நடிகர் விவந்த் அவர்கள் சமீபத்தில் வெளியான ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தில் நடித்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.


திரையுலகில் இவர் முன்பே பரீட்சயமானவர், இவர் நாளைய இயக்குனர் சீசன் 4 இல் திரையிடப்பட்ட ஒரு குறும்படத்தில் இவரது நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.


நடிகர் விவந்த் அவர்கள் கூறுகையில், “எனது முதல் படம் 2014 இல் வெளியான ‘இருக்கு ஆனா இல்ல’ திரைப்படம். இந்த படம் எனது நடிப்புக்கு ஒரு நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது, எனது இரண்டாவது படம் 2018 ஆம் ஆண்டில் வெளியான ‘ஏகாந்தம்’, இது கிராமப்புற அடிப்படையிலான படம். எனது நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் ‘நயம்’, இது திகில்- திரில்லர் கதையம்சம் கொண்டது. நடிகர் சந்தனம் அவர்களின் ‘பாரிஸ் ஜெயராஜ்’ ல் எனது நடிப்புக்கு கிடைத்த வரவேற்பிற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த படத்தின் ஒரு பகுதியாக எனக்கு ஒரு வாய்ப்பை வழங்கிய நடிகர் சந்தானம் அவர்களுக்கும், இயக்குனர் ஜான்சன் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி கூறுகிறேன். படம் பார்த்த பிறகு, தொழில்துறையைச் சேர்ந்த பலர் என்னை வாழ்த்தினர், இப்போது எனக்கு நிறைய பட வாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன” என்கிறார் நடிகர் விவந்த்.

