• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

நேசிப்பாயா – விமர்சனம் ரேட்டிங் – 3/5

by Tamil2daynews
January 16, 2025
in விமர்சனம்
0
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நேசிப்பாயா – விமர்சனம் 

 

பில்லா என்ற மெகா ஹிட் படம் எடுத்த இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி ,அதிதி ஷங்கர் இணைந்து நடித்திருக்கும் படம் நேசிப்பாயா.

பில்லா திரைப்படத்தின் மூலமாக பிரபலமான இயக்குனர் விஷ்ணுவரதன் இயக்கத்தில் மறைந்த நடிகர் முரளியின் மகன் ஆகாஷ் முரளி, அதிதி சங்கர் ஆகியோர் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் நேசிப்பாயா. இந்த திரைப்படத்தை XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கின்றார்.

அதிதி ஷங்கருக்கு நடிகர் ஆகாஷ் முரளிக்கு காதல் ஏற்பட அதனை அவரிடம் கூறுகின்றார். அதிதி சங்கர் ஒரு சில கண்டிஷன் போட்டு அந்த காதலை ஏற்றுக் கொள்கின்றார். அதற்கு ஆகாஷும் சம்மதிக்க இருவரும் தங்களது காதல் பயணத்தை தொடங்குகிறார்கள். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிய வேண்டிய சூழல் உருவாகின்றது.
Nesippaya Movie Review: Aditi Shankar and Akash Murai's film is racy in parts and inadequate for most

அதன் பிறகு அதிதி சங்கர் வேலை கிடைக்க போர்ச்சுக்கல் நாட்டிற்கு செல்கின்றார். ஆனால் அங்கு தெரியாத்தனமாக ஒரு கொலை வழக்கில் சிக்கி சிறை சென்று விடுகின்றார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு காதலி சிறைக்கு சென்றதை அறிந்த ஆகாஷ் போர்ச்சுக்கலுக்கு சென்று அதிதியை மீட்க முயற்சி செய்கின்றார். அப்படி அதிதிக்கு என்ன ஆனது, அவர் அந்த கொலையை செய்தாரா? ஆகாஷ் அவரை எப்படி சிறையில் இருந்து மீட்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை.

இயக்குனர் விஷ்ணுவர்தன் தமிழில் 10 வருடத்திற்கு பிறகு கம்பேக் கொடுக்கும் திரைப்படம் நேசிப்பாயா. இப்படம் அதர்வாவின் தம்பியான ஆகாஷ்-க்கு முதல் திரைப்படம் ஆகும். முதல் படம் என்பதால் நடிப்பு, சண்டை காட்சிகளில் முடிந்த அளவுக்கு சிறப்பாக நடிக்க முயற்சி செய்திருக்கின்றார். அதிதி சங்கர் பல இடங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார். மேலும் முக்கியமான கதாபாத்திரத்தில் சரத்குமார் மற்றும் குஷ்பூ தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஆகாஷ் முரளிக்கு இது ஒரு நல்ல அறிமுகம் என்பது எந்த சந்தேகமும் கிடையாது. அதிலும் படத்தில் சிறையில் இருக்கும் அதிதி தன்னை பார்க்க மறுப்பு தெரிவித்த போது அவர் குரலை மட்டும் கேட்டு கண்ணீர் வடித்த ஆகாஷின் நடிப்பு சிறப்பாக இருந்தது.
Nesippaya Movie Review: Vishnuvardhan's Suspense Drama Is Engaging In Parts | Times Now

காதல் படமாக இருந்தாலும் பெரிய அளவு காதல் காட்சிகள் ஒர்க் அவுட் ஆகவில்லை. யுவனின்  இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். எப்போதும் போல தனது ஸ்டைலில் மேக்கிங் செய்திருக்கின்றார் விஷ்ணு வரதன். பாடல்கள் அனைத்துமே ரசிக்கும் படியாக இருந்தது. படத்தின் கதை ஸ்லோவாக இருப்பது போல் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதை நான் கணித்து விடலாம் என்பது போல் படத்தின் காட்சி இருந்தது.

மத்தபடி சொல்லும் அளவிற்கு ஆஹா ஓஹோ என எந்த ஒரு சிறப்பான காட்சிகளை இந்த திரைப்படத்தில் அமையவில்லை என்பது ரசிகர்களின் கருத்து. படம் இன்று வெளியாகி இருந்த நிலையில் ரசிகர்கள் படத்திற்கு 3 % ரேட்டிங் கொடுத்திருக்கிறார்கள். விஷ்ணுவர்தன் 10 வருடம் கழித்து இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்திருந்த நிலையில் படம் நிச்சயமாக மிக சிறப்பாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை இந்த திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை என்பதை ரசிகர்களின் கருத்தாக இருக்கின்றது. படத்தின் பாடல் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட். யுவன் சங்கர் ராஜா தனது ஸ்டைலில் மிகச்சிறப்பாக பாடல்களை கொடுத்து இருக்கின்றார்.

மொத்தத்தில் இந்த நீண்ட இடைவெளிக்கு பின் விஷ்ணுவர்த்தம் எடுத்திருக்கும் இந்த படம் சுமார் ரகமே.
Previous Post

குயின் அனுஷ்கா ஷெட்டி நடிக்கும், “காதி”படத்தில், தேசி ராஜு பாத்திரத்தில் நடிக்கிறார் விக்ரம் பிரபு !!

Next Post

காதலிக்க நேரமில்லை – விமர்சனம் ரேட்டிங் 3.5/5

Next Post

காதலிக்க நேரமில்லை - விமர்சனம் ரேட்டிங் 3.5/5

Popular News

  • “துடிக்கும் கரங்களுக்கு முன்.. துடிக்கும் கரங்களுக்கு பின்..” ; உண்மையை உடைத்து பேசிய விமல்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஜெயில்’ படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • தளபதி விஜய் உடன் பிறந்த தங்கையை  இதுவரை யாரும் பார்த்திராத அவரின் அறிய புகைப்படம்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்

    0 shares
    Share 0 Tweet 0
  • மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து வழங்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.