தமிழ் சினிமாவில் பல கிரைம் திரில்லர் படங்கள் வெளிவந்துள்ளது, அந்த வகையில் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் ஆண்டனி, லியோ ஜான் பால் இயக்கத்தில் மீண்டும் ஒரு வித்தியாசமான களத்தில் மார்கன் என்ற படத்தில் களம் இறங்கியுள்ளார்,
போலிஸாக இருக்கும் விஜய் ஆண்டனி, படத்தின் ஆரம்பத்திலேயே விஷ ஊசியால் பாதிப்பட்டு காவல்துறையில் இருந்து ஓய்வில் இருக்கிறார். அந்த நேரம் விஜய் ஆண்டனிக்கு ஆனது போல் ஒரு பெண்ணுக்கு விஷ ஊசி போட்டு கருப்பாக்கி கொலை செய்கின்றனர்.

பிறகு தமிழறிவு உதவியுடன் அந்த கொலைக்காரனை விஜய் ஆண்டனி கண்டுப்பிடித்தாரா என்பதே மீதிக்கதை.
விஜய் ஆண்டனி எப்போதும் திரில்லர், வித்தியாசமான கதைக்களம் என்றால் அல்வா சாப்பிடுவது போல அவருக்கு, அப்படித்தான் காவல்துறை அதிகாரியாக படம் முழுவதும் ஒரு கேஸை கண்டுப்பிடிக்க அவர் போராடுவது என நன்றாகவே நடித்துள்ளார்.
அதிலும் சித்தர் சக்தி கிடைத்து தண்ணீரில் மூழ்கி, நடக்காத ஒரு விஷயத்தை தன் ஆன்மா மூலம் தமிழறிவு பார்ப்பது என ஹாலிவுட் மைனாரிட்டி ரிப்போர்ட் அளவிற்கு ஒரு கான்செப்ட் வைத்துள்ளனர்.
படத்தின் மிகப்பெரும் பலம் ஆரம்பம் முதல் முடிவு வரை விசாரணை நோக்கியே படம் செல்கிறது, ப்ளாஸ் பேக் என்று பெரிய காட்சிகள் எல்லாம் இல்லை, அதே நேரத்தில் கிளைமேக்ஸ் இவர் தான் இந்த கொலையை செய்தார் என்று சொல்லுமிடம், மிக மிக அவசரமாக முடித்த பீல்.
எது எப்படியோ ஒரு முக்கியமான மெசெஜ் உடன், அந்த மெசெஜ்க்கு ஏற்ற திரைக்கதையை உண்டாக்கியது சிறப்பு, இசை, ஒளிப்பதிவு அனைத்தும் நன்றாகவே உள்ளது.