சிக்னேச்சர் புரடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் சார்பில் கேத்ரின் ஷோபா மற்றும் லெனின் தயாரிப்பில் பிரிட்டோ இயக்கத்தில் பாரதிராஜா, வடிவுக்கரசி, நட்டி, சாண்டி, ரியோ ராஜ், யோகிபாபு, துளசி, ஆதிரா, கனிகா, ரிஷிகாந்த், விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், ரிஷிகாந்த், ஏகன், விக்னேஷ்காந்த், காவ்யா, ஆயிரா கிருஷ்ணன், முல்லை அரசி, மைம் கோபி, விஜி சந்திரசேகர், சுரேஷ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி, ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’நிறம் மாறும் உலகில்’
சென்னையில் பிறந்தநாள் அன்று நண்பர்கள் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்திய தாய் விஜி சந்திரசேகரிடம் கோபித்துக் கொண்டு தனது தோழி வீட்டிற்குச் செல்கிறார் லவ்லின் சந்திரசேகர்.
ரயில் பயணத்தில் டிடிஆர்’ஆக வரும் யோகிபாபுவை சந்திக்கிறார் லவ்லின். இருவரும் பேசிக் கொள்ள, தாயின் அருமை என்னவென்று தெரிந்து கொள்ள நான்கு உண்மைச் சம்பவங்களை லவ்லினிடம் கூறுகிறார் யோகிபாபு

கிராமத்திலிருந்து வாய் பேசமுடியாத தனது காதலியான காவ்யாவை அழைத்து கொண்டு மும்பை வரும் ரிஷிகாந்த் சுரேஷ் மேனனிடம் மாட்டிக்கொள்கிறார். ரிஷிகாந்த்தை வைத்து நட்டியை கொலை செய்ய திட்டம் போடுகிறார் சுரேஷ் மேனன். இறுதியில் ரிஷிகாந்த் நட்டியை கொலை செய்தாரா ? இல்லையா? என்பதே முதல்கதை.
மீனவ குடும்பத்தைச் சேர்ந்த ரியோ, சிறுவயதிலேயே தனது தந்தையை இழந்தவர் தாய் ஆதிரா அரவைப்பில் வளர்ந்து வருகிறார்.
ஒருநாள் தாய் ஆதிரா மயக்கம் போட்டு விழ அவருக்கு புற்றுநோய் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.அவரை காப்பாற்ற வேண்டும் என்றால் 10 ரூபாய் தேவை என்று கூறுகிறார்கள்.
இதனையடுத்து ஏரியா ரெளடியாக இருக்கும் மைம் கோபி சொல்லும் வலையை ரியோ செய்வதால் அவரது தாய் உயிர் பறிபோகிறது. ரியோ செய்த வேலை என்ன? என்பதே இரண்டாவது கதை.
கிராமத்தில் பாரதிராஜாவும் வடிவுக்கரசியும் கணவன் மனைவி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். வறுமையில் பிடியில் இருக்கும் இருவரையும் மகன்கள் பெரியாத கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். இதனால் இவர்கள் வாழ்க்கையில் நடந்தது என்ன? என்பதே மொனராவது கதை.

நான்கு கதை கேட்ட பிறகு லவ்லின் தாயுடன் ஒன்று சேர்ந்தாரா? இல்லையா? என்பதே ’நிறம் மாறும் உலகில்’ படத்தின் மீதிக்கதை.
தாயின் பெருமையையும் மகிமையையும் பற்றி இந்த நான்கு கதைகளும் சிறப்பாக பேசியிருக்கிறது. பாரதிராஜா, வடிவுக்கரசி, நட்டி, சாண்டி, ரியோ ராஜ், யோகிபாபு, துளசி, ஆதிரா, கனிகா, லவ்லின் சந்திரசேகர், ரிஷிகாந்த், லவ்லின் சந்திரசேகர், ரிஷிகாந்த், ஏகன், விக்னேஷ்காந்த், காவ்யா என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
தேவ் பிரகாஷ் ரேகன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னணி இசை கதையோடு பயணிக்கிறது. மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா இருவரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கிறது.
தாய் பாசத்தை மைய கருவாக வைத்து இன்றைய சமூகத்தில் நடக்கிற நிகழ்வுகளை திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் பிரிட்டோ.
படத்தில் நிறைய காட்சிகள் இதற்கு முன் நிறைய படங்களில் பார்த்தது போல ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.