• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தனது பிரம்மாண்டமான படங்கள் வரிசையை காணொலியாக வெளியிட்டது !!

by Tamil2daynews
June 28, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தனது பிரம்மாண்டமான படங்கள் வரிசையை காணொலியாக வெளியிட்டது !!

 

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம், 2025 முதல் 2027 வரை தயாராகி  திரையரங்குகலீல் வெளியாகவுள்ள, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும்,  திரைப்படங்களின் வரிசையை,  அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் இன்று பிரம்மாண்டமாக வெளியிட்டது.

இந்த திரைப்பட வரிசை வீடியோவில், கமர்ஷியல் ப்ளாக்பஸ்டர் படங்கள், சமுதாய அக்கறை  அடிப்படையிலான சினிமாக்கள் மற்றும் ஹை-கான்செப்ட் ஜானர் படங்கள் பல்வேறு படங்கள் இடம்பெற்றுள்ளது.  இந்திய சினிமாவில் வேல்ஸ் ஃபிலிம் ஸ்டூடியோவின் தலைசிறந்த நிலையை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த வீடியோ அமைநள்ளது.

இந்த பட்டியலில், இந்திய சினிமாவின் பிரபல மற்றும் புதிய தலைமுறை இயக்குநர்களான சுந்தர் C, கவுதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன், மாரி செல்வராஜ், பிரேம் குமார், ஜூட் ஆண்டனி ஜோசப், அருண்ராஜா காமராஜா, விக்னேஷ் ராஜா, செல்ல அய்யாவு மற்றும் கணேஷ் கே. பாபு ஆகியோர்  இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், வி.ஜே. சித்து  இயக்குனராக அறிமுகமாகும் படமும் இடம்பெற்றிருப்பது,  புதிய இயக்குநர்களை ஊக்குவிக்கும் வேல்ஸ் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை உணர்த்துகிறது.

இந்தப் படங்களில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் தனுஷ், ரவி மோகன்,நயன்தாரா மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் உள்ளனர் – இது, திறமையான நடிப்பும், பரந்த வணிக பரவலும் இணைந்த பவர்ஃபுல்லான கலவையாகும்.

வேல்ஸ் நிறுவனம், புதிய இயக்குனர்களும், புதுமுக நடிகர்களும் பங்கேற்கும் பல புதிய திட்டங்களைப் பற்றியும் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளது – இது புதிய தலைமுறை திறமையாளர்களுக்கான வாய்பாக  இருக்கும்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலின் தலைவர் டாக்டர். ஐசரி கே. கணேஷ் கூறியதாவது…

“இந்த திரைப்பட வரிசை எங்களின் அடுத்த அத்தியாயத்தை குறிக்கிறது – வலிமையான மற்றும் ஆழமான கதைகள் கொண்ட மிகபெரிய வரிசையாகும். இந்திய சினிமாவின் மிகச்சிறந்த படைப்பாளிகளுடன் கைகோர்க்கும் வாய்ப்பு கிடைத்ததில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இப்படங்கள் பல தளங்களிலும், பல மொழிகளிலும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.”
VELS Film International announces grand lineup of Tamil films slated to release between 2025-2027கோமாளி, வெந்து தணிந்தது காடு (VTK), எல் கே ஜி , மற்றும் மூக்குத்தி அம்மன் போன்ற வெற்றிப் படங்களை வழங்கிய வேல்ஸ் நிறுவனம், தற்போது
புரடக்சன் டிஸ்டிரிபுயூசன் என முழுமையான பணிகளை மேற்கொள்ளும் ஸ்டுடியோவாக வளர்ந்து வருகிறது.

வேல்ஸ் நிறுவனம் தற்போதைய வளர்ச்சிக்காக, டிஜிட்டலில்  கதைகளுக்கான தனிச்சிறப்பு டெவலப்மென்ட் அணியையும் உருவாக்கி வருகிறது.

இந்தத் திட்டம், பல மாதங்களுக்கு மேலாக திட்டமிடப்பட்டு, படைப்பாற்றலும் வணிக ரீதியிலும் திட்டமிடப்பட்ட ஒரு நுணுக்கமான செயலாகும். நிறுவனத்தை மறுசீரமைத்து, பல துறைகளில் திறமைமிக்க நபர்களை இணைத்து, வருங்கால வளர்ச்சியை உறுதி செய்யும் முயற்சியில் இது ஒரு முக்கிய அங்கமாகும்.

ஸ்டுடியோ மற்றும் உள்கட்டமைப்பு விரிவாக்கம்:

🔹 ஸ்டுடியோ அபிவிருத்தி:
வேல்ஸ் நிறுவனம் தற்போது இந்தியாவின் மிகப்பெரிய இண்டோர் ஸ்டுடியோவைக் கட்டி வருகிறது (சென்னையில்) மற்றும் மேலும் பல ஸ்டுடியோக்களை கைப்பற்றும் பேச்சுவார்த்தையில் உள்ளது.

🔹 தீம் பார்க் மற்றும் ஸ்டுடியோ :
வேல்ஸ்  நிறுவனத்தின்  “வேல்ஸ் ஜாலி வுட் “தீம் பார்க் மற்றும் ஸ்டுடியோ வளாகம் கர்நாடகாவில் செயல்படுகிறது – இது வேல்ஸ் நிறுவனத்தின் புரடக்‌ஷன் உள்கட்டமைப்பைப் பலப்படுத்துகிறது.

🔹 திரையரங்குகளின் கொள்முதல் திட்டம்:
வேல்ஸ் நிறுவனம் tier-2 மற்றும் tier-3 நகரங்களில் திரையரங்குகளை வாங்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. இது விநியோகம் மற்றும் திரையரங்கு காட்சிப்படுத்தலில் வேல்ஸுக்கு முழுக்கட்டுப்பாட்டை வழங்கும்.

வேல்ஸ் நிறுவனத்தின் தற்போதைய விரிவாக்கம், ஓர் வருட காலம் திட்டமிடப்பட்டு, படைப்பாற்றலுடனும் வணிக நோக்கிலும் விரிவுபடுத்திய ஒரு செயல்முறையின் உச்சமாகும்.

ஒவ்வொரு சக்திவாய்ந்த படைப்புடனும், வேல்ஸ்  இந்திய சினிமாவின் எதிர்காலத்தை மாற்றும் கதைகளை உருவாக்கும் நோக்கத்துடன் தொடர்ந்து பயணிக்கிறது.

Previous Post

நடிகர் சித்தார்த்தின் ‘3 BHK’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

Next Post

யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது . 50 நாட்களில் வெளியாகவுள்ள வார் 2 படத்திற்காக புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்!

Next Post

யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது . 50 நாட்களில் வெளியாகவுள்ள வார் 2 படத்திற்காக புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்!

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • மார்வெல் குடும்பத்தின் மிஸ்டர் ரீட், சூ ஸ்டார்ம் மற்றும் பிறரின் பவர் பற்றி இங்கே பார்க்கலாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • “Vyom Entertainments” நிறுவனம், இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், செல்வராகவன் நடிப்பில் “Untitled Production No.1” என்ற பெயரில் தனது முதல் படத்தை 2–ஜூலை–2025 அன்று துவக்குகிறது.

    0 shares
    Share 0 Tweet 0
  • நமித் மல்ஹோத்ராவின் ராமாயணம் – உலகின் மிகப்பெரிய காவியத்தின் அறிமுகம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஃபீனிக்ஸ் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜியோஹாட்ஸ்டாரில் வெளியானது ‘குட் வொய்ஃப்’ இணையத் தொடர்…அதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் ஹைலைட்ஸ்!

July 5, 2025

ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த ‘லவ் மேரேஜ்’ படக்குழு

July 5, 2025

ஃபீனிக்ஸ் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

July 5, 2025

பறந்து போ – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

July 5, 2025

3 BHK விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

July 5, 2025

”இயக்குநர் ராமிடம் நிறைய கற்றுக் கொண்டேன்”- நடிகை கிரேஸ் ஆண்டனி!

July 5, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.