• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

பெத்தி – விமர்சனம்

by Tamil2daynews
June 7, 2026
in விமர்சனம்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பெத்தி – விமர்சனம்

 

ராம் சரண் ரசிகர்களுக்கு தீனி போடும் வகையில் வந்திருக்கும் படம் .மலை கிராம பகுதியில் மலைவாழ் மக்கள் ஒரு பிரிவாகவும் மற்றொரு சமூகம் இன்னொரு பிரிவாகவும் வாழ்கின்றனர். இரு சமூகத்தினரும் ஒரே வேலை செய்தாலும் மலைவாழ் தொழிலாளர்களுக்கு பாதி சம்பளமும் மற்றொரு சமூகத்திற்கு இரட்டிப்பு சம்பளமும் தரப்படுகிறது. மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் பெத்தி ( ராம்சரண் ) மற்ற யாரையும் மிஞ்சும் திறமை வாய்ந்தவனாக இருக்கிறான். கிரிக்கெட் போட்டி, மல்யுத்த போட்டி எல்லாவற்றிலும் அவனை வீழ்த்த யாரும் கிடையாது. இதற்கிடையில் மலைவாழ் மக்கள் தங்கள் ஊருககென்று ஒரு ரயில் நிறுத்தம் வேண்டுமென்று பல்லாண்டுகளாக அரசிடம் கோரிக்கை வைக்கின்றனர். அது நிறைவேறாமல் இருக்கிறது. விளையாட்டுப் போட்டியில் உலக அளவில் சாதனை படைக்கும் பெத்தி தனது ஊருக்காக செய்யும் தியாகம் என்ன என்பதுதான் கிளைமாக்ஸ்

முழுக்க முழுக்க ராம்சரணின் ஹீரோயிசத்தை மையப்படுத்தி விளையாட்டை ஊக்கப்படுத்தும் கதையாக பெத்தி உருவாகி இருக்கிறது. கிரிக்கெட்டர், மல்யுத்த வீரர், மாற்றுத்திறனாளி ஓட்டப்பந்தய வீரர் என மூன்று விளையாட்டு வீரர் வேடத்தில் நடித்திருக்கிறார். ராம் சரண்.

ஒரு நபர் ஒரு சமயத்தில் ஒரு விளையாட்டு திறமையை கொண்டவராக காட்ட முடியும் என்பது எதார்த்தமாக இருந்தாலும் இந்த படத்தை பொறுத்தவரை ஒரே நபர் 3 விளையாட்டில் திறமை வாய்ந்தவராக இருக்கிறார் என்று கதையை யோசித்திருப்பதே இயக்குனரின் வித்தியாசமான பார்வையாக அமைந்திருக்கிறது

கிரிக்கட்டர் வேடத்தில் வரும் ராம்சரண் கிரிக்கெட் பேட்டை தரையில் தட்டி பல்வேறு திசைகளில் பந்தை சிக்சர் அடித்து தள்ளுவதும், மலை போன்று பெருத்த உடல் கட்டுடன் இருக்கும் வீரர்களுடன் ராம்சரண் ஒற்றையாளாக மல்யுத்த போட்டியில் மோதுவதும அபாரம். மாற்றுத்திறனாளியாக ராம்சரண் ஓட்டப்பந்தய களத்தில் நடத்தும் சாகசம் பரபரக்கிறது.

கதாநாயகியாக ஜான்வி கபூர். முழுக்க முழுக்க கவர்ச்சி நாயகியாகவே மனதில் பதிகிறார் சிவராஜ் குமார் மல்யுத்த வாத்தியாராக நடித்திருக்கிறார். பார்ப்பதற்கு எளிமையான தோற்றத்தில் இருந்தாலும் அவரது பார்வையும், ஆக்ஷனில் காட்டும் விறுவிறுப்பும் அவரை மலயுத்த வாத்தியாராக ஒப்புக்கொள்ள வைக்கிறது.

ஜெகபதி பாபு பெரும்பாலும் வில்லன் வேடத்தில் படங்களில் நடித்திருக்கிறார் இந்த படத்தை பொருத்தவரை அவர் சிவப்பு சிந்தனை போராளியாக நடித்திருப்பது எதிர்பாராத ஷாக்.

வெங்கட சதீஷ் கிலாரு படத்தை தயாரித்திருக்கிறார்.A.R. ரஹ்மான் இசை புது வேகத்தை காட்சிகளுக்கும் பாடல்களுக்கும் தந்திருக்கிறது.R. ரத்னவேலு கேமராவில் லென்ஸ்க்கு பதிலாக ரசிகர்களின் கண்களை பொருத்தி காட்சிகளை விருந்து படைத்திருக்கிறது இயக்குனர் புச்சி பாபு சனா விளையாட்டை மையமாக வைத்து இப்படி ஒரு பார்முலாவை உருவாக்கி கமர்சியல் படத்தை தர முடியும் என்பதை நெத்தியடியாக நிரூபித்திருக்கிறார் மொத்தத்தில் இந்த பெத்தி தியேட்டருக்கு வருபவர்களை கைதட்ட வைக்கும்..

Previous Post

இரட்டையர் – விமர்சனம்

Next Post

விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியின் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “ஸ்லம் டாக்” படத்தின் டீசர் ஜூன் 8-ஆம் தேதி வெளியாகிறது!

Next Post

விஜய் சேதுபதி - பூரி ஜெகன்நாத் கூட்டணியின் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “ஸ்லம் டாக்” படத்தின் டீசர் ஜூன் 8-ஆம் தேதி வெளியாகிறது!

Popular News

  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.