• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

கடுக்காய் – விமர்சனம்

by Tamil2daynews
August 31, 2025
in விமர்சனம்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கடுக்காய் – விமர்சனம் 

 

வேலைக்குச் செல்லாமல், அம்மாவின் உழைப்பில் வாழும் நாயகன் விஜய் கெளரிஷ், வீட்டுக்கு எதிரே குடியேறும் ஸ்மேஹாவை பார்த்ததும் காதல் கொள்ள, அவரை தொடர்ந்து காதல் தொல்லை கொடுக்கிறார். அதே சமயம், நண்பர் ஆதர்ஷும் ஸ்மேஹாவை திருமணம் செய்ய விரும்புவதாகச் சொல்வது கதைக்கு சுவாரஸ்யத்தை தருகிறது.

விஜய் கெளரிஷின் காதலை ஏற்றுக்கொள்ளும் போல் நடக்கும் ஸ்மேஹா, மறுபுறம் ஆதர்ஷையும் காதலிப்பதாகச் சொல்கிறார். உண்மை வெளிப்படும் தருணத்தில், இருவரையும் குழப்பி, காதல் மயக்கத்தில் சிக்கவைக்கும் விதத்தில் அவள் நடக்கும் விதம், கதையை நகைச்சுவையுடன் நகர்த்துகிறது. ஆனால், அவர் ஏன் அப்படி செய்கிறார்? உண்மையில் காதலிக்கிறாரா? என்பதே படத்தின் முக்கியக் கேள்வி.

புதுமுகங்கள் என்றாலும், விஜய் கெளரிஷ், ஆதர்ஷ், ஸ்மேஹா ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். பேருந்து நிலையத்தில் நிற்கும் ஏக்கமிகு இளைஞனாக விஜய் கெளரிஷ் சிறப்பாக நடித்துள்ளார். பக்கத்து வீட்டு பெண் போல் எளிமையாக நடித்திருக்கும் ஸ்மேஹா, பெண்களின் மனக்குமுறல்களை பிரதிபலிக்கிறார். ஆதர்ஷ் உட்பட, மஞ்சுநாதன், மணிமேகலை, சுதா உள்ளிட்டோர் நடிப்பும் கதைக்கு பலம் சேர்க்கிறது.Kadukka (2025) - Movie | Reviews, Cast & Release Date in Chennai- BookMyShow

கெவின் டி. கோஸ்டாவின் இசை, பின்னணி ஒலி சேர்ந்து படம் முழுவதும் மனதில் நிற்க வைக்கிறது. சதிஷ் குமார் துரைகண்ணுவின் ஒளிப்பதிவு, கிராமத்து வீடுகள், டீக்கடை, பேருந்து நிலையம் என அனைத்தையும் எதார்த்தமாகக் காட்டுகிறது. எடிட்டர் எம். ஜான்சன் நோயல், காட்சிகளை நேர்த்தியாக தொகுத்து நகைச்சுவை ரசிப்பை அதிகரித்துள்ளார்.

படத்தை எழுதி இயக்கிய எஸ்.எஸ். முருகரசு, இளைஞர்களின் வாழ்வியலை நகைச்சுவையாகச் சொல்வதோடு, பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையை கூர்மையாக எடுத்துரைத்திருக்கிறார். இரண்டு இளைஞர்களின் காதல், இருவரின் காதலையும் ஏற்றுக்கொள்ளும் பெண்ணின் முடிவு – இறுதியில் “கடுக்கா” கொடுக்கும் விதமாக கதையை நகர்த்தி, பார்வையாளர்களை சிரிப்போடு சிந்திக்க வைக்கிறார்.

மொத்தத்தில்: ‘கடுக்கா’ – காதல் தொல்லையை நகைச்சுவையோடும், சமூக கருத்தோடும் சொல்லும் படம்.

Previous Post

ஆர்ஜின் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படம்..

Next Post

நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் “ரைட்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் !!

Next Post

நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் “ரைட்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் !!

Popular News

  • விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரஜினியின் ‘தர்மன்’.

    0 shares
    Share 0 Tweet 0
  • டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மேரிகோல்ட்’

    0 shares
    Share 0 Tweet 0
  • ’மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

August 15, 2026

தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

August 15, 2026

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மேரிகோல்ட்’

August 15, 2026

’மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

August 15, 2026

விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரஜினியின் ‘தர்மன்’.

August 15, 2026

மகுடம் – விமர்சனம்

August 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.