• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

அஸ்வின்ஸ் – விமர்சனம்

by Tamil2daynews
June 21, 2023
in விமர்சனம்
0
0
SHARES
45
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அஸ்வின்ஸ் – விமர்சனம்

 

ஒரு பக்கவான திகில் படம் பார்த்து ரொம்ப நாளாச்சுன்னா,நீங்க நிச்சயமா இந்த அஸ்வின்ஸ் படத்துக்கு போகலாம்.நிச்சயமா ஒரு சூப்பரான திகில் அனுபவத்தை கொடுக்கும்.

லண்டனில் உள்ள தீவில் ஆடம்பரமான பங்களா ஒன்றில் வாழ்ந்த பிரபல தொல்பொருள் ஆராய்ச்சியாளரான பிரியா ராமன் அங்கிருந்த 15 ஊழியர்களை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துக் கொண்டார்.

கைப்பற்றப்பட்ட அவருடைய சடலம் திடீரென்று மாயமாகி விடுகிறது அவரது சடலம் எப்படி மாயமானது எங்கிருக்கிறது என்பதை புரியாத புதிராக இருப்பதோடு அந்த பங்களாவில் பல அமானுஷ்ய விஷயங்கள் இருப்பதாக கதை நகர்கிறது.

இப்படிப்பட்ட பங்களாவையும் அதன் முழு விபரத்தையும் ஒரு வீடியோ படமாக எடுத்துக் கொடுக்க கூடிய வேலைக்காக நாயகன் வசந்த் ரவி, சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயதீப், சிம்ரன் பரீக் ஆகிய ஐந்து பேரும் இந்தியாவில் இருந்து லண்டன் செல்கிறார்கள்

அப்போது அவர்கள் எதிர்கொள்ளும் அமானுஷ்ய விஷயங்களும் அதன் பின்னணியையும் சுவாரஸ்யமாக மட்டும் இன்றி நொடிக்கு நொடி திகிலடைய செய்யும் விதத்தில் சொல்வது தான் ‘அஸ்வின்ஸ்’.
புராணத்தில் உள்ள அஸ்வின் கடவுள் பற்றிய சிறு கதையை மையமாக எடுத்துக்கொண்டு மிரட்டும் வகையிலான திகில் திரைக்கதையை ரசிகர்கள் காட்சிக்கு காட்சி மிரட்சி அடையும் வகையில் சொல்லியிருக்கிறது அஸ்வின்ஸ் திரைப்படம்

நாயகனாக நடித்திருக்கும் வசந்த் ரவி அமானுஷ்ய பங்களாவில் நடக்கும் பயங்கரமான சம்பவங்களை தனது நடிப்பு மூலம் நேர்த்தியாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கிறார்.

அவருடைய ஒவ்வொரு அசைவும் பயம் கலந்த கண்களும் படம் பார்ப்பவர்களை பதற வைக்கிறது

வசனம் அதிகம் இல்லை என்றாலும் நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கும் வசந்த் ரவி படத்திற்கும் பலம் சேர்த்திருக்கிறார்.

சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயதீப், சிம்ரன் பரீக், ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை தரமாக செய்திருக்கிறார்கள்.

பங்களாவுக்குள் மாட்டிக்கொண்டு சிக்கி தவிக்கும் அவர்களது அலறல் குரல் படம் முடிந்த பிறகும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர் வேடத்தில் நடித்திருக்கும் விமலா ராமன் தனது கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்

கருப்பாக வந்து இருட்டில் மிரட்டுவதும் தீய சக்தியின் கட்டுப்பாட்டில் ஆக்ரோசமாக பயணிப்பதும் என்று அசத்துபவர்

இறுதிக் காட்சியில் தனது நடிப்பு மூலம் படம் பார்ப்பவர்களின் இதய துடிப்பை எகிற வைத்துவிடுகிறார்.

நடிகர்களின் நடிப்பு கதைக்களத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்வது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களும் நாயகர்களாக ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்திருக்கிறார்கள்
வருடங்களுக்குப் பிறகு வித்தியாசமான புது விதமான அனுபவத்தை கொடுக்கும் வகையில் அமைந்திருக்கும் திகில் காட்சிகளும் பின்னணி இசையும் மிரட்டுகிறது.

ஒளிப்பதிவாளர் ஏ.எம்.எட்வின் சகே படம் முழுவதையும் இருட்டில் படமாக்கினாலும் மிக நேர்த்தியாக காட்சிகளை கையாண்டிருக்கிறார்.

அஸ்வினர்கள் கதையை வைத்துக்கொண்டு ஒரு முழுமையான திகில் திரைக்கதையை வடிவமைத்திருக்கும் இயக்குநர் தருண் தேஜா இரண்டு மணி நேரம் நமது மூளையை தன் வசப்படுத்திக் கொண்டு படத்துடன் நம்மையும் பயணிக்க வைக்கிறார்

மொத்தத்தில், இந்த ‘ அஸ்வின்ஸ் ’ தொழில்நுட்ப ரீதியாக சொல்லியிருக்கும் விதம் ரசிகர்களுக்கு இதுவரை பார்த்திராத ஒரு திகில் அனுபவத்தை நிச்சயம் கொடுக்கும்..

மொத்தத்தில் இந்த அஸ்வின்ஸ் படத்தில் நமக்கு இருந்த ஒரே ஆறுதல்  வசந்த் ரவி.படத்துக்கு படம் மெருகேற்றிக்கொண்டே போகிறார்.

வசந்த் ரவி அவர்களே அடுத்து நாங்கள் ‘ஜெயிலர்’ படத்தில் உங்கள் நடிப்பை பார்க்க ஆவலாக இருக்கின்றோம்.
Previous Post

நிகில் சித்தார்த்தா நடிக்கும் ‘ஸ்பை’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

Next Post

தண்டட்டி – விமர்சனம்

Next Post

தண்டட்டி - விமர்சனம்

Popular News

  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது ஃபஹத் ஃபாசிலின் “டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” – Don’t Trouble The Trouble’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.