• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ப்ரைம் வீடியோவின் பிரைம் வீடியோ டைரக்ட்டில் வெளியாகும் சிபிராஜின் ‘மாயோன்’

by Tamil2daynews
August 11, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ப்ரைம் வீடியோவின் பிரைம் வீடியோ டைரக்ட்டில் வெளியாகும் சிபிராஜின் ‘மாயோன்’

டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் மற்றும் அருண்மொழி மாணிக்கம் வழங்கும் சிபிராஜ் நடித்த ‘மாயோன்’ திரைப்படம் தற்போது உங்களுக்கு பிடித்த டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கிறது.

சிபிராஜ் நடித்த ‘மாயோன்’ திரைப்படம் உங்களைக் கவர்ந்த டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கிறது. உற்சாகமான அனுபவத்திற்கு தயாராகுங்கள்.!

சிபிராஜின் ‘மாயோன்’ தற்போது பிரத்யேகமாக பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டிருக்கிறது.

உங்களுக்குப் பிடித்த பிரைம் வீடியோவின் பிரைம் வீடியோ டைரக்ட் டிஜிட்டல் பிளாட்பார்மில் ‘மாயோன்’ படத்தை காண்பதன் மூலம் சாகசம் கலந்த உற்சாகமான அனுபவத்தை ரசிக்கலாம்.!

டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் தமிழ் திரைப்படமான ‘மாயோன்’ தற்போது பிரைம் வீடியோவின் பிரைம் வீடியோ டைரக்ட்டில் வெளியாகி இருக்கிறது.

சிபி சத்யராஜ் நடித்த டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸின் ‘மாயோன்’ கடந்தாண்டு உலகளவில் திரையரங்குகளில் வெளியானது. இது திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் விமர்சகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய இதன் தனித்துவமான உள்ளடக்கத்தை பாராட்டினர். புராண இதிகாச திரில்லர் படைப்பு என பாராட்டப்பட்ட இப்படம், அனைத்து எல்லைகளையும் கடந்து பார்வையாளர்களின் இதயத்தை வென்றது. புதுமையான விளம்பர உத்திகளின் மூலம் தொடக்கத்திலிருந்தே திரையரங்கத்தில் பார்வையாளர்கள் குவிந்தனர். இப்படத்தைக் கண்டு அவர்கள் முழு மனதுடன் கொண்டாடினர்.

‘மாயோன்’ ஒரு இணையற்ற தமிழ் திரைப்படமாக தனித்துவம் பெற்று திகழ்கிறது. ஏனெனில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு ஆண்டை கடந்த பிறகும் ரசிகர்களிடையே உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும்  குறையாமல் வைத்திருக்கிறது. கனடாவில் நடைபெற்ற 47வது டொரோன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த புராண திரைப்பட விருதை வென்று, சர்வதேச அளவில் பெரும் கவனத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
Imageதிரையரங்க அனுபவத்தை தவறவிட்டவர்களுக்கு டிஜிட்டல் தள வெளியீடு எப்போது வரும்? என்று எதிர்பார்ப்பு முடிவிற்கு வந்திருக்கிறது. ஏனெனில் இந்த திரைப்படம் தற்போது பிரைம் வீடியோவின் பிரைம் வீடியோ டைரக்ட்டில் வெளியிடப்பட்டிருக்கிறது.

அட்டகாசமான கதைக்களம்.. கவனம் ஈர்க்கும் திரைக்கதை.. நட்சத்திர நடிகர்களின் அற்புதமான நடிப்பு.. இசைஞானி இளையராஜாவின் ஒப்பற்ற இசை.. என பல விசயங்கள் ‘மாயோன்’ படம்- பார்வையாளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

‘மாயோன்’ திரைப்படத்தை டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸின் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்துள்ளார். என். கிஷோர் கதை எழுதி இயக்கியிருக்கிறார். சிபிராஜ் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் முதன்மை கதாபாத்திரங்களின் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கே. எஸ். ரவிக்குமார், ராதாரவி, பகவதி பெருமாள், ஹரிஷ் பெராடி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சி. ராமபிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். ராம் பாண்டியன் மற்றும் கொண்டலராவ் இணைந்து படத்தொகுப்பு பணிகளை  கவனித்திருக்கின்றனர்.

திறமையான கலைஞர்கள் பாடிய மூன்று பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. ‘மாயோனே மணிவண்ணா..’ எனத் தொடங்கும் பக்தி பாடலை பிரபல கர்நாடக இசை பாடகிகள் ரஞ்சனி -காயத்ரி பாடியிருந்தனர். பின்னணி பாடகர் ஸ்ரீநிதி ஸ்ரீபிரகாசுடன் இணைந்து வசீகரிக்கும் கிருஷ்ணரை பற்றிய பாடலையும் பாடியுள்ளனர். இந்த தெய்வீக பாடல்களை அவர்கள் பாடியிருப்பது சிறப்பான திறமையை வெளிப்படுத்துவதுடன் அழகான இசை அனுபவத்தையும் தருகிறது. மேலும் பின்னணி பாடகர்கள் ஸ்ரீ நிஷா ஜெயசீலன் மற்றும் டி கே கார்த்திகேயன் இணைந்து, ‘தேடித் தேடி..’ எனத் தொடங்கும் காதல் தாலாட்டு பாடலுக்கு குரல் கொடுத்து இந்த பாடலுக்கு அழகு சேர்த்திருக்கிறார்.

இப்படத்தின் தெலுங்கு பதிப்பை விரைவில் டிஜிட்டல் தளம் மற்றும் தொலைக்காட்சிகளில் எதிர்பாருங்கள்.

Previous Post

விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிக்கும் ‘குஷி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Next Post

“நூடுல்ஸ்” திரைப்படத்தை வெளியிடும் மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

Next Post

"நூடுல்ஸ்" திரைப்படத்தை வெளியிடும் மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

Popular News

  • ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட முனீஸ்காந்த் நடிக்கும் ‘தி டோர்ம்- The Dorm’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

    0 shares
    Share 0 Tweet 0
  • ’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெபெல் ஸ்டார் பிரபாஸ், கிரியேட்டிவ் டைரக்டர் ஹனு ராகவபூடி, பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி-சீரிஸ் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் ‘ஃபௌஜி‘ – படத்திலிருந்து சுதந்திர தினத்தை தியாகத்திற்கு அர்ப்பணிக்கும் புதிய போஸ்டர் வெளியீடு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்டாண்ட் அப் காமெடியில் வரலாறு படைத்த கூத்து கலைஞர் மாயா எஸ். கிருஷ்ணன் ‌!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.