• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

சரண்டர் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

by Tamil2daynews
August 2, 2025
in விமர்சனம்
0
சரண்டர் – விமர்சனம்   ரேட்டிங் – 4 / 5
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சரண்டர் – விமர்சனம் 

 

அமுல் பேபி என்று அழைக்கப்படும் பிக் பாஸ் புகழ் தர்ஷன் நடிப்பில் நாயகனாக முரட்டு போலீசாக மிரட்டி இருக்கும் படம் சரண்டர்

இதில் சரண்டர் என்பது கைதியின் சரண்டர் இல்லை. ஒரு துப்பாக்கியின் சரண்டர். அதுவும் யாருடைய துப்பாக்கி தெரியுமா?

மன்சூர் அலிகானின் துப்பாக்கி. அதுவும் அவர் நடிகர் மன்சூர் அலி கானாகவே வருகிறார். தேர்தல் வருவதை ஒட்டி அவருடைய துப்பாக்கியை போலீசில் சரண்டர் செய்து விட்டுப் போக, அது காணாமல் போகிறது.

அதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு பயிற்சி எஸ்.ஐ யாக இருக்கும் நாயகன் தர்ஷனிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இதற்கிடையே ஒரு பக்கம் தேர்தல் செலவுகளுக்காக உள்ளூர் தாதா சுஜித், பத்து கோடி ரூபாய் பணத்தை அரசியல்வாதி ஒருவரிடம் ஒப்படைக்க, இன்ஸ்பெக்டர் ஒருவரிடம் கொடுத்தனுப்ப, விபத்துக்குள்ளாகும் அவரது ஜீப்பிலிருந்த பணம் மாயமாகிறது.

இன்னொருபக்கம் தர்ஷன் பயிற்சி பெறும் போலீஸ் ஸ்டேஷனில் நேர்மையே உருவான ஏட்டாக இருக்கிறார் லால். அவரது பொறுப்பில்தான் மன்சூர் துப்பாக்கி காணாமல் போனது. அவருக்கும் மேற்படி தாதா சுஜித்தின் தம்பிக்கும் ஒரு உரசல் இருக்க, அதன் காரணமாக லால் அவமானப்படுத்தப்படுகிறார்.Surrender Stills Pictures | nowrunning

அதில் தர்ஷனுக்கு அவன் மீது ஏகக் கோபம் இருக்க, காவல் அதிகாரிகளே பயப்படும் அந்த தாதாவின் கூட்டத்தை தர்ஷனால் அடக்க முடிந்ததா, மன்சூர் துப்பாக்கி என்ன ஆனது, தாதாவின் காணாமல் போன பணம் மீட்கப் பட்டதா? என்பதெல்லாம் மீதிக் கதை.

எந்த ஹீரோவுக்குரிய அறிமுகமும் தர்ஷனுக்கு இல்லை. சொல்லப்போனால் முதல்பாதியில் அவருக்குப் பெரிய வேலையும் இல்லை. பின்பாதியில்தான் டேக் ஆஃப் ஆகிறார்.

அவர் மட்டுமல்லாமல் தாதா சுஜித், அவர் தம்பி, உடனிருக்கும் சதிகாரர்கள் எல்லோருமே இயல்பாக நடித்திருப்பதால் படத்துடன் ஒன்ற முடிகிறது.

லால் நடிப்பு பற்றி சொல்லவே வேண்டியதில்லை. “எனக்கு ஒரு மகன் இருந்தா எனக்கு நேர்ந்த அவமானத்துக்கு தட்டிக் கேட்க மாட்டானா..?” என்று அவர் கேட்கும்போது தர்ஷன் மோட்டிவேட் ஆவது நம்பகமாக இருக்கிறது.

இன்ஸ்பெக்டராக வரும் அரோல் டி.சங்கர் போலீசுக்காகவே படைக்கப்பட்டவராக மிடுக்கு காட்டுகிறார்

மன்சூராகவே வரும் மன்சூர், தான் துப்பாக்கியுடன்தான் மணிப்பூர் செல்ல முடியும் என்பது அவரது சொந்த லந்து என்று புரிகிறது.

மெய்யேந்திரன் ஒளிப்பதிவும், விகாஸ் பாடிஷா இசையும் படத்தின் தன்மைக்குப் பொருத்தமாக இருக்கின்றன

படத்தைத் தொய்வின்றி இயக்கியிருக்கும் கௌதமன் கணபதியைப் பாராட்டலாம். இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் பெரிய வெற்றி பெற்றிருக்கும்.

இருந்தாலும் படக்குழுவினர்களின் இந்த முயற்சிக்கு சல்யூட்

Previous Post

அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில், ஏ.ஆர்.முருகதாஸின் “மதராஸி” படத்திலிருந்து சாய் அபயங்கர் குரலில் அழகான “சலம்பல” பாடல் வெளியிடப்பட்டுள்ளது!!

Next Post

உசுரே – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

Next Post
உசுரே – விமர்சனம்   ரேட்டிங் – 3 / 5

உசுரே - விமர்சனம் ரேட்டிங் - 3 / 5

Popular News

  • விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஓவிய கலைஞராக மிளிரும் ஷாம்லி

    0 shares
    Share 0 Tweet 0
  • தேவயானி நடிக்கும் அரசு கொரோனா விளம்பரம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் பொன்மகள் வந்தாள் !!

    8 shares
    Share 8 Tweet 0
  • பத்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாட வந்த கே.ஜே.ஜேசுதாஸ்

    8 shares
    Share 8 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.