• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘கிளாஸ்மேட்ஸ்’- விமர்சனம்

by Tamil2daynews
February 22, 2024
in விமர்சனம்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘கிளாஸ்மேட்ஸ்’- விமர்சனம்

 குடியால் குடும்பங்கள் சீரழிவதுடன் பல குடும்பங்கள் நாசமாய் போவது பற்றிய கதைதான் இந்த படம்.

நாயகன் அங்கையற்கண்ணனம் அவரது மாமா சரவணா சக்தியும் எப்போதும் குடி குடி என்றே இருக்கிறார்கள். இவர்கள் குடித்துவிட்டு குடும்பத்தை சீரழித்து அடுத்தவர்களையும் கெடுப்பது தான் இந்த படத்தின் மூலக்கதை.

தயாரிப்பாளரே கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.. அவர்தான் அங்கையற்கண்ணன். குடிப்பதற்காகவே படம் எடுத்து கடைசியில் அட்வைஸ் செய்கிறார் இந்த நாயகன்

இவரின் மாமாவாக இயக்குனர் சரவணசக்தி. அவருக்கும் ஏற்ற வேடம்தான். இருவரும் குடித்துவிட்டு குடும்பத்தை கவனிக்காமல் அலைவதும் இவர்களின் மனைவிகள் கட்டுக்கோப்பாக இருந்து வேலைக்கு செல்வதும் என நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள்.

இப்படிப்பட்ட குடிகாரர்களின் மனைவிமார்கள் இவ்வளவு அன்பாக இருப்பார்கள் என்ன.? மாமா.. மாமா.. என்று பாச மழை பொழிகிறார்கள்..

பெரும்பாலும் குடிகாரர்கள் வேடத்தில் நடிகர் மயில்சாமியை பல படங்களில் பார்த்திருப்போம். ஆனால் இதில் நல்லவராக இருக்கிறார்.

கதைப்படி ஒரு காலத்தில் குடிகாரராக இருந்தாராம்.. திருந்திய பிறகு கொஞ்சம் அட்வைஸ் செய்கிறார். ஆனாலும் ஒரு கட்டத்தில் இவரே குடிகாரனாக மாறிவிடுகிறார்.

‘நல்லவன் குடிச்சா குழந்தை, கெட்டவன் குடிச்சா கொலைகாரன்’ என்ற தத்துவம் பேசி செல்கிறார்.

டாக்டராக டி எம் கார்த்திக் நடித்திருக்கிறார். நல்ல மருத்துவராக இருந்த இவரையும் குடிகாரனாக மாற்றி விடுகிறார்கள் கதையின் நாயகர்கள்.. அதுபோலவே அமெரிக்க மாப்பிள்ளையாக சாம்ஸ்.. இவரும் ஒரு கட்டத்தில் குடிகாரனாக மாறிவிடுகிறார்.. இவர் வரும் நேரத்தில் சிரிப்பலையை தியேட்டரில் கேட்க முடிகிறது.

அயலி அபிநட்சத்திர கொஞ்ச நேரம் என்றாலும் சிந்திக்கவும் ரசிக்கவும் வைக்கிறார்.. இவரின் கிளைமாக்ஸ் முடிவு எதிர்பாராத ஒன்று.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி.

நாயகனுக்கு மனைவியாக பிரணா.. கணவன் குடித்துவிட்டு வந்தாலும் அடித்தாலும் எதையும் கேட்காத அப்பாவி மனைவியாக நடித்திருக்கிறார்..

சரவணசக்திக்கு மனைவியாக நடித்தவரும் நல்ல இளமையுடன் வசீகரமாக வருகிறார்.

வாடா மச்சி கட தொறந்தாச்சு’, ‘அடிக்கிற பொண்டாட்டி தெருவுல நிப்பாட்டி’ பாடல்கள் குடிகாரர்களுக்கு தேசிய கீதமாக மாறினாலும் ஆச்சரியம் இல்லை..

படத்தின் ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் பாராட்டுக்குரியவை.

படத்தின் இயக்கம் ‘குட்டிப்புலி சரவணன் சக்தி.

கதாநாயகனும் இயக்குனரும் போட்ட ஆட்டத்திற்கு அளவே இல்லை படம் முழுக்க சரக்கு வாடை வீசுகிறது.

படம் முழுவதும் சரக்கு வடை வீசினாலும் படத்தின் இறுதியில் குடியால் பல குடும்பங்கள் அழியும் விதத்தை சொன்னதற்கு இயக்குனருக்கு நன்றி.

இந்த கிளாஸ்மேட் கண்டிப்பா ஒவ்வொருவரும் உங்களுடைய கிளாஸ்மேட்டுடன் பார்க்க வேண்டிய படம்
Previous Post

பைரி – விமர்சனம்

Next Post

ரஸாக்கர் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!

Next Post

ரஸாக்கர் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!

Popular News

  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • பீப் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.