• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள் விளையாட்டு

“பிலிப் கேப்பிடல்” 42வது தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் 2022

by Tamil2daynews
April 28, 2022
in விளையாட்டு
0
பிரபபல திரைப்பட தயாரிப்பாளர் காலமானார்..!
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“பிலிப் கேப்பிடல்” 42வது தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் 2022

ஆசிய மாஸ்டர்ஸ் தடகளம் மற்றும் உலக மாஸ்டர்ஸ் தடகள சம்மேளனத்துடன் இணைந்து, இந்திய மாஸ்டர்ஸ் தடகள கூட்டமைப்பு, 42வது தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் 2022 ஐ ஏற்பாடு செய்துள்ளது. இந்திய மாஸ்டர்ஸ் தடகள போட்டிகளில் வெல்பவர்கள் ஆசிய மற்றும் உலக மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப்  சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள்.

இந்திய முதுநிலை தடகள சம்மேளனம் (MAFI) தமிழ்நாடு மாஸ்டர்ஸ் தடகள சங்கத்தின் ஆதரவுடன்,  42வது தேசிய முதுநிலை தடகள சாம்பியன்ஷிப்பை, தமிழ்நாடு மாஸ்டர்ஸ் தடகள சங்கத்தின் ஆதரவுடன் நடத்துவது,  மிகவும் பெருமையான தருணமாகும் மற்றும் கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கங்களை கடந்து, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குதல், நோய் தொற்றிலிருந்து மீள்தன்மை பெற்று, விளையாட்டு உலகமும் முதுநிலை தடகள இயக்கமும் தொடர்ந்து செயல்படுவதையும் உறுதிசெய்து, மீண்டும் போட்டிகள் திறப்பதற்கும், நம்மை மீட்டெடுப்பதற்கும், பின்னடைவிலிருந்து முன்னோக்கி செல்ல,  நம் அனைவருக்குமான எதிர்காலத்தை உறுதி செய்வது இதன் சிறப்பான அம்சமாகும்.

42வது தேசிய முதுநிலை தடகள சாம்பியன்ஷிப் 2022 என்பது இந்தியாவின் 26 மாநிலங்களில் இருந்து 3500க்கும் மேற்பட்ட தடகள வீரர்களுடன் போட்டியிடும் மிகப்பெரிய தடகளப் போட்டியாகும், 13 வயது முதலான பிரிவுகளில் மொத்தம் 22 தடகளப் பிரிவுகள் கொண்ட போட்டிகள் ஏப்ரல் 27 முதல் மே 1 வரை நடத்தப்படும்.
42வது தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க விழாவினை திரு உதயநிதி ஸ்டாலின் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி அவர்கள் துவக்கி வைத்தார்.
திரு மா. சுப்பிரமணியன், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்
சிவ. வீ. மெய்யநாதன், தமிழக சுற்றுசூழல் துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர்
திரு மூர்த்தி. R (ஐட்ரீம்ஸ்) தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் – ராயபுரம் தொகுதி
Dr. R.ஆனந்த் குமார், ஐஏஎஸ், உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்.
திருமதி. மார்கிட் ஜங்மேன், தலைவர் உலக மாஸ்டர்ஸ் தடகளம் (ஜெர்மனி)
திரு. ஸ்டான்லி பெர்கின், வாழ்நாள் தலைவர் உலக மாஸ்டர்ஸ் தடகளம் (ஆஸ்திரேலியா) மற்றும் பல சிறந்த தலைவர்கள்
நடிகை அதுல்யா ரவி ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்

திரு. D.டேவிட் பிரேம்நாத், இந்திய முதுநிலை தடகள சம்மேளனத்தின் பொதுச்செயலாளர், 42வது தேசிய முதுநிலை தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளின் தலைவராக இருப்பார், இந்த விளையாட்டு போட்டிகளின் மூலம் வீரர்களை தொழில்முறை மயமாக்குதல் மற்றும் வீரர்களை ஊக்குவித்து, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதும் மற்றும் நாட்டிற்கும் மாஸ்டர்ஸ் விளையாட்டு இயக்கத்திற்கும் மரியாதை பெற்று தருவதையும் குறிக்கோளாக கொண்டு செய்லபடவுள்ளனர்.

 தமிழ்நாடு மாஸ்டர்ஸ் தடகள சங்கத்தின் தலைவர் WI தேவாரம் IPS (Retd). செயலாளர் P.பழனிசாமி,  மூத்த இணை செயலாளர் கலைச்செல்வன், சென்னை மாவட்ட சங்கத்தலைவர் திரு.செண்பகமூர்த்தி மற்றும் சிறந்த செயல் வீரர்களின் அதிதீவிர உழைப்புடன் 42வது தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் 2022 முதல் நாள் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது.
Previous Post

“கதிர்’-விமர்சனம்

Next Post

அதிவிரைவில் “டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்”

Next Post
பிரபபல திரைப்பட தயாரிப்பாளர் காலமானார்..!

அதிவிரைவில் "டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்"

Popular News

  • டியூட் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • டீசல் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • சிலம்பரசன் TR – வெற்றிமாறன் – அனிருத் – கலைப்புலி எஸ் தாணு கூட்டணியில் உருவாகும் ‘அரசன்’படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும் : ‘தி டார்க் ஹெவன் ‘படக் குழுவினருக்கு இயக்குநர் மித்ரன் ஆர் .ஜவகர் பாராட்டு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ராஜ் B. ஷெட்டி (Raj B. Shetty ) நடிக்கும் ‘ஜுகாரி கிராஸ்’ (Jugaari Cross)

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு ‘டீசல்’ படம் புதிய அனுபவமாக இருக்கும். கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும்”- நடிகர் ஹரிஷ் கல்யாண்!

October 18, 2025

“‘டியூட்’ படத்தில் ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன். அதை பிரதீப் ரங்கநாதன் சிறப்பாக செய்திருக்கிறார் “- இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!

October 18, 2025

“‘டீசல்’ படம் இந்த தீபாவளிக்கு ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையரங்க அனுபவத்தைத் தர இருக்கிறது”- தயாரிப்பாளர் தேவராஜூலு மார்க்கண்டேயன்!

October 18, 2025

மெகாஸ்டார் சிரஞ்சீவி, இளம் கிரிக்கெட் நட்சத்திரம் திலக் வர்மாவை கௌரவித்தார்!

October 18, 2025

டீசல் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

October 18, 2025

பைசன்(காளமாடன்) -விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

October 18, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.