• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஆர்ஜின் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படம்..

by Tamil2daynews
August 31, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஆர்ஜின் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படம்..

 

Origin Studios சார்பில் கண்ணதாசன் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார் இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. Production NO 1 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ராஜ்குமார் ரங்கசாமி இப்படத்தை  இயக்குகிறார்.

எல்.ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஜோன்ஸ் ரூபர்ட்  இசை அமைக்கிறார். இவர் பொறியாளன், சட்டம் என் கையில் படத்திற்கு இசையமைத்தவர்.

குட் நைட், லவ்வர் ,  டூரிஸ்ட் ஃபேமிலி, போன்ற படங்களுக்கு எடிட்டிங் செய்த பரத் இப்படத்துக்கு எடிட்டிங் செய்கிறார்.

படம் பற்றி இயக்குனர் ராஜ்குமார் ரங்கசாமி கூறியதாவது:

இந்த உலகில் காதலும் அன்பும் அதன் இயல்பு தன்மையை மாற்றாமல் இருப்பதை நாம் ஒப்புக் கொள்ளும் அதே வேளையில் அவற்றின் வடிவம் காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருப்பதை நாம் மறுக்க இயலாது.

90s கிட்ஸ், 2K கிட்ஸ் .. வரிசையில் இன்றைய இளைஞர்களை ஜெனரேஷன் ஆல்ஃபா என்று சொல்கிறார்கள்..

இவர்கள் 21 ஆம் நூற்றாண்டில் முழுமையாகப் பிறந்த முதல் தலைமுறை மற்றும் COVID-19 தொற்றுநோய் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அதிகரித்து வரும் ஆதிக்கத்தால் வடிவமைக்கப்பட்ட குழந்தைப் பருவத்தை அனுபவித்தவர்கள். எல்லா தருணங்களிலும் CELEBRETING MINDSET – ல் இருக்ககூடியது இந்த ஜென் தறைமுறை. இவர்கள் மிகவும் அட்வான்சாக யோசித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சகிப்புத்தன்மை, வெறுப்புணர்வு மேலோங்கி இருக்கும் இந்த சூழலில் உறவுகள் என்பது வேர்களில் இருந்து கற்றுக் கொள்ளப்படாமல் அதை விட்டு விலகிய நிலையில் இன்றைய இளம் தலைமுறையினர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

இன்னொருவர் கருத்தை ஒத்து கொள்வதை தாண்டி அதை கேட்க கூட யாரும் தயாராக இருப்பதில்லை. ஆனால் அடிப்படையான ஒன்றை புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. எந்த தறைமுறையாயிருப்பினும் அதன் ரூட் அதாவது வேர்  என்பது முக்கியம். வேர்களை விட்டு விலகாத ஒரு வாழ்க்கை வேண்டும். அதுவே அடுத்த தறைமுறையினரின் மீட்சியாக இருக்கும். சிந்தனைகளிலும், தொழில்நுட்பத்திலும் மிகவும் அட்வான்சாக வாழ்ந்து வரும் இன்றைய இளம் தலைமுறையினர் காலம் காலமாக இருந்து வரும் மனிதர்களின் இயல்பான சில நல்ல விஷயங்களை கற்று கொள்ளாமல், கற்று கொடுக்க படாமல் இருப்பதை மனதில் கொண்டு அதை கருவாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது.

அலட்டி கொள்ளாத, உறவுகள் இன்றி வாழும் ஒருவன்.., குடும்பம், பெற்றோர் என்று சார்ந்திருக்கும் ஒரு இளம் பெண் இவர்கள் இருவருக்கும் இடையே மலரும் உறவு எப்படி செல்கிறது என்பதே இப்படத்தின் கதை.

96 படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன் ஜோடியாக  நடிக்கிறார்கள். இயக்குனர் கே பாக்யராஜ் முக்கிய  வேடமொன்றில் நடிக்கிறார். இவர்களுடன் கிங்ஸ்லி, டி எஸ் ஆர், ஒளிப்பதிவாளர் ராஜூமேனன் மகள் சரஸ்வதி மேனன், இயக்குனர் சாய் ரமணி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி, பொள்ளாச்சி,  நாமக்கல் மற்றும் கோவா போன்ற இடங்களில் நடந்திருக்கிறது.   இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த ஆண்டு படம் திரைக்கு வர உள்ளது.

பட தயாரிப்பாளர் கண்ணதாசன்  கூறியதாவது:

இயக்குனராக வேண்டும் என்ற எண்ணத்தில் நான் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தேன். இந்நிலையில் எனது நண்பர்  ராஜ்குமார் ரங்கசாமி இந்த கதையை என்னிடம் கூறினார். இந்த காலகட்டத்திற்கு ஏற்ப சரியான கதையாகவும், சொல்ல வேண்டிய கதையாகவும் இருந்ததால் அதனை தயாரிக்க முடிவு செய்தேன். இப்படத்தை அடுத்து தொடர்ந்து படங்கள் தயாரிக்க எங்களது நிறுவனம் திட்டமிட்டுள்ளது

இவ்வாறு தயாரிப்பாளர் கண்ணதாசன் கூறினார்..
Previous Post

சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, ராக்கிங் ஸ்டார் மனோஜ் மஞ்சு, கார்த்திக் கட்டமனேனி, டி.ஜி. விஸ்வ பிரசாத், கீர்த்தி பிரசாத், பீப்பிள் மீடியா பேக்டரி வழங்கும், பான் இந்தியா படைப்பு “மிராய்” படத்தின் பிரம்மாண்ட டிரெய்லர் வெளியானது !

Next Post

கடுக்காய் – விமர்சனம்

Next Post

கடுக்காய் - விமர்சனம்

Popular News

  • மக்கள் தலைவா – விமர்சனம்

    மக்கள் தலைவா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சத்யஜோதி பிலிம்ஸ் – சீயான் 63 அடுத்த கட்டத்திற்கு நகர்வு! தொடங்கியது படப்பிடிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆஸ்திரேலியாவில் திருமணம் செய்து கொண்டார் தயாரிப்பாளர் தீபன் பூபதி; மணமகள் நிவேதிதா கிரி

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.