• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘ரங்கோலி’ – விமர்சனம்

by Tamil2daynews
September 1, 2023
in விமர்சனம்
0
0
SHARES
36
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘ரங்கோலி’ – விமர்சனம்

 

Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிக்க, ஹமரேஷ், ஆடுகளம் முருகதாஸ், பிரார்த்தனா சந்தீப், , சாய் ஸ்ரீ பிரபாகரன், , அக்ஷயா, அமித் பார்கவ்  நடிப்பில்  வாலி மோகன்தாஸ் எழுதி  இயக்கி இருக்கும் படம் .

அரசு பள்ளியில் நன்றாக படிக்கும் ஒரு மாணவன் அடிக்கடி ரகலையில் ஈடுபடுவதால் தன் மகனை தன் மனைவியின் ஆசைக்காக சில பல லட்சங்கள் செலவு செய்து தனியார் பள்ளியில் சேர்க்கிறார் தந்தை.

தனியார் பள்ளியில் போய் சேரும் மாணவன் மீண்டும் அதே போல் ரகளையில்  ஈடுபட்டு அடிக்கடி பெயரை கெடுத்துக் கொண்டு அதுமட்டுமில்லாமல் சக மாணவியும், மாணவனும் பெயரை இணைத்து கிசுகிசுக்கப்பட்டு மேலும் பெயரைக் கெடுத்துக் கொண்டு  படிப்புக்காக அவனது தந்தை வாங்கிய கடனிலிருந்து மீண்டாரா,பையன் தனியார் பள்ளியில் படித்தானா என்பதே மீதி கதை.
Imageஇயக்குனர் தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பனின் பேரன் தான் படத்தின் ஹீரோ அவரது தந்தை ஆடுகளம் முருகதாஸ் தாயாக நடித்திருப்பவர் சாய் ஸ்ரீ.

சலவை தொழிலாளியாக வரும் ஆடுகளம் முருகதாஸின் நடிப்பை சொல்லவே தேவையில்லை ஒவ்வொரு காட்சியிலும் மனுஷன் மனதில் நிற்கிறார்.

அவரது மனைவியாக வரும் சாய் ஸ்ரீ அடடா இவ்வளவு நாளா  எங்கே இருந்தார் என்று கேட்க வைக்கிறது.அந்த வசன காட்சிகளில் ஒவ்வொரு உச்சரிப்பும் தமிழே வித்தியாசமாக தெரிகிறது வாழ்த்துக்கள் சாய் ஸ்ரீ .உங்களுக்கு தமிழ் சினிமாவில் பெரிய இடம் காத்திருக்கிறது.

பையன் மேல் ஒரு தவறு என்றவுடன் அடுப்பில் தோசை கரண்டியை காய வைத்து சூடு போட வரும் அந்த பதபதைப்பும்,
 தனக்கு  பிடித்த சக தோழியை அம்மா அளவுக்கு  பிடிக்கும் என்று சொன்னவுடன் மூஞ்சை தூக்கிக் கொள்வதும், உன்ன விட கொஞ்சம் குறைவா தான் பிடிக்கும் என்றவுடன் தோசை சாப்பிடுகிறாயா என்று கேட்பதும் அடடா அழகான அம்மா பாசமுள்ள அம்மா சாய் ஸ்ரீ.
Imageஅக்கா கதாபாத்திரம் அப்பப்பா சொல்ல மாறாது அந்த அளவுக்கு அருமையாக நடித்திருக்கிறார் கோவத்தில் தன் தம்பிக்காக உணவு ஊட்டும் காட்சியில் நிமிர்ந்து நிற்கிறார்.

வட்டி தொழில் செய்பவர்கள் என்றால் அநியாயத்துக்கு இருப்பார்கள் என்று தான் மனதில் தோன்றும் இந்த படத்தில் வருவதோ நியாயமான வட்டிக்காரர் மனதில் பதிகிறார்

 சுந்தரமூர்த்தி இசை படத்திற்கு மிகப்பெரிய பக்கபலம் பாடல் காட்சிகள் மனதில் வருடுகிறது.

படத்தில் சொல்லக் கூடிய இரண்டு காட்சிகள் என்றால்.கடற்கரை சாலையில் இரண்டு சக்கர வாகனத்திலும் ஆட்டோவிலும் இவர்கள் வருகிற காட்சியை பார்க்கும் பொழுது நமக்கு பழைய எண்ணங்கள் தோன்றுவது உண்மை.

கதாநாயகிக்கு அவ்வளவாக வேலை இல்லை என்றாலும் அந்த காதல் சம்பந்தமான காட்சிகளால் தான் கதை நகருகிறது.

அதை இன்னும் சற்று குறைத்திருக்கலாம் மாணவர்களின் எதிர்காலம் கருதி.

தமிழ் ஆசிரியர்,மறக்க முடியாத கதாபாத்திரம் பத்தி பக்கபலம் என்று கூட சொல்லலாம்.

மாணவனாக நடித்துள்ள ஹம்ரேஸ்.சினிமா குடும்பத்திலிருந்து வந்த இவர் பந்தா ஏதும் இல்லாமல் படத்தின் காட்சிகளை கதாபாத்திரத்தை உணர்ந்து மிகக் கச்சிதமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இன்னும் சொல்லப்போனால் இந்த ஹம்ரேஷ் நடிகர், இசையமைப்பாளர்ஜிவி பிரகாஷ் நினைவுபடுத்துகிறார்.

நிச்சயமாக தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பும் இடமும் காத்திருக்கிறது வாழ்த்துக்கள்.

மொத்தத்தில் இயக்குநர் இந்த ரங்கோலி படம் மூலம்  சொல்ல வருவது

அரசு பள்ளியில் படித்தால் மாணவர்கள் நன்றாக படிப்பார்களா..!

இல்லை தனியார் பள்ளியில் மாணவர்கள் படித்தால் நன்றாக படிப்பார்களா..!
என்பது தான்.
Imageஇயக்குனருடைய கருத்து அரசு பள்ளியில் சேர்ந்தால் மட்டும்தான் மாணவர்கள் நன்றாக வருவார்கள் என்பது.

ஆனால் ஒட்டு மொத்த எல்லோருடைய கருத்தும் படிக்கிற மாணவன் எங்கிருந்தாலும் படிப்பான்.ஏன் வீட்டில் இருந்து தொலைத்தொடர்பு ஆன்லைன் மூலம் படித்தாலும் படிப்பவன் நிச்சயம் ஜெயிப்பான் என்பதே.

இன்றைய தலைமுறைக்கு பழைய தலைமுறைகளை நினைவுபடுத்தும் விதமாக படம் எடுத்த இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

மொத்தத்தில் இந்த ‘ரங்கோலி’ யில் கலர் கொஞ்சம் கம்மிதான்…
                 விமர்சகர்
                    சரண்
Previous Post

மகா கவிதை கவிப்பேரரசு வைரமுத்துவின் புத்தம் புதிய படைப்பு

Next Post

‘பரம் பொருள்’ – விமர்சனம்

Next Post

'பரம் பொருள்' - விமர்சனம்

Popular News

  • மனதை வருடும் இசை ஆல்பம் –  என் மனமே.

    மனதை வருடும் இசை ஆல்பம் – என் மனமே.

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒன்ஸ்மோர் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • Hi – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • டாக்ஸிக் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நோவா’ — பேயா? அறிவியலா? காலத்தையே கேள்வி கேட்கும் திரைப்படமா?

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பான் இந்தியா நட்சத்திர முகமாக ஃபோர்ப்ஸ் இந்தியா அட்டை படத்தை அலங்கரிக்கும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

August 28, 2026

“ஏன் என்னை ஏதோ செய்தாய்” – பத்திரிகையாளர் சந்திப்பு !!

August 28, 2026

அமரம் -விமர்சனம்

August 28, 2026

‘நோவா’ — பேயா? அறிவியலா? காலத்தையே கேள்வி கேட்கும் திரைப்படமா?

August 28, 2026

வேகமாக விறுவிறுப்பாக நடைபெறும் ‘அரசன்’ படப்பிடிப்பு!

August 28, 2026

டாக்ஸிக் – விமர்சனம்

August 28, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.