• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சீயான் பிறந்தநாள் கொண்டாட்டமாக அறிவிக்கப்பட்ட “சீயான் 63” புதிய படம் !!

by Tamil2daynews
April 17, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சீயான் பிறந்தநாள் கொண்டாட்டமாக அறிவிக்கப்பட்ட “சீயான் 63” புதிய படம் !!

 

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிககரான சீயான் விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது புதிய படம் ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை ஆனந்த் சங்கர் இயக்குகிறார்.

இந்த படத்தின் அறிவிப்பு, சீயான் விக்ரம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, ஒரு ஸ்டைலிஷ் புரோமோ வீடியோவுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புரோமோ வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இப்போதே ரசிகர்கள் மத்தியில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை  பெருமளவில்  உயர்த்தியுள்ளது.

தனித்துவமான கதைக்களம்  மற்றும்  ஸ்டைலிஷ் திரைக்காட்சிகளின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர்  ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்குகிறார். 2016 ல்  சீயான் விக்ரம் கூட்டணியில் இவர் இயக்கிய  “இருமுகன்”  படம், ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. தற்போது இந்த கூட்டணி  10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர் என்பது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் TG தியாகராஜன் வழங்க, பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட படைப்பாக செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து தயாரிக்கின்றனர்.
தனித்துவமான பின்னணி இசைக்காக புகழ்பெற்ற சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இவரின் இசை இந்த படத்தின் மாஸ் மற்றும் எமோஷனல் அம்சங்களை மேலும் உயர்த்தும்.

அனுபவமிக்க ஒளிப்பதிவாளர் R. D. ராஜசேகர் ISC ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குநராக சூர்யா ராஜீவன் பணியாற்றுகிறார்.  வசனங்களை ஷான் கருப்புசாமி எழுதுகிறார்.  தயாரிப்பு வடிவமைப்பாளராக ராஜீவன்,
படத்தொகுப்பாளராக ரேமண்ட் டெரிக் கிராஸ்டா, ஆடை வடிவமைப்பாளராக  பூர்ணிமா ராமசாமி ஆகியோர் பணியாற்றுகின்றனர். இவர்களின் தொழில்நுட்ப பங்களிப்பு படத்தின் காட்சியமைப்பை உலகத் தரத்தில் கொண்டு செல்லும்.

“சீயான் 63” படம், சீயான் விக்ரமின் திரை வாழ்க்கையில் இன்னொரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதில் பெயர் பெற்ற அவர், இந்த படத்திலும் புதிய பரிமாணத்தில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவார் என நம்பப்படுகிறது.

மொத்தத்தில், வெற்றிகரமான கூட்டணி, திறமையான தொழில்நுட்பக் குழு மற்றும் பெரிய அளவிலான தயாரிப்புடன் உருவாகும் இந்த “சீயான் 63” பட அறிவிப்பு,  அவரது பிறந்தநாளில்  ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

நடிகர் :

சீயான் விக்ரம்

தொழில்நுட்பக் குழு
எழுத்து & இயக்கம் : ஆனந்த் சங்கர்
தயாரிப்பு நிறுவனம் : சத்ய ஜோதி பிலிம்ஸ்

வழங்குபவர் : TG.தியாகராஜன்
தயாரிப்பாளர்கள் : செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன்
இணை தயாரிப்பு : G. சரவணன் மற்றும் சாய் சித்தார்த்
இசை : சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு : R.D. ராஜசேகர்  ISC
தயாரிப்பு வடிவமைப்பு : ராஜீவன்
வசனம் : ஷான் கருப்புசாமி
படத்தொகுப்பு : ரேமண்ட் டெரிக் கிராஸ்டா
கலை இயக்கம் : சூர்யா ராஜீவன்
ஆடை வடிவமைப்பு : பூர்ணிமா ராமசாமி
Link   :  https://www.youtube.com/watch?v=VL34SYoMS_g
Previous Post

நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் டைட்டில் வெளியீடு

Next Post

“கான் சிட்டி” முதல் சிங்கிள் வெளியீடு…, வைரலாகும் கொரியன் ஃபேமிலி சாங் “ரா ரா ரங்கையா” குத்துப்பாடல்!

Next Post

“கான் சிட்டி” முதல் சிங்கிள் வெளியீடு…, வைரலாகும் கொரியன் ஃபேமிலி சாங் “ரா ரா ரங்கையா” குத்துப்பாடல்!

Popular News

  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

    0 shares
    Share 0 Tweet 0
  • சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

    0 shares
    Share 0 Tweet 0
  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, ‘ரைட்டர்’ பட இயக்குநரும் ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு மற்றும் புது வரவான பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்ற விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.

    0 shares
    Share 0 Tweet 0
  • முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!

August 26, 2026

சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

August 26, 2026

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

August 26, 2026

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

August 26, 2026

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் வெளியீட்டு தேதி & பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

August 26, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

August 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.