• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பிரைம் வீடியோவின் அசல் தமிழ் நகைச்சுவை படைப்பான ‘தலைவெட்டியான் பாளையம்’ எனும் இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு

by Tamil2daynews
September 14, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பிரைம் வீடியோவின் அசல் தமிழ் நகைச்சுவை படைப்பான ‘தலைவெட்டியான் பாளையம்’ எனும் இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு

 

பிரைம் வீடியோ – அதன் அசல் இணையத் தொடரான ‘தலைவெட்டியான் பாளையம்’ எனும் நகைச்சுவை இணைய தொடரின் வசீகரமான முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் உள்ளார்ந்த கிராமத்தின் பின்னணியில் அமைந்திருக்கும் இந்த இணைய தொடர் எளிமையானதாகவும், அதே தருணத்தில் பிடிவாதமான கதையம்சத்தின் மூலம் மனதைக் கவரும் வகையிலும் நகைச்சுவையுடன் தயாராகி இருக்கிறது.‌

இயக்குநர் நாகா இயக்கத்தில் உருவாகி இருக்கும் அசல் தமிழ் இணையத் தொடரான ‘தலைவெட்டியான் பாளையம்’ எனும் இந்த தொடருக்கு பாலகுமாரன் முருகேசன் கதை எழுத, தி வைரல் ஃபீவர் எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இனிமையான மற்றும் ஆழமான கதைச் செழுமையுள்ள இந்த இணையத் தொடருக்கு எம். எஸ். கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். ‘தலை வெட்டியான் பாளையம்’ இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் செப்டம்பர் 20 ஆம் தேதி அன்று பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக வெளியாகிறது.

முன்னோட்டம் இணைப்பு இங்கே…

மும்பை -செப்டம்பர் 13 2024- இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுது போக்கு தளமான பிரைம் வீடியோ – விரைவில் வெளியாகவிருக்கும் தமிழ் அசல் இணையத் தொடரான ‘தலைவெட்டியான் பாளையத்தின் முன்னோட்டத்தை இன்று வெளியிட்டிருக்கிறது.

இயக்குநர் நாகா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த இணையத் தொடரை பாலகுமாரன் முருகேசன்  கதை எழுதி, தி வைரல் ஃபீவர் எனும் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கிறார். எட்டு அத்தியாயங்கள் கொண்ட இந்த நகைச்சுவை இணைய தொடர் – தமிழகத்தின் தொலைதூர கிராமமான தலைவெட்டியான் பாளையத்தில் தனது புதிய மற்றும் அறிமுகம் இல்லாத சூழலில் சவால்களை எதிர்கொள்ளும்.. மாநகரத்தை சேர்ந்த ஒருவரின் பயணத்தை மையமாகக் கொண்டிருக்கிறது. இந்த குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய இணைய தொடரில் திறமையான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.‌ குறிப்பாக இந்த இணையத் தொடரில் அபிஷேக் குமார், சேத்தன் கடம்பி, தேவதர்ஷினி, நியாதி, ஆனந்த் சாமி , பால்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘தலைவெட்டியான் பாளையம்’ பிரைம் வீடியோவில் இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் செப்டம்பர் 20ஆம் தேதி அன்று தமிழிலும், ஆங்கில வசனங்களுடனும் பிரத்யேகமாக வெளியாகிறது.‌ ‘தலைவெட்டியான் பாளையம்’ பிரைம் வீடியோவின் உறுப்பினர்களுக்கான பட்டியலின் அண்மைய சேர்க்கையாகும்.‌ இந்தியாவில் உள்ள பிரைம் உறுப்பினர்கள் ஆண்டிற்கு ₹ 1,499/- மட்டும் செலுத்தி உறுப்பினராக சேரலாம். மேலும் இந்தப் பட்டியலில் சேரும் உறுப்பினர்கள் சேமிப்பு, வசதி மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை அனுபவிக்கிறார்கள்.
பிரைம் வீடியோவின் அசல் தமிழ் நகைச்சுவை படைப்பான 'தலைவெட்டியான் பாளையம்' எனும் இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடுதலை வெட்டியான் பாளையத்தின் முன்னோட்டம்… விசித்திரமான கதாபாத்திரங்கள்- எதிர்பாராத சவால்கள் நிறைந்த கிராமத்தில் பயணிக்கும் சித்தார்த்தின் கிராமப்புற வாழ்வியலின் விசித்திரங்களுக்கு ஏற்ப.. பார்வையாளர்களை அவரின் உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார். கூர்மையான உரையாடல்கள்- நகைச்சுவையான ‘பஞ்ச்’ லைன்கள்- மற்றும் மகிழ்வான தருணங்களுடன் கிராமத்தின் இயல்பான வாழ்வியலை ஆராய்கிறது. அதே தருணத்தில் கிராமப்புற பின்னணியின் நிலவியல் அழகை நேர்த்தியாக காட்சிப்படுத்தி இருக்கிறது.‌ மேலும் இந்த இணைய தொடர் உண்மையான ஆசைகள்- உயர்ந்த லட்சியங்கள்- கருணை- பொறாமை – போன்ற உணர்ச்சிகளின் பிரதிபலிப்பாகவும், அதே தருணத்தில் எளிய கதையாகவும் அமைந்திருக்கிறது.  நடிகர்களின் சிறப்பான நடிப்பும், அவர்கள் ஏற்றிருக்கும் கதாபாத்திரங்களின் ஆழத்தையும், யதார்த்தத்தையும் திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள். இதனால் பார்வையாளர்களுக்கு பல பரிணாமங்கள் கிடைக்கின்றன. எம். எஸ். கிருஷ்ணாவின் ஆத்மார்த்தமான மெல்லிசை இந்த இணைய தொடரின் வசீகரத்தை மேலும் உயர்த்துகிறது.‌

இந்த இணைய தொடர் பற்றி இயக்குநர் நாகா பேசுகையில், ” தலை வெட்டியான் பாளையம் கிராமப்புற வாழ்வை பற்றிய ஓர் இதயப்பூர்வமான கதையை விவரிக்கிறது.  சமூகம் மற்றும் பாரம்பரியத்தின் முக்கிய கருப் பொருளுடன் நகைச்சுவையையும் கலந்திருக்கிறது. தி வைரல் ஃபீவர் நிறுவனம் மற்றும் பிரைம் வீடியோவுடன் இணைந்து பணிபுரிவது அற்புதமான அனுபவம்.  இந்த இணையத் தொடரை உருவாக்குவதில் என்னுடைய பார்வையின் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையும், அவர்கள் வழங்கிய அசைக்க முடியாத ஆதரவும் என்னை கவர்ந்தது. மேலும் திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினருடன் இணைந்து பணியாற்றியதும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களின் ஒத்துழைப்பு இந்த கதைக்கு மேலும் வலு சேர்த்தது. பிரைம் வீடியோவின் சர்வதேச அளவிலான அணுகுமுறைக்கும் நன்றி. தமிழ்நாட்டிற்குள்ளும், இந்தியாவிற்குள்ளும் சர்வதேச அளவிலும் எங்களின் உழைப்பை எடுத்துச் செல்வதால் பிரைம் வீடியோவிற்கு மேலும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இணையத் தொடரை பார்வையாளர்கள் ரசிப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

கதையின் நாயகனான சித்தார்த் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் அபிஷேக் குமார் பேசுகையில், ” தலைவெட்டியான் பாளையத்தில் பணிபுரிவது ஒரு நம்ப முடியாத பயணமாக இருந்தது. இயக்குநர் நாகாவுடன் இணைந்து பணியாற்றியதும் மிகப்பெரிய கற்றல் அனுபவமாக இருந்தது. அவருடைய சௌகரியமான தளத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் உருவாக்கிய உலகத்தில் உலவும் ஒரு கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். தமிழ்நாட்டின் கிராமத்தில் வசிக்கும் மாநகரத்துவாசியின் நிஜ வாழ்க்கையை சவால்களுடன் நகைச்சுவையையும் அழகாக இணைத்திருக்கிறார். இந்தத் தொடரில் நாயகன் சித்தார்த்தின் வாழ்க்கையில் நடைபெறும் எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் சுவராசியமான அம்சங்களை பார்வையாளர்கள் ரசிப்பார்கள் என நம்புகிறேன். இந்த இணைய தொடரை செப்டம்பர் 20ஆம் தேதி இந்தியாவிலும், 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் பிரைம் வீடியோவில் முதல் காட்சியைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன். ” என்றார்.
பிரைம் வீடியோவின் அசல் தமிழ் நகைச்சுவை படைப்பான 'தலைவெட்டியான் பாளையம்' எனும் இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு - Film Flick
இந்த இணையத் தொடரில் மீனாட்சிசுந்தரம் எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் சேத்தன் கடம்பி பேசுகையில், ” நான் எப்போதும் வித்தியாசமான மற்றும் தனித்துவமான கதாபாத்திரங்களை நடிப்பதற்காக தேடுவேன். தலைவெட்டியான் பாளையத்தில், தனது கிராமத்தில் உள்ள மக்களுடன் எப்போதும் மற்றவர்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கும் மீனாட்சி சுந்தரம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். நான் அந்தக் கதாபாத்திரம்- உடனடியாக ரசிகர்களுடன் தொடர்புப் படுத்திக்கொள்வதையும் கண்டேன். நகைச்சுவை மற்றும் உணர்ச்சியுடன் கலந்த கலவையானது இந்த கதாபாத்திரம். மேலும் இதில் நடிக்கும் போது பரந்த அளவிலான உணர்வுகளை வெளிப்படுத்தவும் எனக்கு வாய்ப்பளித்தது. இந்தத் தொடரில் எனது மனைவி மற்றும் மகளுடன் இணைந்து பணியாற்றியதால்.. மேலும் உற்சாகத்தை அளித்தது. உணர்வுபூர்வமான மற்றும் எதிர்பாராத சுவராசியமான திருப்பங்களை கொண்ட இந்த இணையத் தொடரை பார்வையாளர்கள் விரும்புவார்கள் என நம்புகிறேன். மேலும் பிரைம் வீடியோவில் உலக அளவில் இந்த தொடர் வெளியாகும் தருணத்தை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

இந்த இணையத் தொடரில் மீனாட்சி தேவி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை தேவதர்ஷினி பேசுகையில், ” தலைவெட்டியான் பாளையம் போன்ற நகைச்சுவை பின்னணியிலான இணையத் தொடரில் நடித்தது ஒரு மறக்க முடியாத அழகான அனுபவம் . மீனாட்சி தேவி எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம்.. பல பெண்களைப் போலவே தன் குடும்பம் மற்றும் தினசரி பொறுப்புகளுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க முடிந்தது. இருப்பினும் இந்த கதை களத்தில் உள்ள நகைச்சுவைகள் மற்றும் ஆச்சரியமான திருப்பங்களால் மீனாட்சி தேவியை தனித்துவமாக காட்சிப்படுத்தி இருக்கின்றனர். அவர் கிராமத்தில் உள்ள பகுத்தறிவின் குரலாகவும் தோன்றுகிறார். மேலும் அவரது நடைமுறை மற்றும் அடிப்படையான ஆளுமையை திரையில் கொண்டு வருவதை நான் விரும்பினேன். செப்டம்பர் 20ஆம் தேதி அன்று பிரைம் வீடியோவில் வெளியாகும் இந்த இணைய தொடரின் பிரத்யேக காட்சியைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

Previous Post

நடிகை சாந்தி பாலச்சந்திரன் திரைக்கதை எழுதுவதிலும் தடம் பதிக்கிறார்!

Next Post

நந்தன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

Next Post

நந்தன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

Popular News

  • கண்ணப்பா – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • திருமலை புரொடக்ஷன் கே. கருப்புசாமி தயாரிப்பில் சுகவனம் இயக்கத்தில் கொங்கு மண்ணையும் அதன் மக்களையும் கலப்படமில்லாமல் காட்சிப்படுத்தும் திரைப்படம் ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’

    0 shares
    Share 0 Tweet 0
  • “எமகாதகி” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !

    0 shares
    Share 0 Tweet 0
  • “மதகஜராஜா எந்த ஸ்டேஷனிலும் நிற்காமல் போகும் ட்ரெயின்” ; விஷால் உற்சாகம்

    0 shares
    Share 0 Tweet 0
  • வீ.ஆர். சினி கிரியேஷன்ஸ் சார்பில் டாக்டர் அருண் பிரசாத் அவர்களின் முதல் தயாரிப்பில் விரைவில் படப்பிடிப்பு தொடங்க விருக்கும் சைன்ஸ் ஃபிக்ஷன் திரில்லர் திரைப்படம் தீ ஸ்டிங்கர் .

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !!

November 2, 2025

‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழா !!

November 2, 2025

தேசிய தலைவர் – விமர்சனம்

November 2, 2025

Verus Productions வழங்கும் கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் “ROOT” – படப்பிடிப்பு நிறைவு!

November 2, 2025

BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

November 2, 2025

தடை அதை உடை – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

November 2, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.