பிரபல தமிழ் ஹீரோயின் மீது நடிகர் ஒருவர், தன்னை திருமணம் செய்துகொண்டு அந்த நடிகை மூன்று முறை கருக்கலைப்பு செய்தார் எனக் கூறியதால் சினிமா உலகில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
பிரம்மன் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. அதன்பிறகு மாயவன் என்ற படத்திலும் நடித்திருந்தார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் லாவண்யா, தமிழ் சினிமாவில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு அதர்வாவுடன் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல நடிகர் சுனிசித் என்பவர் தனக்கும் லாவண்யா திரிபாதிக்கும் திருமணம் ஆகி விட்டதாகவும் அவர் மூன்று முறை கருக்கலைப்பு செய்ததாகவும் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
இதனைக் கேட்ட நடிகை ஆட்டம் கண்டு விட்டாராம். அதுமட்டுமல்லாமல் அந்த நடிகர் தனக்கும் தமன்னாவுக்கும் கூட தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார். இப்படி ஒரு விஷயம் நடந்ததே இல்லை என பதட்டத்தில் உள்ளாராம் அந்த நடிகை.
மேலும் இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது என உடனடியாக காவல்துறையினரிடம் தன் மீது தவறான குற்றச்சாட்டை வைப்பதாக புகார் கொடுத்துள்ளார் லாவண்யா. லாவண்யாவின் மேலுள்ள ஆசையால் தான் அந்த நடிகர் வேண்டுமென்றே அந்த மாதிரி கூறியதாக டோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்