• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

”டைகர்-3யின் ஆக்சன் கண்கவர்வதாக இருந்தது” ; அக்-16ல் அதன் டிரைலர் வெளியாவதற்கு முன் படத்தில் இருந்து என்ன எதிர்பார்க்கலாம் என சல்மான்கான் கூறுகிறார்

by Tamil2daynews
October 7, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

”டைகர்-3யின் ஆக்சன் கண்கவர்வதாக இருந்தது” ;  அக்-16ல் அதன் டிரைலர் வெளியாவதற்கு முன் படத்தில் இருந்து என்ன எதிர்பார்க்கலாம் என சல்மான்கான் கூறுகிறார்  

 

சூப்பர்ஸ்டார் சல்மான்கான் யஷ்ராஜ் பிலிம்ஸின் ‘டைகர் 3’ டிரைலரை அக்-16ஆம் தேதி வெளியிட இருக்கிறார். மேலும் படக்குழுவினர் உண்மையிலேயே ஆக்சன் தொகுப்பாக இதை உருவாக்கியுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். யஷ்ராஜ் பிலிம்சின் ஸ்பை திரில்லராக உருவாகியுள்ள ‘டைகர் 3’ மிகப்பெரிய தீபாவளி வெளியீடாக வெளியாக இருக்கிறது.

சல்மான்கான் கூறும்போது, “யஷ்ராஜ் பிலிம்ஸில் உருவான ஏக்தா டைகர், டைகர் ஜிந்தா ஹை ஆகிய  ஸ்பை யுனிவர்ஸ் படங்களை மக்கள் பார்த்திருக்கிறார்கள். அதனால் அவர்களின் பார்வைக்கு விருந்தாக புதிதாக, தனித்துவமான ஆச்சர்யமான  சிலவற்றை கொடுக்க வேண்டியது முக்கியமானதாக இருந்தது. டைகர் 3 படக்குழுவினர் உண்மையிலேயே ஆக்சன் தொகுப்பாக இதை உருவாக்கியுள்ளனர் அது கண்கவரும் விதமாக இருக்க வேண்டி இருந்தது. அங்கே வேறு எந்தவொரு விருப்பமும் இருந்ததில்லை” என்கிறார்..

மனீஷ் ஷர்மா இயக்கியுள்ள இந்த டைகர் 3 படத்தின் டிரைலருக்கு இணையத்தில் வெறித்தனமான எதிர்பார்ப்பு இருக்கிறது. பாக்ஸ் ஆபீஸில் நூறு சதவீத பிளாக் பஸ்டர் வெற்றியை பெறுவதற்காக எப்படி ஆதித்ய சோப்ரா யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸை வடிவமைத்துக்கொண்டு இருக்கிறார் என்பதை இந்த திரைப்படம் சொல்ல இருக்கிறது. ஏக் தா டைகர், டைகர் ஜிந்தா ஹி, வார், பதான், மற்றும் இப்போது டைகர் 3 ஆகியவை யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படங்கள் ஆகும்.
தனக்காக படப்பிடிப்பில் விரிவாக திட்டமிடப்பட்ட அதிரடி சண்டைக்காட்சிகளை படப்பிடிப்பு தளத்தில் பார்க்கும்போது ஒரு குழந்தையாக மாறிவிட்டேன் என்றகிறார் சல்மான் கான்

“டைகர் 3 படக்குழு இதுவரை இந்திய சினிமாவில் பார்த்திராத வகையில் பல விஷயங்களை செயல்படுத்தி இருக்கிறது. அதிரடியாக உருவாக்கப்பட்ட இந்த ஆக்சன் காட்சிகளில் நானும் ஒரு பங்காக இருக்க விரும்பினேன். மேலும் அந்த காட்சிகளில் நான் நடித்தபோது  ஒரு குழந்தையை போலவே மாறிவிட்டேன். இதுபோன்ற மிகப்பெரிய தருணங்களுடன் உங்களை உற்சாகப்படுத்தும் விதமாக டைகர் 3 டிரைலரை நாங்கள் வெளியிடும்போது படத்தை விளம்பரப்படுத்தும் எங்களது அடுத்த சொத்தாக அது அமையப்போகிறது” என்கிறார் சல்மான் கான்.

சல்மான் மேலும் கூறும்போது, “டைகர் 3 படத்தின் கதை முழுவதும் அந்த நாளை காப்பாற்ற சூப்பர் ஏஜென்ட் டைகர் மேற்கொள்ளும் உயிருக்கு ஆபத்தான பணியில் திருப்பங்கள் நிறைந்ததாக  இருக்கும்” என்கிறார்.

“டிரைலர் மற்றும் திரைப்படத்தில் எதிர்பாராததை எதிர்பாருங்கள்.. மேலும் உண்மையிலேயே தீவிரமான ஒரு கதைக்கருவை கொண்டுள்ள ஒரு பொழுதுபோக்கு ஆக்சன் படத்திற்காக தயாராகுங்கள்.. டைகர் 3 படத்தின் கதை உடனடியாக என்னை கவர்ந்திழுத்தது. ஆதியும் அவரது குழுவும் இந்த கதையுடன் வந்தபோது என்னால் நம்ப முடியவில்லை. இது உறுதியாக டைகரின் மிகுந்த அபாயகரமான மிஷனாக இருக்கும் என்பதால் அவர் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவதற்காக தனது வாழ்க்கையில் மிகப்பெரிய ரிஸ்க்கும் எடுக்கவேண்டி இருக்கிறது” என்றும் கூறுகிறார் சல்மான்கான்.

Previous Post

’சித்தா’ படத்தின் சக்சஸ் மீட்!

Next Post

வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி நடிக்கும் ‘hi நான்னா’ திரைப்படத்தின் இரண்டாம் பாடலான ‘கண்ணாடி கண்ணாடி’-யை சிவகார்த்திகேயன் வெளியிட்டார்

Next Post

வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி நடிக்கும் 'hi நான்னா' திரைப்படத்தின் இரண்டாம் பாடலான 'கண்ணாடி கண்ணாடி'-யை சிவகார்த்திகேயன் வெளியிட்டார்

Popular News

  • நடிகர் துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • டெட்பூல் & வால்வரின் புதிய புரோமோ வால்வரினை வெறித்தனமான ஆக்ஷனில் காட்சிப்படுத்துகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • அஞ்சாமை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட் குழுவினரை பாகுபலி ஃபிரான்சைஸியில் ஒருங்கிணைக்கும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார்

    0 shares
    Share 0 Tweet 0
  • ”டைகர்-3யின் ஆக்சன் கண்கவர்வதாக இருந்தது” ; அக்-16ல் அதன் டிரைலர் வெளியாவதற்கு முன் படத்தில் இருந்து என்ன எதிர்பார்க்கலாம் என சல்மான்கான் கூறுகிறார்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மனிதன் தெய்வமாகலாம் – விமர்சனம்

April 12, 2026

தேனிசை தென்றல் தேவா வெளியிட்ட “தீயோர் கூடம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

April 12, 2026

நடிகர் அஜித் குமாரின் கமர்ஷியல் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘அமர்க்களம்’ ஏப்ரல் 24 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது!

April 12, 2026

TN (2026) தங்க நட்சத்திரம் – விமர்சனம்

April 12, 2026

Lik (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) – விமர்சனம்

April 12, 2026

“மிஸ்டர் எக்ஸ் வேறு.. துரந்தர் வேறு” ; தெளிவுபடுத்திய இயக்குநர் மனு ஆனந்த்

April 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.