• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில், ஏ.ஆர்.முருகதாஸின் “மதராஸி” படத்திலிருந்து சாய் அபயங்கர் குரலில் அழகான “சலம்பல” பாடல் வெளியிடப்பட்டுள்ளது!!

by Tamil2daynews
August 2, 2025
in சினிமா செய்திகள்
0
அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன்  கூட்டணியில்,  ஏ.ஆர்.முருகதாஸின் “மதராஸி” படத்திலிருந்து சாய் அபயங்கர் குரலில் அழகான  “சலம்பல” பாடல்  வெளியிடப்பட்டுள்ளது!!
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன்  கூட்டணியில்,  ஏ.ஆர்.முருகதாஸின் “மதராஸி” படத்திலிருந்து சாய் அபயங்கர் குரலில் அழகான  “சலம்பல” பாடல்  வெளியிடப்பட்டுள்ளது!!

 

டைம்ஸ் மியூசிக்கின் ஒரு பிரிவான ஜங்லீ மியூசிக், ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமான “மதராஸி” படத்திலிருந்து முதல் பாடலான “சலம்பல” பாடலை வெளியிட்டுள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த இந்தப் பாடல், இந்த ஜோடியின் 8வது படத்தில், ரசிகர்களின் ஃபேவரைட்டாக வெளியாகியுள்ளது.

துடிப்பான குரல் மற்றும் பன்முக வித்தகராக, வளர்ந்து வரும் சக்தி வாய்ந்த இளம் திறமையாளர், சாய் அபயங்கர் தனது பிரத்யேகமான குரலில், துடிதுடிப்பான “சலம்பல” பாடலை பாடியுள்ளார். அனிருத்தின் முத்திரை இசையில், அதிரடி டியூனில், மனதை அதிரடிக்கும் தாளத்தில், அழுத்தமான பிரேக்அப் பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது.

“மதராஸி” படத்தின் இசையமைப்பாளர் அனிருத் கூறுகையில்,
நாங்கள் வழக்கமான பிரேக்அப் பாடல் மனநிலையிலிருந்து விடுபட்டு “சலம்பல” பாடலை,  மாறுபட்ட பாடலாக உருவாக்க விரும்பினோம். இது வித்தியாசமான, கணிக்க முடியாத பாடலாக இருக்கும், மேலும் SK உடன் இணைவது எப்போதும் மிரட்டலான ஒன்றாக இருக்கும். இயக்குநர் முருகதாஸின் தொலைநோக்குப் பார்வை மிகத் தெளிவாக இருந்தது. இது மிகப்பெரியதாக இருக்க வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். இந்தப்பாடல் கண்டிப்பாக அனைவரையும் கவரும்.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறுகையில்…,

“மதராஸி உணர்ச்சிப்பூர்வமான கதையுடன், பரபர ஆக்சனுடன் உருவாக்கப்பட்டுள்ளது. “சலம்பல” அந்த பரபரப்புக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் என்று விரும்பினோம். நாங்கள் ஒரு வழக்கமான பிரேக்அப் பாடலை உருவாக்க விரும்பவில்லை.  மனதை ஆழமாகத் தாக்கும் மற்றும் உங்களை நெகிழ வைக்கும் ஒன்றை உருவாக்க விரும்பினோம். அனிருத் அந்த நெருப்பைக் கொண்டு வந்தார், சிவகார்த்திகேயன் அதற்கு வலு சேர்த்தார். இந்தப் பாடல் வரவிருக்கும் அதிரடிகளுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும்.

டைம்ஸ்/ஜங்லீ மியூசிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மந்தர் தாக்கூர் கூறுகையில்..,

“அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் சக்திவாய்ந்த  மிகப்பெரிய கூட்டணி. “சலம்பல” என்பது மீண்டும் மீண்டும் கேட்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பாடல். இது முதல் நொடியிலேயே உங்களை ஈர்க்கும். இந்த அற்புதமான பாடலுடன் “மதராஸி” படத்தின் இசையை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.”

மேலும் ருக்மிணி வசந்த் மற்றும் வித்யுத் ஜம்வால் ஆகியோரும் இணைந்து நடித்திருக்கும் “மதராஸி” திரைப்படம், வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. “சலம்பல” இப்போது அனைத்து தளங்களிலும் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. முழு வீடியோவையும் YouTube ல் பாருங்கள்.
Watch it on YouTube:  https://youtu.be/vB7Y2wcBAZw?si=Ve-iweqBWv-7L4zN
Previous Post

அக்யூஸ்ட் – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

Next Post

சரண்டர் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

Next Post
சரண்டர் – விமர்சனம்   ரேட்டிங் – 4 / 5

சரண்டர் - விமர்சனம் ரேட்டிங் - 4 / 5

Popular News

  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

    0 shares
    Share 0 Tweet 0
  • பெங்களூர் மெட்ரோவில் முதன்முறையாக ஒரு நட்சத்திர பிறந்தநாள் கொண்டாட்டம் – ராக்கிங் ஸ்டார் யாஷ் ரசிகர்களின் வரலாற்றுச் சாதனை !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.