மகாசேனா – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

மகாசேனா – விமர்சனம்
ஊரின் முக்கியத் தலைக்கட்டு செங்குட்டுவன். அவர்தான் விமல். மனைவி ஸ்ருஷ்டிடாங்கே மற்றும் ஒரு மகளோடு வாழ்ந்து வருகிறார். அதே ஊரில் காட்டுக்குள் வாழும் ஒரு இனக்குழு விமல் ஊரைச் சேர்ந்தவர்களை கொன்றுவிடத் துடிக்கிறது. மேலும் விமல் ஊரிலுள்ள ஒரு சாமிசிலையை அபகரிக்கவும் முயற்சிக்கிறார்கள். அதோடு காட்டுக்குள் ட்ரக்கிங் வரும் ஒரு காலேஜ் டீம், அவர்களை வைத்து நகரும் கிளைக் கதை என படம் பல்வேறு கோணங்களில் போகிறது. ஒருவழியாக விமல் முன்னெடுப்பில் நடைபெறவிருக்கும் குரங்கனி திருவிழாவில் சாமி சிலையை திருட பாரஸ்ட் ஆபிசரான ஜான் விஜய் ஒரு ப்ளான் போடுகிறார். அந்தப் ப்ளானுக்குப் பின்னால் மெயின் வில்லன் கபீர் துஹான் சிங் இருக்கிறார். அவர்களின் ப்ளான் சக்சஸ் ஆச்சா? என்பதும் இரண்டு இனக்குழுவிற்கான சண்டை எப்படி முடிந்தது? என்பதும் தான் படத்தின் கதை
கதாநாயகன் விமல் முன்பாதியில் சிறப்புத் தோற்றத்தில் வரும் நடிகர் போலவே வந்து போகிறார். அவர் கேரக்டருக்கான கம்பீரத்தை அவர் முழுமையாக வழங்கவில்லை என்பது வருத்தம் நிறைந்த நிஜம். ஸ்ருஷ்டிடாங்கே கிராமத்துப்பெண் கேரக்டரில் சரியாகப் பொருந்தாவிட்டாலும் ஓரளவு கொடுத்த வேலையைச் செய்துள்ளார். மஹிமா குப்தா மிரட்டலாக நடிக்க முயற்சித்துள்ளார். ஜான் விஜய், யோகிபாபு ஆகியோர் சின்னதாக அட்டனென்ஸ் போடுகிறார்கள்

ஒளிப்பதிவாளர் மனாஸ் பாபு DR காடு சார்ந்த லொக்கேசன்கள் என்பதால் நல்ல நல்ல ஷாட்களை எடுத்துள்ளார். சில இடங்களில் சிறப்பாக உள்ளது கண்டினியூட்டி ஷாட்களிலும் A.பிரவீன் குமார் இசையில் லாஸ்டில் வரும் சாமி பாடல் அசத்தலாக இருந்தது. உதய் பிரகாஷ் U.P.R பின்னணி இசையை சில இடங்களில் பட்டாசாக அமைத்துள்ளார் . சில இடங்களில் . எடிட்டர் நாகூரான் தேவையற்ற சில காட்சிகளை வெட்டியிருக்கலாம்.

இது விமல் படமா அல்லது வேறு யாராவது நடிகர்கள் நடித்த படமா என்று சந்தேகம் பல காட்சிகளில் வருகிறது அந்த அளவுக்கு விமல் நடிப்பே இல்லை வந்து விட்டு செல்கிறார்.

கன்னக்குழி அழகி என்று பெயரெடுத்த நடிகை சிருஷ்டி டாங்கே இந்த படத்தில் விகாரமாக காட்சியளிக்கிறார்.

படம் எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வருகிற இயக்குனர்களுக்கு எல்லாம் இந்த மகாசேனா ஒரு பாடமாகவே அமையும்

மொத்தத்தில் இந்த மகாசேனா பெயரில் இருக்கும் ஈர்ப்பு படத்தில் இல்லை..
Next Post

Recent News

error: Content is protected !!