ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘வாழ்வு தொடங்கும் இடம் நீதானே’ – விமர்சனம்

by Tamil2daynews
September 28, 2023
in விமர்சனம்
0
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘வாழ்வு தொடங்கும் இடம் நீதானே’ – விமர்சனம்

 

பெண்ணுக்கும், பெண்ணுக்கும் உள்ள உணர்வை சொல்லும் வித்தியாசமான கதைக்களம்.

ஷார்ட் பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வரும் 28 ஆம் தேதி வெளியாக உள்ள படம் ‘வாழ்வு தொடங்குமிடம் நீ தானே’. இயக்குநர் ஜெயராஜ் பழனி இயக்கியிருக்கும் இப்படத்தை நடிகை நீலிமா இசை தயாரித்துள்ளார். ஓரினச்சேர்க்கை காதலை குற்ற செயல் அல்ல, அதுவும் மனித உணர்வு தான் என்பதை வலியுறுத்தும் இப்படம் ஏற்றுக்கொள்ளும்படி இருக்கிறதா? அல்ல எதிர்க்கும் வகையில் இருக்கிறதா?, விமர்சனத்தை பார்ப்போம்.

இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த கிரமாத்து பெண்ணான நிரஞ்சனா நெய்தியாரும், நகரத்தில் வாழும் ஆவணப்பட பெண் இயக்குநரான ஸ்ருதி பெரியசாமியும் சில நாட்கள் ஒரே வீட்டில் தங்கும் போது, இவர்களிடையே காதல் உருவாகிறது. இதை தெரிந்துக் கொண்ட நிரஞ்சனா நெய்தியாரின் தந்தை அவருக்கு அவசரமாக திருமணம் செய்து வைக்கும் ஏற்பாடுகளை செய்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை சர்ச்சையாக சொல்லாமல் மனித உணர்ச்சிகளை மக்களிடம் கொண்டு செல்லும் விதத்தில் சொல்வது தான் ‘வாழ்வு தொடங்குமிடம் நீ தானே’.

முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிரஞ்சனா நெய்தியார் மற்றும் ஸ்ருதி பெரியசாமி இருவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து உணர்ச்சிகரமாக நடித்திருக்கிறார்கள். தங்களுக்கு இடையிலான உறவும் காதல் தான் என்பதை நிரூபிக்க இருவரும் போராடும் காட்சிகளில் அசத்தலாக நடித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் தர்ஷன் குமாரின் பின்னணி இசை கவனம் ஈர்க்கும் வகையில் இருப்பதோடு, படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
Vaazhvu Thodangumidam Neethanae (2023) - IMDb

கதைக்கு ஏற்ப பயணித்திருக்கும் ஒளிப்பதிவாளர், கடற்கரை மற்றும் கடற்கரை சார்ந்த பகுதிகளை ரசிக்கும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

ஒரு ஆணுக்கும், பெண்ணும் இடையே ஏற்படும் காதல் எப்போது வரும் என்று தெரியாது, அது இயற்கையானது என்பது போல், தன் பாலினத்தவர்கள் மீது ஏற்படும் காதலும் இயற்கையானது தான், எனவே அதை இந்த சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை பதிவு செய்திருக்கும் இயக்குநர் ஜெயராஜ் பழனி, அதை அழுத்தமாக பதிவு செய்ய தவறியிருக்கிறார்.

இயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றம் கூறியதால், இந்தியாவில் ஓரினச்சேர்க்கை என்பது தவறானது இல்லை என்றாலும், இதுபோன்ற உறவுகளை சமூகம்  ஏற்றுக்கொள்ள தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், அப்படி ஒரு விசயத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளும்படி சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் ஜெயராஜ் பழனி, அதை அழுத்தமாக சொல்லாமல் அவசர அவசரமாக சொல்லியிருப்பது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

மொத்தத்தில் இந்த வாழ்வு தொடங்கும் இடம் நீதானே கதை லெஸ்பியன் உறவை முழுமையாக சொல்லவில்லை என்றே சொல்லலாம்.

லெஸ்பியன் பற்றி கேள்விப்பட்டவர்களுக்கு இந்த படம் பார்க்க பிடிக்கும்.
Previous Post

#AskSRK சமீபத்திய அமர்வில் தனது மகனுடன் படம் பார்க்க முடியாத ரசிகருக்கு ஜவான் டிக்கெட்டுகளை தள்ளுபடியில் வழங்கி, நெகிழவைத்த SRK . இந்த இனிமையான செயலைத் தொடர்ந்து, ரெட் சில்லிஸ் என்ட்ரெய்ன்மென்ட் *பை-ஒன்-கெட்-ஒன் டிக்கெட் இலவச சலுகையை அறிவித்துள்ளது

Next Post

ஆர்.பி. பிலிம்ஸ் ஆர் பி பாலா தயாரிப்பில் வி ஆர் துதிவாணன் இயக்கத்தில் கலையரசன், தீபா பாலு முதன்மை வேடங்களில் நடிக்கும் ‘கொலைச்சேவல்’

Next Post

ஆர்.பி. பிலிம்ஸ் ஆர் பி பாலா தயாரிப்பில் வி ஆர் துதிவாணன் இயக்கத்தில் கலையரசன், தீபா பாலு முதன்மை வேடங்களில் நடிக்கும் 'கொலைச்சேவல்'

Popular News

  • ”சினிமாவில் மட்டும் தான் சாதி மதம் இவைகள் எதுவுமே கிடையாது” – ’முனியாண்டியின் முனிப் பாய்ச்சல்’ பட ஆடியோ வெளியீட்டில் இயக்குநர் பேரரசு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சூரகன்’ – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • பல வருடங்களுக்குப் பிறகு படப்பிடிப்பில் சந்தித்து அன்பைப் பரிமாறிக்கொண்ட மாபெரும் இரு துருவங்கள் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • அதை பார்த்துதான் அவருக்கு அப்படி ஒரு லிப் லாக் கொடுத்தேன்.. சூட்டைக் கிளப்பிய ரம்யா நம்பீசன்

    2 shares
    Share 2 Tweet 0

Recent News

“வள்ளி மயில்” திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !

November 30, 2023

விஜய் குமார் நடிக்கும் ‘ஃபைட் கிளப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

November 30, 2023
திரைப்படமாகும் திருக்குறள், A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.

திரைப்படமாகும் திருக்குறள், A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.

November 29, 2023

‘பார்க்கிங்’ – விமர்சனம்

November 29, 2023

‘சூரகன்’ – விமர்சனம்

November 29, 2023

”சினிமாவில் மட்டும் தான் சாதி மதம் இவைகள் எதுவுமே கிடையாது” – ’முனியாண்டியின் முனிப் பாய்ச்சல்’ பட ஆடியோ வெளியீட்டில் இயக்குநர் பேரரசு

November 29, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!