• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

கிங்ஸ்டன் – விமர்சனம் ரேட்டிங் – 2.5 / 5

by Tamil2daynews
March 8, 2025
in விமர்சனம்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
கிங்ஸ்டன் – விமர்சனம்  ரேட்டிங் – 2.5 / 5

கடற்கரை கிராம மக்கள் மீன்பிடி தொழிலை நம்பியிருந்தாலும், அவர்களால் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடியவில்லை. காரணம், பேராசை பிடித்த ஒருவரது ஆன்மா அந்த கடலை ஆட்கொண்டு அங்கு வருபவர்களை கொன்று குவிப்பது தான். இதனால், அந்த ஊர் மக்கள் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதோடு, கிடைக்கும் வேலைகளை செய்கிறார்கள். சில இளைஞர்கள் கடத்தல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். இந்த இளைஞர்களில் ஒருவரான நாயகன் ஜி.வி.பிரகாஷும், ஆரம்பத்தில் கடத்தல் தொழிலில் ஈடுபட்டாலும், அதன் உண்மையான பின்னணியை அறிந்துக் கொண்டு அதில் இருந்து விலகுவதோடு, தனது கிராம மக்கள் இழந்த வாழ்வாதாரதை மீட்க முடிவு செய்கிறார்.

அதன்படி, மர்மம் சூழ்ந்த அந்த கடலுக்குள் சென்று பிரச்சனையை தீர்க்க நினைப்பவர், தனது நண்பர்களுடன் கடலுக்குள் செல்ல, அவர் உயிருடன் திரும்பினாரா ? அல்லது ஊர் நம்புவது போல் பிணமாக திரும்பினாரா ? என்பதை ஃபேண்டஸியாக சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘கிங்ஸ்டன்’.Kingston' movie review: GV Prakash's unanchored horror adventure is lost at sea - The Hindu

மீனவ கிராமத்து இளைஞராக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார், தோற்றம் மற்றும் நடிப்பு இரண்டிலும் எந்தவித மாற்றமும் இன்றி வழக்கம் போல் நடித்திருக்கிறார். இயக்குநர் சொன்னதை மட்டுமே செய்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார், அதையும் தனக்கு தெரிந்த மாதிரி, ஒரே மாதிரி செய்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் திவ்ய பாரதிக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், அவரை திணிப்பதற்காகவே சில காட்சிகள் படத்தில் திணிக்கப்பட்டிருக்கிறது.

அழகம்பெருமாள், சேத்தன், குமரவேல், வில்லனாக நடித்திருக்கும் சாபுமோன் அப்துசாமத், ஆண்டனி, ராஜேஷ் பாலச்சந்திரன், அருணாச்சலேஸ்வரன்.பி.ஏ, பிரவீன், பயர் கார்த்திக் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

கிரீன் மேட் படங்கள் என்றாலே கோகுல் பினாய் தான் என்ற முத்திரை குத்தப்பட்ட ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய், கடலின் அழகு, ஆபத்து மற்றும் பிரமாண்டம் என அனைத்தையும் திரையில் கொண்டு வர முயற்சித்திருக்கிறார், ஆனால் அனைத்தும் கிரீன் மேட் மூலம் கொண்டு வர வேண்டும் என்பதால், அவரது முயற்சி தோல்வியடைந்திருக்கிறது.

நடிகராக சொதப்பி வந்தாலும் இசையமைப்பாளராக சாதித்து வந்த ஜி.வி.பிரகாஷ் குமார், தனது சொந்த படத்தின் இசையில் இப்படி சொதப்பியிருப்பது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கிறது. பாடல்கள் திணிக்கப்பட்டவையாக இருப்பதால் ரசிக்க முடியவில்லை. பின்னணி இசை பெரும் சத்தத்தோடு காதை கிழித்து தலைவலியை ஏற்படுத்தும்படி அமைந்திருக்கிறது.
Kingston review. Kingston Tamil movie review, story, rating - IndiaGlitz.com

கதையில் இருக்கும் திகில் முக்கியமா? அல்லது திகில் பின்னணியில் இருக்கும் திருப்பங்கள் முக்கியமா? என்ற குழப்பத்தோடு காட்சிகளை தொகுத்திருப்பதால், சஸ்பென்ஸ்கள் கூட திரைக்கதையில் எந்தவித சுவாரஸ்யத்தையும் கொடுக்காமல் சாதாரணமாக கடந்துவிடுகிறது.

எழுதி இயக்கியிருக்கும் கமல் பிரகாஷ், கடலில் நடக்கும் திகில் கதையை ஃபேண்டஸியாக சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், அழுத்தமான கதை மற்றும் பலமான திரைக்கதை இல்லாததால், அவரது ஃபேண்டஸி மற்றும் திகில் யோசனைகள் பார்வையாளர்களிடம் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

கிராபிக்ஸ் மூலம் வடிவமைக்கப்பட்டிருக்கும் அமானுஷ்ய உருவம், கடலில் நடக்கும் ஆவிகளுடனான மோதல் ஆகியவற்றின் மூலம் படக்குழுவின் உழைப்பு தெரிந்தாலும், அந்த இடங்களில் வரும் கிராபிக்ஸ் காட்சிகளின் சொதப்பல் படத்திற்கு சற்று பலவீனமாக அமைந்திருக்கிறது.

சில நாட்கள் முன்பு தெலுங்கு ,தமிழில் வந்த தேவரா படத்தை ஞாபகப்படுத்துவதை தடுக்க முடியவில்லை.

மொத்தத்தில் இந்த கிங்ஸ்டன் பழைய படகில் ஒரு பயணம்.
Previous Post

எமகாதகி – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

Next Post

மர்மர் – விமர்சனம் ரேட்டிங் – 3 / ‌5

Next Post

மர்மர் - விமர்சனம் ரேட்டிங் - 3 / ‌5

Popular News

  • தடை அதை உடை – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

    0 shares
    Share 0 Tweet 0
  • தேசிய தலைவர் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0
  • கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !!

November 2, 2025

‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழா !!

November 2, 2025

தேசிய தலைவர் – விமர்சனம்

November 2, 2025

Verus Productions வழங்கும் கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் “ROOT” – படப்பிடிப்பு நிறைவு!

November 2, 2025

BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

November 2, 2025

தடை அதை உடை – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

November 2, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.