‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் & விக்ரம் ரெட்டியின் வி மெகா பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நிகில் சித்தார்த்தா நடிப்பில், ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ‘தி இந்தியா ஹவுஸ்’ படத்தின் தொடக்க விழா ஹம்பியில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.
இதில் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனம் தற்போது ‘தி டெல்லி ஃபைல்ஸ்’ எனும் படத்தையும் தயாரித்து வருகிறது. இவர்களுடன் இளமையான மற்றும் திறமையான நட்சத்திர நடிகரான நிகில் சித்தார்த்தா இணைந்திருக்கிறார். இவர் ஏற்கனவே ‘கார்த்திகேயா 2’ படத்திற்காக தொலைநோக்கு தயாரிப்பாளர் என புகழப்படும் அபிஷேக் அகர்வாலுடன் பணியாற்றியிருக்கிறார். தற்போது உலக அளவில் அறியப்பட்ட.. . இந்தியாவை பெருமைப்படுத்திய ராம்சரணுடன் இணைந்திருக்கிறார்.
சர்வதேச தரத்துடன் தயாராகும் ‘தி இந்தியா ஹவுஸ்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியதை தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். காதல் மற்றும் புரட்சியின் மூலத்தை ஆராயும் இந்த 1905 ஆண்டு காலகட்டத்திய படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஹம்பியில் உள்ள விருபாக்ஷா ஆலயத்தில் படக் குழுவினர் முன்னிலையில் பிரம்மாண்டமான முறையில் பூஜையுடன் தொடங்கியது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.
இந்த திரைப்படத்தில் அனுபவம் வாய்ந்த தொழில் நுட்ப வல்லுநர்கள் ஒன்றிணைந்து பணியாற்றுகிறார்கள். கேமரோன் பிரைசன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு கலை இயக்குநராகவும், தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் விஷால் அபானி பணியாற்றுகிறார்.
இந்த காவிய கதையின் கூடுதல் தகவல்களுக்காக ஆர்வத்துடன் காத்திருங்கள்.
நடிகர்கள் : நிகில் சித்தார்த்தா, சாயீ மஞ்சரேக்கர் அனுபம் கேர் மற்றும் பலர்.









