• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மூன்று கதாநாயகர்கள் நடிக்கும் பான் இந்தியா படம் தரைப்படை

by Tamil2daynews
December 19, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மூன்று கதாநாயகர்கள்  நடிக்கும் பான் இந்தியா படம் தரைப்படை

 

ஒரு படத்தின் கதை தொடங்கியவுடன் அந்த படத்தின் கதாநாயகன் யார் வில்லன் யார் என்று தெரிந்துவிடும்  .அப்படி வழக்கமான அதே வார்ப்பில் தான் எல்லா திரைப்படக்கதைகளும் அமைக்கப்படுகின்றன.படம் பார்க்கும் ரசிகர்களின் மனதில் இவர் ஹீரோ , இவர் வில்லன்  என்று படம் தொடங்கிய சில காட்சிகளிலேயே தெரிந்துவிடும்.

ஆனால் ஒரு கதையில் யார் கதாநாயகன் யார் வில்லன் என்று தெரியாத வகையில் அந்தந்த கதாபாத்திரத்தின் கறுப்பு வெள்ளைப் பக்கங்களைப் புரட்டிக் காட்டப்படுகின்றன . ரசிகர்களுக்கு யார் நேர்நிலை நாயகன்? யார் எதிர்மறை நாயகன் ? என்று புரியாது.

அப்படி ஒரு கதையாக எடுத்து உருவாகி இருக்கும் படம் தான்
‘தரைப்படை’  .
இது ஒரு கேங்ஸ்டர் சம்பந்தமான கதை.

மல்டி லெவல் மார்க்கெட்டிங் எனப்படும் சங்கிலித் தொடர் சந்தைப்படுத்துதல் மூலம் ஒரு மோசடிக் கும்பல் மக்கள் பணத்தை அபகரிக்கிறது. அந்தக் கும்பலிடமிருந்து இந்த கேங்ஸ்டர் கும்பல் அந்தப் பணத்தைக் கைப்பற்றுகிறது. இப்படி அந்தப் பணம் மாறி மாறி மனிதர்களிடம் போய்க் கொண்டிருக்கிறது. இறுதியில் எங்கே செல்லும் என்று சொல்ல முடியாத அளவிற்குப் பயணம் நிகழ்கிறது.படத்தின் கதையையும் காட்சிகளையும் பார்க்கும் போது யார் நல்லவன் ? யார் கெட்டவன்? என்று தெரியாத வகையில் விறுவிறுப்புடன் உருவாகி இருக்கும் படம் தான் ‘தரைப்படை’ . இந்தப் படத்தை ராம்பிரபா இயக்கியுள்ளார். ஸ்டோனக்ஸ் நிறுவனத்தின் சார்பில் P.B. வேல்முருகன் தயாரித்துள்ளார்.

அது என்ன தரைப்படை?

அதாவது எளிய மக்களிடம் இருக்கும் ஒரு வன்முறைக் கும்பல் எப்படி கூட்டமாக இருந்து பிறருக்குத் தொல்லை கொடுக்கிறது?.திரை மறைவு வேலைகளையும் சட்டவிரோத காரியங்களையும் குழுவாக நின்று எப்படி சாதிக்கிறது? என்ற கருத்தைக் குறிப்பிடும் வகையில் தான்  ‘தரைப்படை’  என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில்  ஜீவா , பிரஜின், விஜய் விஷ்வா என்று மூன்று கதாநாயகர்கள் நடித்திருக்கிறார்கள்.

 அந்த மூன்று நாயகர்களும் அவரவரும் தங்களுக்கான அடையாளங்களைத் தேடிக்கொண்டிருப்பவர்கள்.

ஜீவா நடித்த கொம்பு படத்தில் அவர் கதாபாத்திரம் பேசப்பட்டது. இந்த ஜீவா, ரஜினி ரசிகர்களிடம் நன்கு பிரபலமானவர் .ரஜினி போல் மேனரிசம் காட்டுவதில் தனக்கென தனி இடம் பிடித்தவர்.

அதேபோல நல்ல கதையைத்  தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகராக பிரஜின் இருக்கிறார் .அவர் நடித்த D3 திரைப்படம் தமிழ்நாட்டை விடவும் கேரளாவில் அதிக வசூல் பெற்றுத் தந்துள்ளது.

விஜய் விஷ்வா சமூக சேவைகள் மூலமும் சில குறிப்பிடத்தக்க படங்களின் பாத்திரங்கள் மூலமும் மக்களிடம் நன்கு அடையாளப்
படுத்தப்பட்டுள்ளவர் .

இப்படி தனித்தனியான அடையாளம் பெற்ற மூன்று பேரும் கதாநாயகர்களாக நடித்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு ஜோடியாக மூன்று அறிமுக நிலை கதாநாயகிகளும் நடிக்கிறார்கள்.

படத்திற்காகக் கோடிக் கணக்கில் செலவழித்து  கலை இயக்குநர் ரவீந்திரன் கைவண்ணத்தில் ஒரு பிரமாண்டமான ஏர்போர்ட் செட் போடப்பட்டுள்ளது .அதில் படத்தில் முக்கியமான காட்சிகள் படமாகி உள்ளன .

மிரட்டல் செல்வாவின் இயக்கத்தில் ஆறு சண்டைக் காட்சிகள் படமாகியிருக்கின்றன இயக்குநர் ராம்பிரபாவுடன் சுரேஷ்குமார் சுந்தரம், மனோஜ் குமார் பாபு, ராம்நாத், ரவீந்திரன்,  மிரட்டல் செல்வா, S.V. ஜாய்மதி, ராக் சங்கர்,சரண் பாஸ்கர், ராஜன் ரீ,குருதர்ஷன், மேகமூட்டம் வைத்தி, நித்திஷ் ஸ்ரீராம் , பவிஷி பாலன்,ஸ்ரீ சாய் ஸ்டுடியோ, வெங்கட் எனப் பல்வேறு  திறமைசாலிகளுடன் கூட்டணி சேர்த்துக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தின் கதை , மொழியைத் தாண்டி ரசிக்கப்படும் என்பதால் தமிழ் மட்டுமல்ல தெலுங்கு ,ஹிந்தி என்று பிற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. இப்படி ‘தரைப்படை’ திரைப்படம் ஒரு பேன் இந்தியா படமாக உருவாகிக் கொண்டு இருக்கிறது. படத்தின் தொழில்நுட்பப் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன.
Previous Post

“அரணம்” திரைப்படதின் இசை வெளியீட்டு விழா !!

Next Post

பாலாவின் வணங்கான் படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்

Next Post

பாலாவின் வணங்கான் படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்

Popular News

  • திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து U சான்றிதழ் பெற்ற “அங்கீகாரம்” திரைப்படம் ஜூன் 26-ல் ரிலீஸ்.

    0 shares
    Share 0 Tweet 0
  • கே.வி.என். புரொடக்ஷன்ஸ்‌ மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள “பாலன் தி பாய்” ஜூன் 19, 2026 அன்று மலையாளம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜியாவின் “அவன் இவள்” பர்ஸ்ட் லுக் வெளியானது

    0 shares
    Share 0 Tweet 0
  • பட்டி தொட்டி எங்கும் வைரலான ‘பகாசுரன்’ பாடல்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0

Recent News

கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு; பின்னணி பணிகள் தொடக்கம்

June 7, 2026
ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரஜின் நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரஜின் நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

June 7, 2026

திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து U சான்றிதழ் பெற்ற “அங்கீகாரம்” திரைப்படம் ஜூன் 26-ல் ரிலீஸ்.

June 7, 2026

நடிகர் ரவி தேஜாவின் முதல் தமிழ்–தெலுங்கு இருமொழிப் படம் ‘இருமுடி கட்டு’! தந்தை–மகள் பாசம், ஆன்மிகம் மற்றும் மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான படைப்பாக உருவாகியுள்ளது!

June 7, 2026

ஜூன் 12 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் டபுள் ஆக்குபன்சி திரைப்படம்!

June 7, 2026

பரிமளா & கோ – விமர்சனம்

June 7, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.