• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘கட்டில்’ – விமர்சனம்

by Tamil2daynews
December 10, 2023
in விமர்சனம்
0
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
‘கட்டில்’ – விமர்சனம்
மூன்று தலைமுறையாக வசித்து வரும் வீட்டை விற்றுவிட்டு கிடைக்கும் காசு பணத்தைக் கொண்டு, வியாபாரம் செய்ய வேண்டும் என்று யோசிக்கிறார்கள் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்ட நாயகனின் அண்ணன்கள் மற்றும் அக்காமார். நாயகன் தன் தாய், தன் மனைவி மற்றும் மகனோடு அதே வீட்டில் வாழ்ந்து கொண்டு ஒரு மில்லில் வேலை செய்து வருகிறான். நாயகனும் அவன் மனைவியும், நாயகனின் தாயும் அந்த வீட்டை விற்கும் முயற்சியை கைவிடச் செய்ய முயற்சி செய்கிறார்கள். அது முடியாமல் போகும்பட்சத்தில், தங்கள் பரம்பரையில் ஒவ்வொரு குழந்தையும் பிறந்து தவழ்ந்த பூர்விக கட்டிலையாவது காப்பாற்ற முனைகிறார்கள். அதை அவர்களால் காப்பாற்ற முடிந்ததா..? என்பதே “கட்டில்” திரைப்படம்.
கட்டில் விமர்சனம்: பாரம்பரிய கட்டிலின் வயது 250! படத்தின் கதை, ஆக்கத்துக்கு வயது என்னவோ? | Kattil Movie Review: An emotional tale let down by poor making - Vikatan

ஒரு இயல்பான யதார்த்தமான கதை. அந்த கதையின் போக்கில் ஒரு சிக்கல், அந்த சிக்கலுக்கு தீர்வு காணும் க்ளைமாக்ஸ் என எளிய முறையில் பயணிக்கும் திரைக்கதையை எடுத்துக் கொண்டு, அதில் இவ்வளவு பெரிய ஓட்டையை வைத்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை. வீட்டை காப்பாற்ற முடியாது என்பது தெரிந்துவிடுகிறது. கட்டிலையாவது காப்பாற்றுவோம் என்று களத்தில் இறங்குகிறார்கள். வீட்டை வாங்க இருக்கும் முதலாளி கட்டிலுக்கும் பெரும் தொகை கொடுக்கிறேன். எனக்கே விற்றுவிடுங்கள் என்று ஆசை காட்டுகிறான். நாயகனின் சகோதர சகோதரிகள் யோசிக்க, நாயகன் புத்திசாலித்தனமாக தனக்கு வரும் பங்கு காசில் கட்டிலுக்கான விலையை பிடித்தம் செய்து கொள்ளுங்கள் என்று சொல்ல அந்தப் பிரச்சனையும் தீர்கிறது.  பிறகு ஒரு சிக்கல் புதிதாக வருகிறது.

அது என்ன சிக்கல்..?வீட்டை காலி செய்தபின்னர் நாயகன் குடிபோக இருக்கும் புதிய வீடு கட்டிலை வைக்கும் அளவிற்கு பெரியதாக இருக்க வேண்டும்.  அவ்வளவு பெரிய கட்டிலை வைப்பதற்கு ஏற்றார்  போன்ற வீடு கிடைக்க வேண்டும்…?  நாயகனும் தான் பார்க்கும் புது வீட்டின் வாசல்களை எல்லாம் டேப் கொண்டு அளந்து பார்க்கிறான். கட்டிலை உள்ளே கொண்டு வர முடியுமா…? முடியாதா…? என்று. இந்தக் காட்சியிலும் இந்தச் சிக்கலிலும் தான் ஒட்டுமொத்த படமும் ஒன்றும் இல்லாமல் போய்விடுகிறது.கட்டில் - திரைப்பட விமர்சனம்

தேசிய விருது பெற்ற எடிட்டர் லெனின் இப்படத்திற்கு எடிட்டிங் செய்திருப்பதோடு, கதை திரைக்கதை மற்றும் வசனத்தையும் எழுதி இருக்கிறார்.  இயக்கத்தை மட்டும் இ.வி.கணேஷ்பாபு மேற்கொண்டிருக்கிறார்.

கதையாக மிக எளிமையான இயல்பான கதை. அதை கையாண்ட விதத்திலும், திரைக்கதை அமைத்த விதத்திலும் அந்த இயல்புத்தன்மையோ யதார்த்தமோ இல்லாதது பெருங்குறை. மையக்கதையைவிட கிளைக்கதை சிறப்பாக இருக்கிறது.  மொத்த கதையும் கர்ப்பிணிப் பெண் வீடு காலி செய்து போகக்கூடாது என்கின்ற மூடத்தனத்தை பறைசாற்றத்தான் எடுக்கப்பட்டதோ என்கின்ற கேள்வியும் மேல் எழுகிறது.

மொத்தத்தில் “கட்டில்”  வெளிப்பார்வைக்கு பாரம்பரியம் மற்றும் பூர்வீகம் நிறைந்த  படைப்பாக தெரிந்தாலும் நம்மோடு உறவாடாத, நம் உணர்வு சமநிலைக்கோ அறிவு சமநிலைக்கோ உதவாத ஒரு படைப்பாகவே குறுகிவிடுகிறது.
Tags: E.V.GaneshBabuIndira SowntherrajanKattil Movie ReviewKattil ReviewKeetha KailasamLeninMaster NithishSemmalar annamSrikanth DevaSrushti DongeVidharthWide Angle Raviஇந்திரா சௌந்திரராஜன்இவி.கணேஷ்பாபுஎடிட்டர் லெனின்கட்டில்கட்டில் சினிமா விமர்சனம்கட்டில் திரை விமர்சனம்கட்டில் விமர்சனம்கீதா கைலாசம்சிருஷ்டி டாங்கேசெம்மலர் அன்னம்மாஸ்டர் நிதிஷ்லெனின்விதார்த்வைட் ஆங்கிள் ரவிஸ்ரீகாந்த் தேவா
Previous Post

‘அவள் பெயர் ரஜினி’ – விமர்சனம்

Next Post

கான்ஜுரிங் கண்ணப்பன் – விமர்சனம்

Next Post

கான்ஜுரிங் கண்ணப்பன் - விமர்சனம்

Popular News

  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கட்டா குஸ்தி 2’ வெற்றியை கொண்டாடிய படக்குழு… 50வது நாள் நன்றி அறிவிப்பு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • “எனது தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியடையச் செய்வதே எனது மிகப்பெரிய இலக்கு”…‘மொத ராத்திரி’ படத்தில் இயக்குநராக அறிமுகமாவது குறித்து ராஜா கருப்பசாமி!

    0 shares
    Share 0 Tweet 0
  • செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.