ப்ளடி பெக்கர் – விமர்சனம்
பிச்சைக்காரராக நடித்திருக்கிறார் கவின். இதுவரை அமுல் பேபி ஆகவே நாம் பார்த்த கவின் முற்றிலும் வித்தியாசமாக நடித்திருக்கும் படம் ப்ளடி பெக்கர்
ப்ளடி பெக்கரின் டார்க் காமெடி கை கொடுத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். தனியாக இருக்கும் பெரிய அரண்மனைக்குள் செல்கிறார் கவின். அந்த அரண்மனையில் நிஜமான பேய் வேறு இருக்கிறது. இந்த காட்சியை வைத்து பில்ட்அப் செய்திருக்கிறார் இயக்குநர்.
பிச்சை எடுக்க முடியும், மேலும் அது ஜாலியாக இருக்கிறது என்பதால் பிச்சை எடுக்கிறார் கவின் என்பது போன்று முதலில் காட்டுகிறார்கள். ஆனால் படம் முழுக்க அந்த பிச்சைக்காரனின் ஃபிளாஷ்பேக் அவ்வப்போது வந்து வந்து செல்கிறது. அந்த குட்டி குட்டி ஃபிளாஷ்பேக்குகள் டார்க் காமெடியில் சேராது எனலாம்.

இப்படி ஃபிளாஷ்பேக் வந்து வந்து போவதால் கவனம் சிதறுகிறது. ஆனால் திரைக்கதை அமைக்கப்பட்ட விதம் உதவியாக உள்ளது. திடீரென்று ஒரு காதல் பாட்டு அல்லது ஒரு காமெடி காட்சி வந்து அழ வைக்கும் காட்சியில் இருந்து நம்மை வெளியே அழைத்து வந்து விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது.
டார்க் காமெடி ஒர்க்அவுட்டாக வேண்டும் என்றால் ஸ்டிராங்கான கதாபாத்திரங்கள் தேவை. கவின், ரெடின் கிங்ஸ்லியை நம்பி டார்க் காமெடியை கையில் எடுத்த சிவபாலனின் முயற்சி வெற்றி அளித்துள்ளது. கவினும், ரெடின் கிங்ஸ்லியும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

பயங்கரமான கிளைமாக்ஸ் காட்சியை எதிர்பார்த்தபோது சிவபாலனோ சென்டிமென்ட் டச் வைத்து சுமூகமான கிளைமாக்ஸ் வைத்துவிட்டார். படத்தில் மைனஸ் இல்லாமல் இல்லை. மேலும் சில ஜோக்குளும் ஒர்க்அவுட் ஆகவில்லை. இருந்தாலும் சிவபாலனின் முயற்சியும், கவினின் உழைப்பும் ரசிகர்களை கவர்கிறது.
மொத்தத்தில் இந்த ப்ளடி பெக்கர் ஓகே ரகம் தான்