• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“காந்தாரா” படத்தின் பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில், தபால் துறை அஞ்சல் அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளது!!

by Tamil2daynews
September 24, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
“காந்தாரா”  படத்தின் பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில்,  தபால் துறை அஞ்சல் அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளது!!

இந்திய தபால் துறை மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ் இணைந்து காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு கவர், பட அஞ்சல் அட்டைகள் & கேன்சலேஷன் ஸ்டாம்ப் வெளியிட்டு  கௌரவித்துள்ளன!!

இந்தியா தபால்துறை, கர்நாடக அஞ்சல் வட்டாரம், ஹொம்பாலே பிலிம்ஸ் இணைந்து, கர்நாடகாவின் செழுமையான பாரம்பரிய கலாச்சாரத்தை கொண்டாடும் வகையில், ஒரு சிறப்பு கவர், இரண்டு பட அஞ்சல் அட்டைகள் மற்றும் கேன்சலேஷன் ஸ்டாம்பை வெளியிட்டுள்ளது. தேசிய விருது பெற்ற காந்தாரா திரைப்படத்தில் வலிமையாக வெளிப்பட்ட புனிதமான பூதகோலா மரபை,  இந்த வெளியீடு சிறப்பித்துள்ளது.

செப்டம்பர் 22-ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஊடகத்தினரும் கர்நாடக அஞ்சல் வட்டார பிரதிநிதிகளும் பங்கேற்றனர். காந்தாரா படத்தின் எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டி, கர்நாடக அஞ்சல் வட்டாரத்தின் இயக்குநர் (முகாம்) ஸ்ரீ சந்தேஷ் மகாதேவப்பா, பெங்களூரு GPO முதன்மை அஞ்சல் மாஸ்டர் ஸ்ரீ H.M. மஞ்சேஷா, ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பாளர் விஜய் கிராகந்தூர் ஆகியோர் இணைந்து இந்த சிறப்பு தபால் அட்டைகளை வெளியிட்டனர்.
பூதகோலா காட்சியுடன் வடிவமைக்கப்பட்ட கேன்சலேஷன் ஸ்டாம்ப், சேகரிப்பதற்குரிய அரிய வெளியீடாகவும், கர்நாடகாவின் வாழும் மரபுகளை பிரதிபலிக்கும் பெருமையான நினைவுச் சின்னமாகவும் அமைந்துள்ளது.

இந்நிகழ்வில் பேசிய ரிஷப் ஷெட்டி, “காந்தாரா எங்கள் மரபின் வேர்களையும் வழிபாடுகளையும் கொண்டாடும் விதமாக உருவாக்கப்பட்டது. இந்திய தபால் துறை இந்த பயணத்தை சிறப்பு கவர் மற்றும் அஞ்சல் அட்டைகள் மூலம் கௌரப்படுத்தியுள்ளது என்பது பெருமை. இது படத்திற்கான அங்கீகாரம் மட்டுமல்ல, நம் மண்ணின்  கலாச்சாரம் மற்றும் மக்களுக்கான அங்கீகாரமும் ஆகும்” என்றார்.

சிறப்பு அங்கீகாரமாக, “காயகவே கைலாச” என்ற சொற்றொடரை ரிஷப் ஷெட்டி ஒரு அஞ்சல் அட்டையில் எழுதி கையெழுத்திட்டார். உழைப்பின் புனிதத்தையும் பக்தியையும் பிரதிபலிக்கும் இந்த நிலையான தத்துவம் காந்தாரா படத்தின் கதையிலும் பிரதிபலிக்கிறது.
தயாரிப்பாளர் விஜய் கிராகந்தூர், “இந்திய தபால் துறையில் இந்த அங்கீகாரம் படத்திற்கும் மட்டுமல்ல, கர்நாடகாவின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்திற்கும் ஒரு பெரிய கௌரவம். இது எங்களுக்கெல்லாம் மிகவும் பெருமையான தருணம். இப்படியான முயற்சிகள் எங்கள் பாரம்பரியத்தைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல உதவும். காந்தாரா எங்கள் வேர்களை இவ்வளவு பெருமைக்குரிய மேடையில் வெளிப்படுத்தும் ஊடகமாக மாறியது எங்களை மிகவும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது” என்றார்.

சிறப்பு கவர், அஞ்சல் அட்டைகள் மற்றும் கேன்சலேஷன் ஸ்டாம்ப் ஆகியவை, மனிதன், இயற்கை மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றின் ஆழ்ந்த ஆன்மீக இணைப்பை வெளிப்படுத்திய காந்தாரா படத்திற்கான ஒரு அஞ்சலியாகும். இந்த முயற்சியின் மூலம், இந்தியா தபால் துறை மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ், கர்நாடகாவின் பாரம்பரியத்தை நிலைநிறுத்தவும், ஒற்றுமை, நம்பிக்கை, கலாச்சார மரியாதை போன்ற காலத்தால் அழியாத மதிப்புகளை மக்களிடம்  நினைவூட்டவும் முன்னெடுத்து சிறப்பித்துள்ளன.

இந்த வெளியீடு, இந்தியா தபால் துறை பாரம்பரியத்தையும், காந்தாரா படத்தின் சினிமா பாரம்பரியத்தையும் இணைக்கும் பெருமையான தருணமாகும். கலாச்சாரத்தையும் சமூகத்தையும் இணைக்கும் காலத்தால் அழிக்க முடியாத நம் வேர்களை கௌரவிக்கும் அடையாள முயற்சியாக இது திகழ்கிறது.

Previous Post

ரஜினி சாரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றேன் – பிரசாத் லோகேஸ்வரன் !!

Next Post

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் த்ரில்லர் சீரிஸ் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்- திரையில் நீங்கள் கேமை தொடங்கலாம் ஆனால் ஒருபோதும் அது முடிவதில்லை’ டிரெய்லர் வெளியாகியுள்ளது!

Next Post

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் த்ரில்லர் சீரிஸ் 'தி கேம்: யூ நெவர் பிளே அலோன்- திரையில் நீங்கள் கேமை தொடங்கலாம் ஆனால் ஒருபோதும் அது முடிவதில்லை' டிரெய்லர் வெளியாகியுள்ளது!

Popular News

  • பேசத் தயங்கும் விஷயங்களின் மவுனத்தை உடைக்கும் மலேசிய தமிழ் க்ரைம் த்ரில்லர் ‘இரும்புத் தோட்டம் ; விரைவில் தமிழகமெங்கும் ரிலீஸ்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல் மற்றும் உறவுகளின் உணர்வுப்பூர்வமான கொண்டாட்டமாக வெளியான ‘ஹைக்கூ’ திரைப்படம் நவம்பர் 20 அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • டி பி சி (TPC) ட்ரீம் ஹவுஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டத் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், விமல் நடிக்கும் காமெடி-ஆக்‌ஷன் -ஃபேண்டஸி திரைப்படம் ‘நவோரியா’ டிசம்பர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • “கனவுகள், விடாமுயற்சி, சொந்த ஊரை விட்டு வெளியேறி வாழும் தமிழ் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என அனைத்தையும் பேசும் கதைதான் ‘பீட்சா பாய்ஸ்’”…இயக்குநர் சேகர் கேசவ் சிரின்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சத்தியவான் சாவித்திரி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

November 22, 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

November 22, 2026

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

November 22, 2026

‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

November 22, 2026

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், Vi. ஆனந்தின் கற்பனையில், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 22, 2026

ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) – விமர்சனம்

November 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.