இறுதி முயற்சி – விமர்சனம்

ரஞ்சித்தின் மனைவியாக நடித்திருக்கும் மெஹாலி மீனாட்சி, கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு. கணவன் நிலை மற்றும் சூழல் அறிந்து நடக்கும் மனைவியாக எதார்த்தமாக நடித்திருப்பவர், அளவான பேச்சு, இயல்பான உடல்மொழி என்று தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
கருணை இல்லாத மனிதராக கந்துவட்டி தாதாவாக நடித்திருக்கும் விட்டல் ராவ், அவரது தம்பியாக நடித்திருக்கும் புதுபேட்டை சுரேஷ், குற்றவியல் ஆய்வாளராக நடித்திருக்கும் கதிரவன், ரஞ்சித்தின் மகளாக நடித்திருக்கும் சிறுமி மெளனிகா, மகனாக நடித்திருக்கும் சிறுவன் நீலேஷ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சுனில் லாசரின் பாடல்கள் கதைக்களம் மற்றும் கதை மாந்தர்களின் வலிகளை பிரதிபலிக்கும் வகையில் இருக்கிறது. பின்னணி இசை திரைக்கதையில் இருக்கும் சோகத்திற்கு கூடுதல் சோகம் சேர்க்கிறது.
ஒளிப்பதிவாளர் சூர்யகாந்தி, எளிமையான கதையை எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். ஒரு வீடு, அதற்குள் இருக்கும் சில கதாபாத்திரங்களின் மன போராட்டங்களை மிக இயல்பாக காட்சிப்படுத்தி, கடன் பிரச்சனை எத்தகைய ஆபத்தானது என்பதை பார்வையாளர்களை உணர வைத்திருக்கிறார்.
எளிமையான கதை என்றாலும், திரைக்கதையில் வலிமை சேர்க்கும் வகையில் சேர்க்கப்பட்டுள்ள ஒரு கிளைக்கதையை முக்கிய கதையோடு சேர்த்து காட்சிகளை சுவாரஸ்யமாக தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் வடிவேல் விமல்ராஜ்.
எழுதி இயக்கியிருக்கும் வெங்கட் ஜனா, தற்போதைய காலக்கட்டங்களில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் கந்துவட்டி கொடுமைகளின் பின்னணியை தோலுரித்து காட்ட முயற்சித்திருக்கிறார்.
உண்மை சம்பவங்களுக்கு ஏற்ப, கதையை ஒரே வீட்டுக்குள் நகர்த்தி செல்லும் இயக்குநர் வெங்கட் ஜனா, அந்த வீட்டுக்குள் இருந்தபடியே நாயகனின் மனைவி எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும், அதை பார்த்தும் எதுவும் செய்ய முடியாத கணவரின் நிலையையும் மிக அழுத்தமாக பதிவு செய்து பார்வையாளர்களை கலங்கடித்து விடுகிறார்.
கந்து வட்டியால் பாதிக்கப்படும் குடும்பங்களை எவ்வளவு திரைப்படங்களில் காட்டி இருந்தாலும் இதில் சற்று வித்தியாசமாக காட்டியிருக்கிறார்கள் முதலாளித்துவம் தொழிலாளித்துவம் சமமாக பார்க்க வேண்டும் என்கிற கருத்தை இந்த படம் உணர்த்துகிறது.