• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

Aranmanai3 Press Meet

by Tamil2daynews
October 11, 2021
in சினிமா செய்திகள்
0
Aranmanai3 Press Meet
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

குடும்பங்கள் சிரித்து கொண்டாடும் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் சிறந்தவர் சுந்தர் சி. இவர் இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை2 போன்ற பேய் படங்கள் நகைச்சுவையோடு குடும்பங்களும் ,குழந்தைகளும் கொண்டாடும் வகையில் வெளியாகி ஹிட் அடித்த படங்கள் . அரண்மனை முதல் இரண்டாம் பாகங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு  தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா, ராஷிக்கண்ணா நடிப்பில் அரண்மனை 3  திரைப்படம்  உருவாக்கப்பட்டு ரிலீஸுக்கு தயாராகி உள்ளது. அவ்னி  சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரிக்க C.சத்யா  இசையமைக்கிறார் .

ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர்.சி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க,விவேக், யோகி பாபு, ஆண்ட்ரியா ,மனோபாலா,சம்பத், சாக்‌ஷி அகர்வால், மதுசூதன ராவ், வின்சென்ட் அசோகன், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது .

நடிகர் ஆர்யா பேசியவை,

அனைவருக்கும் வணக்கம். இந்த படத்தில் நடிப்பதற்காக சுந்தர்.சி சாரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவரை சந்தித்தேன் இந்த படத்தில் நடிப்பது பற்றி அவரிடம் சொன்னபோது பேய் படத்தில் எனக்கு எப்படி நடிப்பது என்று தெரியவில்லையே என்று கூறினேன். அது மிகவும் ஈசிதான் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னார். இப்படத்தில் விவேக்  சாருடன் நடித்தது  மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அவருடன் பயணித்த அந்த 40 நாட்கள் மறக்க முடியாதவை. நான் அவரது மிகப்பெரிய ரசிகன். இந்த படத்தில் நடித்த அனைவருமே மிக சிறப்பாக நடித்துள்ளனர். இப்படத்தில்   பாடல்கள் மிகவும் சிறப்பாக இசையமைத்துள்ளார் சத்யா .இப்படத்தை வெளியிடும் ரெட் ஜெயிண்ட் உதயநிதி அவர்களுக்கு நன்றி. இப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

நடிகை ராஷி கண்ணா பேசியவை,

இப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த சுந்தர் சி ,குஷ்பூ ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆர்யா கடின உழைப்பாளி. அரண்மனை 3 படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது சார்பாட்டா பரம்பரை படத்திலும் நடித்துக் கொண்டிருந்தார். இந்த படத்தை வெளியிட்டு சப்போர்ட் செய்யும் உதயநிதி அவர்களுக்கு நன்றி .கண்டிப்பாக இந்த திரைப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் .தியேட்டரில் இப்படத்தைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இசையமைப்பாளர் C .சத்யா பேசியவை,

இந்த படம் எனக்கு 25 வது படம். இசையமைப்பாளராக இசை அமைத்துள்ளேன். இந்த திரைப்படத்திற்கு பின்னணி இசை அமைப்பதில் எனக்கு அதிக நாட்கள் தேவைப்பட்டது.20 நாட்களில் முடிக்குமாறு என்னை இயக்குனர் கேட்டுக் கொண்டார். ஆனால் இந்த லாஃடௌன் எனக்கான நாட்களை அதிகப்படுத்தியது. அதிக நாட்கள் எடுத்துக்கொண்டு சிறப்பாக படத்திற்கு இசை அமைத்துள்ளேன். அரண்மனை பட  மற்ற பாகங்களைவிட இந்த மூன்றாம் பாகத்தில் எமோஷனல் சீன்கள் அதிகமாக இருக்கின்றன.

நடிகர் மனோபாலா பேசியவை

குஜராத்தில் கிட்டத்தட்ட 40 நாட்கள் மேலாக தங்கியிருந்து படப்பிடிப்பு முடித்தோம். மறக்க முடியாத நினைவுகள். காலையில் 7 மணிக்கு சூட்டிங் சென்றுவிட்டு இரவு பத்து மணிக்கு திரும்புவோம் . படப்பிடிப்பு போவதே தெரியாது. இதில் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது விவேக் சாருடன் நடித்த அந்த நாட்கள் மறக்க முடியாதவை அவரின் இழப்பு வருத்தத்தை அளிக்கிறது.

இயக்குனர் சுந்தர் சி அவர்கள் பேசியவை,

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . அரண்மனை பாகங்கள் இரண்டும் நீங்கள் மற்றும் ரசிகர்கள் ஆதரவுடன் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. எல்லோரும் சொல்வார்கள் அரண்மனை படத்தை ஈசியாக எடுத்து விட்டீர்கள் என்று ஆனால் அது மிகவும் கஷ்டம். இந்த மாதிரியான படங்களை  மக்கள் விரும்புமாறு கொடுப்பது கொஞ்சம் கஷ்டம்தான் .ஏற்கனவே உள்ள விஷயங்களை விட கொஞ்சம் வேறுபட்டதாக இருக்க வேண்டும். அரண்மனை படத்தின் இரண்டு பாகங்களுமே நல்ல வசூலையும் வெற்றியும் தந்தது. ஆனால் உடனடியாக அதன் அடுத்த பாகத்தை எடுக்க முடியாது .அதற்கான கதையும் .நடிகர்கள் ,தொழில்நுட்ப குழுக்களும் அமைந்தால் மட்டுமே சாத்தியம்.


மற்ற நடிகர்களை போல் இல்லாமல் நடித்து கொடுத்து செல்லாமல் பிசினஸ் ரீதியாக எனக்கு உதவியாக இருந்தார் ஆர்யா .

அரண்மனை படம் என்றாலே நடிகைகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். இந்த படத்திலும் ஆண்ட்ரியா ராஷி கண்ணா ,சாக்ஷி அகர்வால் எல்லாருக்குமே முக்கிய கதாபாத்திரம் தான்.

அரண்மனை பாகம் 1 உதயநிதி அவர்கள் வெளியிட்டார் .தற்போது அரண்மனை 3 திரைப்படத்தை பிரம்மாண்டமான முறையில் வெளியிடுகிறார். இந்த படத்தை பார்த்த ஒரே நபர் உதயநிதி அவர்கள் மட்டும்தான்.
அரண்மனை 1 படத்தை பார்த்து கண்டிப்பாக வெற்றி பெறும் என்று சொன்னவரும் அவர்தான் .தற்போது அரண்மனை 3 படத்தை பார்த்துவிட்டு அருமைக இருக்கிறது என்று சொன்னவரும் அவர்தான். என்னுடைய படங்கள் எல்லாமே கமர்சியல் படம்தான் .படத்தை பார்க்கின்ற சிறுவர்கள் பொதுமக்கள் தாய்மார்கள் அனைவருமே கவலையை மறந்து ரசிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய நோக்கம். அரண்மனை இரண்டு பாகங்களை விட அரண்மனை 3 பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

Previous Post

மரகத நாணயம் படப்புகழ் இயக்குநர் ARK சரவணன் இயக்கத்தில், நடிகர் ஹிப் ஹாப் ஆதி

Next Post

Passion Studios Sudhan Sundaram & G Jayaram presents Prabhu Jeyaram directorial “Yennanga Sir Unga Sattam”

Next Post
Passion Studios Sudhan Sundaram & G Jayaram presents Prabhu Jeyaram directorial “Yennanga Sir Unga Sattam”

Passion Studios Sudhan Sundaram & G Jayaram presents Prabhu Jeyaram directorial “Yennanga Sir Unga Sattam”

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • Mrs and Mr – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • கைமேரா பட இசை வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • Freedom – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், வெளியானது “மஹாவதார் நரசிம்மா” டிரெய்லர் !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், வெளியானது “மஹாவதார் நரசிம்மா” டிரெய்லர் !

July 12, 2025

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், தனுஷ் நடிக்கும் D54 பிரம்மாண்ட திரைப்படம் – பூஜையுடன் ஷூட்டிங் ஆரம்பம்!

July 12, 2025

“டிரெண்டிங்” பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

July 12, 2025

சவுத் ஸ்டார்ஸ் x மார்வெல்: ‘ஃபென்டாஸ்டிக் ஃபோர்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எந்தெந்த நடிகர்கள் நடிக்கலாம்?

July 12, 2025

“பறந்து போ” திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்!

July 12, 2025

Freedom – விமர்சனம்

July 12, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.