’

    0 shares
    Share 0 Tweet 0
  • மாலா மணியன் தயாரிப்பில் குட்டி ரேவதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிறகு’ ; உலக மகளிர் தினத்தில் சிறப்பு காட்சி திரையிடல்

    0 shares
    Share 0 Tweet 0
  • மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ராஜசேகர் தயாரிப்பில், விமல் – நட்டி நட்ராஜ் நடித்திருக்கும் ‘வடம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • மகரம் திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ராக்கிங் ஸ்டார் ‘ யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’ ( Toxic A Fairy Tale for Grown Ups) படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘தபாஹி ‘ மார்ச் 2 ஆம் தேதி வெளியாகிறது

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“தொடக்கம்” திரைப்படம் மார்ச் 2 அன்று சிறப்புபூஜையுடன் தொடக்கம்!

March 3, 2026

நடிகர் ரியோ ராஜ் தனது முதல் தயாரிப்பு நிறுவனமான River Route Studios-ஐ தொடங்கியுள்ளார்.

March 3, 2026

சூர்யா நடிக்கும் #சூர்யா46 படத்திற்கு ‘விஸ்வநாத் & சன்ஸ்’ – என தலைப்பிடப்பட்டுள்ளது !!

March 3, 2026

ஓ பட்டர்ஃப்ளை திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

March 3, 2026

‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் ‘அன்பே டயானா’ டைட்டில் டீசர் வெளியீடு… ரசிகர்களின் அமோக வரவேற்பு!

March 3, 2026

இயக்குனர் விஜய் – இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியின் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்தின் முன் வெளியீட்டு விழா

March 3, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.