• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஃபைட்டர் படத்தில் இருந்து வெளியாகியுள்ள அட்டகாசமான பாடல்!

by Tamil2daynews
December 15, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஃபைட்டர் படத்தில் இருந்து வெளியாகியுள்ள அட்டகாசமான பாடல்!

 

இந்த ஆண்டின் பார்ட்டி கீதம்: சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன் ஃபைட்டரின் ‘ஷேர் குல் கயே’ மூலம் கொண்டாட்டங்களை புதிய உயரத்திற்கு கொண்டு செல்கிறார்

இந்தியாவின் டான்ஸ் ஐகானான சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய பாடல் அவரது வரவிருக்கும் படமான ‘ஃபைட்டர்’ படத்தில் இருந்து தற்போது வெளியிடப்பட்டது. ‘ஷேர் குல் கயே’ (Sher Khul Gaye) என்ற இந்த பாடல் கேட்டவுடனேயே நம்மை ஆர்ப்பரிக்க செய்கிறது.  இந்த பாடலுக்கு ஹிருத்திக் ரோஷனைத் தவிர வேறு யாரும் ஆட முடியாது என்று சொல்லும் அளவிற்கு சிறப்பாக நடனமாடி உள்ளார்.  மேலும் அவருக்கென்ற அடையாளமாக மாறும் கடினமாக டான்ஸ் மூவ்ஸ்களை எளிமையாக மாற்றுகிறார்.

அவரது ஈடு இணையற்ற நடனத் திறமைக்காகப் புகழ் பெற்ற ஹிருத்திக் ரோஷன், ‘ஷேர் குல் கயே’ பாடலின் மூலம் மீண்டும் தனது திறமையை வெளிக்காட்டி உள்ளார்.  ‘கஹோ நா பியார் ஹை’ படத்தில் வரும் ‘ஏக் பால் கா ஜீனா’ முதல் ‘கபி குஷி கபி காம்’ படத்தில் உள்ள ‘யூ ஆர் மை சோனியா’ மற்றும் ‘தூம் 2’ல் இருந்து ஆற்றல்மிக்க ‘தூம் அகெய்ன்’ வரை, ஹிருத்திக் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஹிட் பாடல்களை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார்.  ‘பேங் பேங்’ டைட்டில் டிராக் மற்றும் ‘வார்’ படத்தின் ‘குங்ரூ’ போன்ற சமீபத்திய வெற்றிகள் இந்திய சினிமாவின் சிறந்த நடனக் கலைஞர்களில் ஒருவராக அவரது நிலையை உறுதிப்படுத்தியதை மறந்துவிடக் கூடாது.

வரவிருக்கும் விடுமுறை சீசனின் முன்னோடியாக, ஹிருத்திக் ரோஷன் ‘ஃபைட்டர்’ படத்தில் ஆக்‌ஷன் மற்றும் நடனத்தின் சரியான கலவையுடன் ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார். ‘பேங் பேங்’ (2014) மற்றும் ‘வார்’ (2019) ஆகிய வெற்றிகரமான கூட்டணிக்கு பிறகு சித்தார்த் ஆனந்த் இயக்கி இருக்கும் இந்த படம், அவர்களின் மூன்றாவது கூட்டணி ஆகும். ஃபைட்டர் படத்தில் ரித்திக் ரோஷன் ஷம்ஷேர் பதானியா என்ற போர் விமான பைலட் ஆக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் தீபிகா படுகோன் மற்றும் அனில் கபூர் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களும் உள்ளனர்.

‘ஃபைட்டர்’ படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இப்போது, ​​’ஷேர் குல் கயே’ பாடல் வெளியாகி மீண்டும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. திரையரங்கில் ஹிருத்திக் ரோஷனின் நடன அசைவுகளைக் காண ரசிகர்கள் காத்து கொண்டுள்ளனர்.  இந்தியாவின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 25, 2024 அன்று திரையரங்குகளில் ‘ஃபைட்டர்’ வெளியாக உள்ளது.  இந்த படம் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஹிருத்திக் ரோஷனின் கவர்ச்சி, திறமை மற்றும் இணையற்ற நட்சத்திர சக்தி ஆகியவற்றின் பிளாக்பஸ்டர் காட்சியாக இந்த படம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Previous Post

Fight Club – விமர்சனம்

Next Post

மீண்டும் இணைந்த ‘ஈரம்’ கூட்டணி

Next Post

மீண்டும் இணைந்த 'ஈரம்' கூட்டணி

Popular News

  • ‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    ‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆகஸ்ட் 14ஆம் தேதி ஆலி

    0 shares
    Share 0 Tweet 0
  • புத்தியே சிறந்த ஆயுதம் ; க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

    0 shares
    Share 0 Tweet 0
  • கார்த்தி நடிப்பில் ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

August 3, 2026

ஆகஸ்ட் 14ஆம் தேதி ஆலி

August 3, 2026

புத்தியே சிறந்த ஆயுதம் ; க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்

August 3, 2026

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

August 3, 2026

கார்த்தி நடிப்பில் ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு

August 3, 2026

பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு.

August 3, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.