• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கதாநாயகனான ‘பிக்பாஸ்’ ராஜீ !

by Tamil2daynews
July 4, 2024
in சினிமா செய்திகள்
0
கதாநாயகனான ‘பிக்பாஸ்’ ராஜீ !
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கதாநாயகனான ‘பிக்பாஸ்’ ராஜீ !

 

இப்படத்தை Rain Of Arrows Entertainment சார்பில் சுரேஷ் சுப்ரமணியன் தயாரிக்கிறார். எண்ணித்துணிக’ படத்தை அடுத்து  இரண்டாவது படமாக இப்படத்தை தயாரிக்கிறார்.

ராஜீ நாயகனாக அறிமுகமாகும் இப்படத்தை ராகவ் மிர்தாத் இயக்குகிறார்.இவர் ஏற்கனவே ‘சைஸ் ஜீரோ’ படத்திற்கு வசனமும், தேசியவிருது வென்ற ‘பாரம்’ படத்தில்  திரைக்கதை மற்றும் வசனமும் எழுதி இருக்கிறார்.  ‘காலங்களில் அவள் வசந்தம்’ படம் மூலம் இயக்குநராக  அறிமுகமான இவர் இயக்கும் இரண்டாவது படம் இது.

பிக்பாஸ் புகழ் ராஜூ, ஆதியா பிரசாத் மற்றும் பவ்யா திரிகா நடிப்பில் இன்றைய Gen Z தலைமுறை ரிலேஷன்ஷிப்பை நகைச்சுவை ததும்பச் சொல்லும், அழகான டிராமாவாக உருவாகி வரும் திரைப்படம் ”பன் பட்டர் ஜாம்”. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இறந்தகால வலிகளின் சுமைகளுக்கும், எதிர்காலத்தைப் பற்றிய பயங்களுக்கும் நடுவே ஊசலாடாமல், நிதானமாக நின்று நிகழ்காலத்தை புன்னகையோடு எதிர்கொள்ள கற்றுக்கொள்ளும் Gen Z இளைஞர்களைப் பற்றிய கதைதான் பன் பட்டர் ஜாம்.

ஒருவனை சுற்றி எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், அந்தந்த கணத்தை முழுமையாக வாழப் பழகினால், கொண்டாட்டங்களுக்கு குறைவில்லை என்கிற பாசிட்டிவிவான கருத்தை பரபரப்பாகவும், முழுக்க முழுக்க நகைச்சுவை ததும்பச் சொல்லும் வகையிலும், இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் பீல் குட் ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படத்தை ராகவ் மிர்தாத் உருவாக்கியுள்ளார். முக்கியமாக சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி ஜோடி அதகளப்படுத்தியுள்ளார்கள். அதேபோல் சார்லியின் கதாப்பாத்திரம் அவரின் அடுத்த மைல் கல்லாக இப்படம் இருக்கும். இவர்களுடன் மைக்கேல் தங்கதுரை மற்றும்  V.J பப்பு முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது.வரும் ஜூலை 8 ஆம் தேதி இப்படத்தின் முதல் பார்வை வெளி வருகிறது.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

தயாரிப்பு நிறுவனம் :
Rain Of Arrows Entertainment
எழுத்து , இயக்கம் : ராகவ் மிர்தாத்
இசை:  நிவாஸ் K பிரசன்னா
ஒளிப்பதிவு : பாபு குமார் IE
எடிட்டிங்: ஜான் ஆபிரகாம்
கலை இயக்குநர் : ஸ்ரீ சசிகுமார்
பாடல்கள்: கார்த்திக் நேதா, உமா தேவி, மோகன் ராஜா, சரஸ்வதி மேனன்
நடனம்: பாபி
நிர்வாக தயாரிப்பு  : M.J.பாரதி
மக்கள் தொடர்பு : ஜான்சன்
Previous Post

டெட்பூல் & வால்வரின் புதிய புரோமோ வால்வரினை வெறித்தனமான ஆக்ஷனில் காட்சிப்படுத்துகிறது!

Next Post

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் & விக்ரம் ரெட்டியின் வி மெகா பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நிகில் சித்தார்த்தா நடிப்பில், ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ‘தி இந்தியா ஹவுஸ்’ படத்தின் தொடக்க விழா ஹம்பியில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.

Next Post

'குளோபல் ஸ்டார்' ராம்சரண் & விக்ரம் ரெட்டியின் வி மெகா பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நிகில் சித்தார்த்தா நடிப்பில், ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா ஹம்பியில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.

Popular News

  • விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

    0 shares
    Share 0 Tweet 0
  • மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் ‘மாகாளி’ – பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026

நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

September 5, 2026

‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

September 5, 2026

பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

September 5, 2026

நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.