• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

பைக்கர் – விமர்சனம்

by Tamil2daynews
April 4, 2026
in விமர்சனம்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பைக்கர் – விமர்சனம் 
‘இதுதாண்டா போலீஸ்’ புகழ் டாக்டர் ராஜசேகர் நீண்ட இடைவெளிக்கு பின் சர்வானந்த் உடன் இணைந்து நடித்திருக்கும் படம்

பைக்கர்.

2003ஆம் ஆண்டில் ஆரம்பிக்கும் கதையில் விகாஸ் நாராயண் (ஷர்வானந்த்) Motokart நடத்தி வருகிறார். காதல் மனைவி அனன்யா (மாளவிகா நாயர்), பள்ளியில் படிக்கும் மகன் இஷான் என நல்ல குடும்ப வாழ்க்கையில் விகாஸ் பயணிக்கிறார்.

ஒருநாள் பள்ளியில்தன் அப்பாவைப் பற்றி இஷானின் வகுப்பு மாணவன் தவறாக பேச அவனை அடித்து விடுகிறான். இது விகாஸிற்கு தெரிய வர மகனை விசாரித்து பின் ‘அடிப்பதை விட, இன்னொரு முறை அப்படி பேச நாம் இடம் தரக் கூடாது’ என்று அறிவுரை கூறுகிறார்.

அதே சமயம் ING நிறுவனத்திற்கு மோசடி செய்துவிட்டதாக சுனில் நாராயண் (டாக்டர். ராஜசேகர்) வெளியேற்றப்படுகிறார். அதனை அறியும் விகாஸ் தன் அப்பாவின் மானத்தைக் காப்பாற்ற பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் Motocross ரேஸிற்கு செல்கிறார்.

அதில் அவர் வெற்றி பெற்றாரா? மகன் மேல் கோபத்தில் இருக்கும் சுனில் அவரை ஏற்றுக் கொண்டாரா? என்பதே மீதக்கதை.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நயன்தாரா நடித்து வெளிவந்த விசுவாசம் படத்தை ஞாபகப்படுத்தினாலும் கதைக்களமும் கதாபாத்திரங்களும் வெவ்வேறு பரிமாணத்தில் பயணிப்பதால் ஓரளவு நம்மால் நிம்மதி பெருமூச்சு விட முடிகிறது.
Biker Glimpse: Sharwanand's Fiery New Avatar Hits Theatres

ஸ்போர்ட்ஸ் டிராமா படங்களில் பெரிதாக காட்டப்படாத Motocross பைக் ரேஸ் விளையாட்டினை திரையில் அற்புதமாக கொண்டுவந்துள்ளார் இயக்குநர் அபிலாஷ் ரெட்டி. இதுபோன்ற ஜானரில் வழக்கமாக காட்டப்படும் ஹீரோ தோல்வியடைந்து, பின் மீண்டும் களத்திற்கு வந்து ஜெயிப்பது போன்ற காட்சிகள் இருந்தாலும் திரைக்கதை நேர்த்தியால் விறுவிறுப்பாகவே படம் நகர்கிறது.

அப்பா, மனைவி, மகன் என சென்டிமென்ட் காட்சிகள் படம் முழுவதும் இருந்தாலும், அவை எதுவும் கதையை பாதிக்காத வகையிலும், ஓவர்டோஸ் ஆகாதபடியும் பரத்வாஜ், ஷ்ரவன் ஆகியோருடன் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளார் அபிலாஷ் ரெட்டி.ஆங்காங்கே வரும் உணர்ச்சிமிகு வசனங்கள், அதற்கு ஏற்றாற்போல் போல் வரும் காட்சிகள் என படம் நெடுகிலும் மோட்டார் ரைடுதான்.

குறிப்பாக ‘பயங்கறதுதான் தோல்வி காரணம்; அதே பயம்தான் வெற்றிக்கு ஆயுதம்’, ‘நீ முன்னாடி வரல..எல்லோரும் உன் பின்னாடி வந்தாங்க; ரெண்டுத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு’ போன்ற வசனங்கள் மிரட்டல்.

அதேபோல் Block Pass வரும் இடம், Mountain Jump எல்லாம் கூஸ்பம்ப் ரகம். நடிகர்களை பொறுத்தவரை ஷர்வானந்த் ரேஸராகவே வாழ்ந்துள்ளார். அந்தளவு உடலுழைப்பை காட்டியுள்ளதுடன் முகபாவனைகளில் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு காட்சியில், அப்பா ராஜசேகரிடம் கோபப்பட்டு Angry Man பட்டம் உங்களுக்கு மட்டும் இல்ல என்று கூறி ஷர்வானந்த் டீஸ் செய்கிறார். அது தெலுங்கு ரசிகர்களுக்கு மிகவும் கனெக்ட் ஆகும். என்னதான் ஹீரோவின் அப்பாவாக ராஜசேகர் நடித்திருந்தாலும் எங்குமே தனக்கான மாஸை அவர் விட்டுக்கொடுக்கவில்லை.

அதுல் குல்கர்னியிடம் உதவி கேட்பதுபோல் சென்று அவருக்கே ஆஃப்பர் கொடுப்பது, மகனை கடிந்து கொண்டாலும், பேரனின் பாசத்தில் உருவாகுவது என படம் முழுக்க அவரும் ஸ்கோர் செய்கிறார். அழகு பதுமையாக அறிமுகமாகும் மாளவிகா நாயர் ரொமான்ஸைக் காட்டியிலும், எமோஷனல் காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார்.

கார்ப்பரேட் வில்லனாக அதுல் குல்கர்னி வழக்கம்போல் வில்லத்தனம் காட்டியிருக்கிறார். படத்திற்கு மற்றொரு தூண் ஜிப்ரானின் இசைதான். படம் முழுக்க பின்னணி இசையில் ராஜாங்கம் நடத்தியிருக்கிறார். J.யுவ்ராஜின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து. கிளைமேக்ஸ் காட்சி அல்டிமேட். அனில் குமாரின் படத்தொகுப்பு சிறப்பு.

மொத்தத்தில் இந்த ‘பைக்கர்’ படம் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற உன்னத கருத்தை உணர்த்தும் படம்.
Previous Post

‘ஹபீபி’ திரைப்படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை கொடுத்துள்ள நடிகை மாளவிகா மனோஜ்!

Next Post

லீடர் – விமர்சனம்

Next Post

லீடர் - விமர்சனம்

Popular News

  • “எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கனவு கண்டேன்… சாதித்தேன்!’ – நரேன் மணியின் சினிமா பயணத்தின் வெற்றிக்கதை

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘எல்லம்மா’ படத்திற்கு என்னை சம்மதிக்க வைத்த கிராமம் இது’- ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் நெகிழ்ச்சி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அறிமுக இயக்குநர் படத்தில் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த்..!!

June 2, 2026

தயாள் பத்மநாபனின் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பத்திரிகையாளர் சந்திப்பு!

June 2, 2026

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படம் “மஞ்சணத்தி” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

June 2, 2026
சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

June 2, 2026

‘பென்ஸ்’ திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் முன்னணி கதாபாத்திரங்களில் ஒருவராக இணைந்திருப்பது LCU மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது!

June 2, 2026

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

May 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.