• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் தனுஷ் வெளியிட்ட சிறை படத்தின் அசத்தல் டிரெய்லர்

by Tamil2daynews
December 15, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நடிகர் தனுஷ் வெளியிட்ட சிறை படத்தின் அசத்தல் டிரெய்லர்

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர்  சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “சிறை”

வரும் டிசம்பர் 25 ஆம் தேதி  கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லரை முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ் சமூகவலைத்தளத்தில் இன்று வெளியிட்டு, படக்குழுவினரை வாழ்த்தினார்.
.
கோவை GRD கல்லூரியில் இப்படத்தின் டிரெய்லர் பிரத்தியோகமாக வெளியிடப்பட்டது. இந்நிகழ்வினில் படக்குழுவினர் கலந்துகொள்ள,ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் இப்படத்தின் டிரெய்லர் திரையிடப்பட்டது. பெரும் ஆராவாரத்தோடு படக்குழுவை உற்சாகப்படுத்திய மாணவர்கள், டிரெய்லரை பாராட்டி வாழ்த்தினர்.
Imageடிரெய்லரில் காவலதிகாரியான விக்ரம் பிரபு ஒரு இளம் குற்றவாளியை அழைத்துச் செல்வதும், அவரிடமிருந்து குற்றவாளி தப்பித்து விட அதைத்தொடர்ந்த பரபரப்பான சம்பவங்களும் விறுவிறுப்பாக காட்டப்படுகிறது.  இடையில் ஒரு இளம் ஜோடியின் காதலும் மனதை ஈர்க்கும் வகையில் காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதாப்பாத்திரமும் மிக அழுத்தமாகவும், ஒவ்வொரு ஃப்ரேமும் உணர்வுபூர்வமாக, நமக்கு புது அனுபவம் தரும் இந்த டிரெய்லர் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.

டாணாக்காரன்  இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர்  சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.
Imageநடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க,  ஜோடியாக நடிகை அனந்தா (Anantha ) நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்‌ஷய் குமார் அறிமுகமாகிறார்.  இவருக்கு ஜோடியாக அனிஷ்மா (Anishma) நடித்துள்ளார்.
செவ
ன் ஸ்கிரீன் ஸ்டுடியோ  சார்பில்  SS லலித்குமார் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். ஸ்டண்ட் காட்சிகளை பிரபு வடிவமைத்துள்ளார். நிர்வாக தயாரிப்பாளராக  அருண் K மற்றும் மணிகண்டன் பணியாற்றியுள்ளனர்.இப்படத்தின் சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இப்படம் வரும் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும்  திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Trailer link : https://www.youtube.com/watch?v=QeVJ9Aw7X2E

Previous Post

பார்வதி நாயரின் ‘உன் பார்வையில்’ படத்தை – Sun NXT-இல், டிசம்பர் 19 முதல் கண்டுகளியுங்கள்

Next Post

Draft by GKB புரொடக்ஷன்ஸ் முதல் நாள் படப்பிடிப்பை இயக்குனர் மாரி செல்வராஜ் கிளாப் அடித்து துவங்கி வைத்தார் #GRK19

Next Post

Draft by GKB புரொடக்ஷன்ஸ் முதல் நாள் படப்பிடிப்பை இயக்குனர் மாரி செல்வராஜ் கிளாப் அடித்து துவங்கி வைத்தார் #GRK19

Popular News

  • “ரேஜ்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ரசிகர்களிடம் பரவலான பாராட்டுகள் பெற்ற ’ஸ்டீபன்’ படத்தின் போஸ்ட் கிரெடிட் காட்சி உளவியல் த்ரில்லரை முழுமையாக மறுவரையறை செய்கிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • கொம்பு சீவி – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” படப்பிடிப்பு தளத்தில் மெகாஸ்டார் மம்மூட்டி !!

    0 shares
    Share 0 Tweet 0
  • 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருதை வென்ற ராமின் ‘பறந்து போ’ திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கொம்பு சீவி – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

December 21, 2025

பருத்தி இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு !!

December 21, 2025

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ரசிகர்களிடம் பரவலான பாராட்டுகள் பெற்ற ’ஸ்டீபன்’ படத்தின் போஸ்ட் கிரெடிட் காட்சி உளவியல் த்ரில்லரை முழுமையாக மறுவரையறை செய்கிறது!

December 21, 2025

JSK சதீஷ் குமாரின் “குற்றம் கடிதல் 2” திரைப்படம் Post-Production கட்டத்திற்குள் நுழைந்துள்ளது; டப்பிங் பணிகள் நேற்று தொடங்கின.

December 21, 2025

பான்-இந்தியா ரெபெல் ஸ்டார் பிரபாஸ் உலகளாவிய கதை சொல்லும் புரட்சியை “தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இன்டர்நேஷனல் ஷார்ட் ஃபிலிம் பெஸ்டிவல்” மூலம் தொடங்கி வைத்தார்!!

December 21, 2025

பராசக்தி திரைப்பட உலகை அறிமுகப்படுத்தும் விழா !!

December 21, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.