‘சாலா’ விமர்சனம்
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு அருமையான கருத்தை சொல்லும் ஒரு நல்ல படம் என்ற வலிமையோடு இந்த விமர்சனத்தை பார்க்கலாம்.
ராயபுரம் பகுதியில் பிரபலமான டாஸ்மாக் பார் ஒன்றை யார் ஏலம் எடுப்பது என்பதில் இரண்டு ரவுடி கூட்டத்துக்கு இடையே போட்டி எழுகிறது. ஏலம் நடக்கும் இடத்தில் இரு குரூப்புக்கும் மோதல் நடப்பதால் ஏலம் தள்ளி வைக்கப் படுகிறது. அந்த பாரை யார் ஏலத்துக்கு எடுப்பது என்ற போட்டி இரண்டு ரவுடி கூட்டத்துக்கும் ஒரு சவாலாக மாறிவிடுகிறது. இதற்கான வழக்கு வருட கணக்கில் கோர்ட்டில் நடக்கிறது அந்த தீர்ப்பு வெளியான பிறகு இரண்டு கோஷ்டிக்கும் இடையில் மீண்டும் நடக்கும் மோதல் என்ன? இதற்கிடையில் டாஸ்மாக்கை எதிர்த்து போராடும். ஒரு ஆசிரியையின் போராட்டம் என்னவாகிறது என்பதே கிளைமாக்ஸ்.
இரண்டு ரவுடி கூட்டத்துக்கு இடையே நடக்கும் மோதல் கதைகள் ஏற்கனவே ஆயிரக் கணக்கில் வந்திருக்கின்றன ஆனால் அதில் ஒரு கதையாக இதுவும் சென்றுவிடாமல் சற்று வித்தியாசமாக கையாண்டிருக் கிறார் இயக்குனர் மணிப்பால்.
கொலை செய்வது தவறு என்பதை படத்தில் கொலை செய்து காட்டித் தான் அதற்கான நியாயம் நீதிமன்றம் மூலம். கற்பிக்கப்படுகி றது. அதே பார்முலாவில் தான் குடிப்பது தவறு என்பதை படத்தின் 99 சதவீத காட்சிகளில் குடி குடி என்று குடிகார காட்சியை அமைத்துவிட்டு கிளைமாக்கில் அதன் பாதிப்பு என்ன என்பதை விளக்கி இருக்கிறார்கள். ஆனால் அதை உறுதிபட சென்டிமென் ட்டாக பதிய வைத்திருப்பது அப்ளாஸ். பெறுகிறது
சந்தானம் நடித்த வடக்குப்பட்டி ராமசாமி படத்தை தயாரித்த தீரன் இப்படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகி இருக்கிறார். ஆஜானபாகு தோற்றம் கட்டுமஸ்தான உடற்கட்டு , ஆக்சன், டான்ஸ் என்று அதிரடி காட்டி இருக்கிறார்.
தனது டாஸ்மாக் கடையை மூடுவேன் என்று சபதம் செய்யும் டீச்சர் ரேஷ்மா மீது காதல் கொண்டாலும் அந்த காதலை வெளிப்படுத்த போதிய முக பாவத்தை தீரன் தர முடியாமல் திணறி இருக்கிறார். ஆக்ஷன் கை கொடுக்கும் அளவுக்கு காதல் கை கொடுக்கவில்லை.
அருள்தாஸ், சார்லஸ் வினோத் இருவரும் ரவுடி கூட்ட தலைவர்க ளாக நடித்திருக்கின்றனர். இரண்டு ரவுடி கூட்டமும் நீயா நானா என்று மோதிக் கொள்வதும், மதுபான பாரை ஏலம் எடுக்க சார்லஸ் ஒரு தந்திரம் செய்தால் அவரை மிஞ்சும் வகையில் தீரன் இன்னொரு ஆப்பு வைத்து சார்லசை திணறடிப்பதும் அசத்தல்.
காமெடியன் இல்லாத குறையை ஸ்ரீநாத் தீர்த்து வைத்திருக்கிறார்.போலீஸ் அதிகாரி சம்பத் ராம, ரவுடிக்கு விசுவாசமாக இருப்பதும் பின்னர் அந்த ரவுடியையே சட்டை பிடித்து இழுத்துச் செல்வது என்று அசல் போலீசாக மாறியிருக்கிறார்.டிஜி விஷ்வபிரசாத் தயாரித்திருக்கிறார்.சொல்ல வந்த கருத்தை கமர்சியலுடன் சென்டிமென்ட் டையும் குழைத்து சொல்லி இருக்கிறார் இயக்குனர் எஸ் டி மணிபால்.இசையும் ஒளிப்பதிவும் ஓகே ரகம்.படத்தின் சண்டைக் காட்சிகளில் அனல் பொறி பறக்கின்றது. மொத்தத்தில் இந்த சாலா உன்னத கருத்தை உலகெங்கும் சொல்கிறது. நிச்சயம் பார்க்கலாம்.