• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அமரன்… வலுவான கதையாலும் மனதில் பதியும் சித்தரிப்புகளாலும் திரையரங்குகளில் 25 நாள்களைத் தொட்டு இதயங்களை ஈர்த்துக்கொண்டிருக்கிறது.

by Tamil2daynews
November 25, 2024
in சினிமா செய்திகள்
0
அமரன்… வலுவான கதையாலும் மனதில் பதியும் சித்தரிப்புகளாலும் திரையரங்குகளில் 25 நாள்களைத் தொட்டு இதயங்களை ஈர்த்துக்கொண்டிருக்கிறது.
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
அமரன்…வலுவான கதையாலும் மனதில் பதியும் சித்தரிப்புகளாலும் திரையரங்குகளில் 25 நாள்களைத் தொட்டு இதயங்களை ஈர்த்துக்கொண்டிருக்கிறது.
வெளியாகி 25 நாட்களைத் தாண்டியும் அமரன் சாதனை புரிந்துகொண்டிருக்கிறது. பார்வையாளர்களையும் விமர்சகர்களையும் ஒரு சேரக் கவர்ந்து, பாக்ஸ் ஆபீஸ் வசூலில் அதிரடி அலைகளை உருவாக்கி, ஒரு சகாப்தமாக மாறியிருக்கிறது அமரன். காதல், தியாகம், தேசப்பற்று ஆகிய உன்னதமான விஷயங்களின் சரிவிகிதக் கலவையில் மேஜர் முகுந்த் வரதராஜனின் வீர சரிதத்தை ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில்  சொல்கிறது அமரன். பார்வையாளர்களின் உணர்வோடு ஒன்றிவிடும் தன்மையும் அற்புதமான நடிப்பும் சேர்ந்து இந்த ஆண்டின் பெருவெற்றிப் படங்களுள் ஒன்றாக அமரன் திரைப்படத்தை உயர்த்தியிருக்கின்றன.
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோரின் நடிப்பு சகல தரப்பினரிடமும் பாராட்டுப் பெற்று, திரைப்படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்துள்ளது. அன்பான மகன், நேசமிக்க கணவன், பாசக்காரத் தகப்பன் ஆகிய முகங்களோடு, போர்க்களத்தில் தளபதியாகவும் திகழ்ந்த ஒரு போர்வீரனான முகுந்த் கதாபாத்திரத்துக்கு தன் நடிப்பால் பெரும் நம்பகத்தன்மையை உருவாக்கியதோடு முகுந்த் கேரக்டரின் மென்மையான பக்கத்தையும், வீரம் செறிந்த இன்னொரு பக்கத்தையும் திறம்படச் சித்தரித்துக் காட்டிய சிவகார்த்திகேயனின் ஆற்றலை விமர்சகர்களும் ரசிகர்களும் கொண்டாடுகிறார்கள். சிவகார்த்திகேயனின் நடிப்பு வாழ்வில் மிகச்சிறந்த படங்களுள் ஒன்றாக அமரன் இருக்கிறது. மறுபுறம், முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸாக, நினைவை விட்டு அகலாத வகையில் திரையை அலங்கரிக்கிறார் சாய் பல்லவி. தன் உணர்வுப் போராட்டங்களைச் சமாளிப்பதோடு, தன் கணவனின் கடமைக்கு உறுதுணையாகவும் நிற்கும் உறுதிமிக்க பெண்ணை சாய் பல்லவியின் நடிப்பு மிகச் சரியாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. இந்துவாகவே வாழ்ந்து காட்டியிருக்கும் சாய் பல்லவியை, அவரது நுட்பமான நடிப்புத் திறன் வெளிப்பட்ட படங்களில் அமரன் முக்கியமான ஒன்று என்று அனைவரும் பாராட்டுகின்றனர்.
Amaran' movie review: Sivakarthikeyan and Sai Pallavi march into our hearts  with this soul-stirring action film - The Hindu
அதிரடியான ஆக்‌ஷன் அம்சங்களோடு மிகுந்த அழுத்தமான உணர்ச்சித் தருணங்களை சரியான விகிதத்தில் கலந்திருப்பதை விமர்சகர்களும், ரசிகர்களும் பலவகையான பாராட்டுக் கருத்துகளை எழுதியும் பேசியும் கொண்டாடித் தீர்க்கிறார்கள். தனிப்பட்ட ஒருவரின் கதையாக இருக்கும் அதே நேரத்தில் ஒரு பெரும் காவியத்தின் சுவையையும் ஒருங்கே கொண்டிருக்கும் விதத்தில் இயக்கியிருப்பதால் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கும் பரந்த அளவில் பாராட்டு கிடைத்துவருகிறது. திகைப்பூட்டும் ஒளிப்பதிவோடு ஜி.வி. பிரகாஷ்குமாரின் பின்னணி இசையும் காட்சிகளுக்கு கூடுதல் ஆழத்தை வழங்குவதன் மூலம், பார்ப்பவர்களுக்கு மறக்க முடியாத ஒரு சினிமா அனுபவம் கிடைக்கிறது.

ராணுவ வாழ்க்கைக் கதைகளை எப்படிப் படமாக்க வேண்டும் என்பதற்கான ஓர் அளவுகோலாக அமரன் உருவாகியிருக்கிறது. இந்தப் படம், சமரசமில்லாத நேர்மையான ஒரு ராணுவ வீரனின் கதையை மட்டும் சித்தரிக்கவில்லை, அவனது குடும்பத்தின் உணர்ச்சிமயமான பயணத்தையும் படம் பிடித்திருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளோடு உணர்வுக் குவியலான காட்சிகளும் பின்னிப் பிணைந்திருப்பது, இப்படிப்பட்ட படங்களை எப்படித் திரையில் காட்டுவது என்பதற்கான ஓர் எடுத்துக்காட்டாக அமரன் அமைந்திருப்பதே, நாம் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும் என்பதற்கான காரணமாக இருக்கிறது. உண்மை வாழ்க்கை நடந்த காஷ்மீரின்  அதே இடங்களில் படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்கிற படக்குழுவின் தீர்மானத்துக்கு படத்தின் வெற்றியில் பெரும் பங்கு உண்டு. படத்தில் உண்மைத்தன்மையைக் கொண்டுவருவதற்காகவும், இது கதையல்ல வாழ்க்கை என்பதை மிகச் சரியாக எடுத்துக்காட்டுவதற்காகவும், கடுமையான வானிலை மாற்றங்களையும், சவாலான நிலப்பகுதிப் பயணங்களையும் நடிகர்களும் தொழில்நுட்பக் குழுவினரும் சமாளிக்க நேர்ந்தது. శివకార్తికేయన్‌ 'అమరన్' మూవీ HD స్టిల్స్‌ | Sivakarthikeyan And Sai  Pallavi's Starrer Amaran Movie HD Stills Goes Viral On Social Media | Sakshi
கதை சொல்லப்படும் விதத்தையும் நடிப்பையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த், சூர்யா, ஜோதிகா ஆகியோர் பாராட்டியிருப்பது அமரன் பெற்றுவரும் பாராட்டுகளின் உச்சமாகச் சொல்லலாம். இந்தப் படத்தின் ஈர்ப்பு தென்னிந்தியா முழுவதும் அனைத்துப் பள்ளிகளிலும் பரவியிருக்கிறது. பள்ளிகளில் என்சிசி மாணவர்களுக்காக சிறப்புத் திரையிடல்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. கலாச்சார அளவிலும் கல்வி அளவிலும் இந்தப் படத்தின் முக்கியத்துவத்தை இது காட்டுகிறது.

கமல்ஹாசன், ஆர். மகேந்திரன், சோனி பிக்சர்ஸ் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட அமரன், தனக்கான இடத்தைத் தானே நிர்ணயித்துக்கொண்டது. இது இந்தப் படம் செய்திருக்கும் பெரும் வசூல் குறித்தது மட்டும் அல்ல, படத்தை ஓடிடியில் வெளியிடுவதைத் தள்ளிப்போடச் சொல்லி தியேட்டர் உரிமையாளர்கள் கோரியிருப்பதுவும், இப்படத்தின் வெற்றிக்கு மற்றொரு மைல்கல்லாய்ச் சான்றளிக்கிறது. ஓடிடியில் வெளியிடும் முன் தியேட்டரிலேயே நாங்கள் பார்க்கிறோம் என்று மக்களே சொல்வது, ரசிகர்களை எந்த அளவுக்கு இந்தப் படம் ஈர்த்திருக்கிறது என்பதன் அடையாளம்.
Previous Post

”பசங்க லவ் மூடில் இருக்கிறாங்க.. நாம ஆக்சன் படம் எடுத்துட்டு இருக்கோம்” ; ‘மிஸ் யூ’ ட்ரெய்லர் விழாவில் யதார்த்தம் பேசிய நடிகர் கார்த்தி

Next Post

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும். ‘சூர்யா 45’ திரைப்படம் பூஜையுடன் இனிதே தொடங்கியது !!

Next Post

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும். ‘சூர்யா 45’ திரைப்படம் பூஜையுடன் இனிதே தொடங்கியது !!

Popular News

  • தடை அதை உடை – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘போட்’ – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • வெப்பம் குளிர் மழை – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • 50 லட்சம் செலவில் ‘பங்களா’ செட்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் விவேக் ஆத்ரேயா – டி வி வி என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் உருவான ‘சூர்யா’ஸ் சாட்டர் டே’ எனும் பான் இந்திய திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !!

November 2, 2025

‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழா !!

November 2, 2025

தேசிய தலைவர் – விமர்சனம்

November 2, 2025

Verus Productions வழங்கும் கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் “ROOT” – படப்பிடிப்பு நிறைவு!

November 2, 2025

BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

November 2, 2025

தடை அதை உடை – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

November 2, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.