• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

*“ரொமான்ஸ் படம் பார்த்து பார்த்து போரடித்து விட்டது” ; நமீதாவின் காக்டெய்ல் கலாட்டா* 

by Tamil2daynews
February 24, 2020
in சினிமா செய்திகள்
0
*“ரொமான்ஸ் படம் பார்த்து பார்த்து போரடித்து விட்டது” ; நமீதாவின் காக்டெய்ல் கலாட்டா* 
0
SHARES
44
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் பிரபல ஒளிப்பதிவாளர் P.G.முத்தையா-M.தீபா  தயாரித்துள்ள படம் ‘காக்டெய்ல்’ இந்த படத்தை அறிமுக இயக்குநர் ரா.விஜயமுருகன் இயக்கியுள்ளார். யோகிபாபு, மற்றும் யோகிபாபுவின் நண்பர்களாக ரமேஷ், மிதுன், மற்றும் விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் பாலா, குரேஷி, ஆகியோருடன் சாயாஜி ஷிண்டே, மனோபாலா, மைம் கோபி, லொள்ளுசபா சாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அறிமுக இசையமைப்பாளர் சாய் பாஸ்கர் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ராமாபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.எம் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் எஸ்.வி.சேகர், நமீதா, அசோக் செல்வன், ஆடுகளம் முருகதாஸ், கருணாகரன், மைம் கோபி, எஸ்ஜிசி சினிமாஸ் மணிகண்டன் மற்றும் கனகராஜ், ராஜா, முகேஷ் பிலிம்ஸ் நிறுவனர் முகேஷ், லகரி ஆடியோ முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நடிகர் அசோக் செல்வன் பேசும்போது, “கல்லூரியில் படிக்கும்போது கனவுகளோடு இருப்போம் இல்லையா..? அதை அப்படியே வைத்துக்கொள்ளுங்கள்.. யார் என்ன சொன்னாலும் தூக்கி போட்டு விடாதீர்கள்.. கண்டிப்பாக ஒருநாள் அது நிறைவேறும்” என்றார்.
தயாரிப்பாளர் P.G.முத்தையா பேசும்போது, “சினிமா பற்றிய எந்த விஷயங்களும் தெரியாமல் தான் சென்னைக்கு வந்தேன்.. எஸ்ஆர்எம் கல்லூரி சேர்ந்து படித்தபோதுதான் சினிமா என்றால் என்ன என்று தெரிந்து கொண்டேன்.. டிவி கூட இல்லாத வீட்டிலிருந்து வந்த நான், இன்று இந்த இடத்தில் நிற்கிறேன் என்றால் இது அனைத்தையுமே எனக்குத் தந்தது எஸ்ஆர்எம் கல்லூரி தான்” என்றார்.
நடிகை நமீதா பேசும்போது, “எனக்கு வழக்கமான ரொமாண்டிக் படங்களை பார்த்து பார்த்து போரடித்து விட்டது.. எனக்கு இதுபோன்ற காமெடி படங்கள்தான் ரொம்ப பிடிக்கும்.. காக்டைல் படத்தை நான் தியேட்டருக்கு போய் பார்ப்பேன்” என்று கூறி கைதட்டலை அள்ளினார்.
நடிகர் எஸ்வி சேகர் பேசும்போது ஒரு நல்ல சிவராத்திரி தினமாக பார்த்து காக்டெய்ல் ரிலீஸ் செய்கிறார்கள். நமக்கு நல்லது நடக்கிறது என்றால் அந்த நாளும் நல்ல நாள் தான்”என்றார்.
எஸ்.வி.சேகர், நமீதா, அசோக் செல்வன், ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் காக்டெய்ல் படத்தின் இசைத்தட்டை வெளியிட எஸ்ஜிசி சினிமாஸ் கனகராஜ், முகேஷ் பிலிம்ஸ் நிறுவனர் முகேஷ், லகரி ஆடியோ முருகன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்தப்படத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த  ‘காக்டெய்ல்’ என்கிற பறவை  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது. இந்திய சினிமாவில் முதன்முறையாக ஒரு பறவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது இதுதான் முதல் முறை.. வரும் மார்ச்-6ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸாக இருக்கிறது.
*தொழிநுட்ப கலைஞர்கள்*
இயக்கம் ; ரா.விஜயமுருகன்
இசை ; S.சாய் பாஸ்கர் .
ஒளிப்பதிவு : RJ ரவீன்
படத்தொகுப்பு ; SN ஃபாசில்
கலை ; தினேஷ் மோகன்
பாடல்கள் : விவேக், ரவி
நடனம் : சந்தோஷ்
தயாரிப்பு நிர்வாகம் ; உமா மகேஸ்வர ராஜு
நிர்வாக தயாரிப்பு ; சௌந்தர் பைரவி
தயாரிப்பு ; P.G.முத்தையா-M.தீபா
மக்கள் தொடர்பு ; A.ஜான்
Previous Post

அருண் விஜயை கொண்டாடிய கோயம்புத்தூர் ரசிகர்கள் ! 

Next Post

Draupathi Stills

Next Post
Draupathi Stills

Draupathi Stills

Popular News

  • ஏ.ஆர். ரஹ்மான் இசையில், கார்த்திக் நேத்தா வரிகளில், சின்மயி ஸ்ரீபதா மற்றும் ஹரிச்சரண் குரலில் உருவான ஸ்ரீ ராமரை கொண்டாடும் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ராவடி டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • லெலின் பாண்டியன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தேசிய விருது பெற்ற வைக்கம் விஜயலட்சுமியின் குரலில் ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ராட்சசியே’ வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

டோரதி – விமர்சனம்

September 25, 2026

இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!

September 25, 2026

“வெற்றிமாறன் மாற்றியது சூரியை அல்ல, ரசிகர்களின் பார்வையை!” – பாடலாசிரியர் மதன் கார்க்கி விளக்கம்!

September 25, 2026

‘பத்தா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு – விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் வித்தியாசமான டிரெய்லர்

September 25, 2026

மீசைய முறுக்கு2 – விமர்சனம்

September 25, 2026

பாரடைஸ் – விமர்சனம்

September 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.