• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் ( Million Dollar Studios )- வேல்ஸ் ஃபில்ம் இன்டர்நேஷனல் ( VELS Film International ) இணைந்து தயாரிக்கும் அசோக் செல்வன் – நிமிஷா சஜயன் நடித்துள்ள ரொமாண்டிக் திரில்லர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

by Tamil2daynews
December 15, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் ( Million Dollar Studios )- வேல்ஸ் ஃபில்ம் இன்டர்நேஷனல் ( VELS Film International ) இணைந்து தயாரிக்கும் அசோக் செல்வன் – நிமிஷா சஜயன் நடித்துள்ள ரொமாண்டிக் திரில்லர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

 

அசோக் செல்வன் – நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகும் ரொமாண்டிக் திரில்லர் பட படப்பிடிப்பு நிறைவு பெற்றது !!

அசோக் செல்வன் – நிமிஷா சஜயன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற தரமான வெற்றிப் படங்களைத் தொடர்ந்து தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், வேல்ஸ் ஃபில்ம் இன்டர்நேஷனலுடன் இணைந்து தயாரிக்கும் புதிய பிரம்மாண்ட படத்தின் படப்பிடிப்பு தற்போது இனிதே நிறைவடைந்துள்ளது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், யுவராஜ் கணேசன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள்.
Imageஇந்த படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக நிமிஷா சஜயனும் நடித்துள்ளனர். அசோக் செல்வனின் திரைப்பயணத்தில் மிக அதிக பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம், ரொமாண்டிக் திரில்லாராக உருவெடுத்துள்ளது. கதைக்களத்திற்கு ஏற்ப பெரும்பாலான காட்சிகள் இரவு நேரங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இயக்கியுள்ளார்.

‘சித்தா’, ‘கனா’ ஆகிய படங்களில் வெற்றிப் பாடல்களை கொடுத்த  இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ்  , ஒளிப்பதிவாளர் புஷ்பராஜ் சந்தோஷ், ‘டியூட்’, ‘குட் நைட்’, ‘டூரிஸ்ட் பேமிலி’ ஆகிய பிளாக்பஸ்டர் படங்களின் படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன், கலை இயக்குநர் மகேந்திரன், பாடலாசிரியர் மோகன் ராஜன், தேசிய விருது பெற்ற ஒப்பனைக் கலைஞர் பட்டணம் ரஷீத், ஒலி வடிவமைப்பாளர் உதயகுமார்  ( Sound Vibe Studios) மற்றும் நடன இயக்குநர் அசார் ஆகியோர் தொழில்நுட்ப குழுவாக பணியாற்றிவருகின்றனர்.

படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த நிலையில், தற்போது பின்னணி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மேலும் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம்  ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது!

Previous Post

மகாசேனா – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

Next Post

மாண்புமிகு பறை – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

Next Post

மாண்புமிகு பறை - விமர்சனம் ரேட்டிங் - 3 / 5

Popular News

  • ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் 47 ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணையும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ‘KHxRK’

    0 shares
    Share 0 Tweet 0
  • மாலா மணியன் தயாரிப்பில் குட்டி ரேவதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிறகு’ ; உலக மகளிர் தினத்தில் சிறப்பு காட்சி திரையிடல்

    0 shares
    Share 0 Tweet 0
  • மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ராஜசேகர் தயாரிப்பில், விமல் – நட்டி நட்ராஜ் நடித்திருக்கும் ‘வடம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • மகரம் திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ராக்கிங் ஸ்டார் ‘ யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’ ( Toxic A Fairy Tale for Grown Ups) படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘தபாஹி ‘ மார்ச் 2 ஆம் தேதி வெளியாகிறது

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“தொடக்கம்” திரைப்படம் மார்ச் 2 அன்று சிறப்புபூஜையுடன் தொடக்கம்!

March 3, 2026

நடிகர் ரியோ ராஜ் தனது முதல் தயாரிப்பு நிறுவனமான River Route Studios-ஐ தொடங்கியுள்ளார்.

March 3, 2026

சூர்யா நடிக்கும் #சூர்யா46 படத்திற்கு ‘விஸ்வநாத் & சன்ஸ்’ – என தலைப்பிடப்பட்டுள்ளது !!

March 3, 2026

ஓ பட்டர்ஃப்ளை திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

March 3, 2026

‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் ‘அன்பே டயானா’ டைட்டில் டீசர் வெளியீடு… ரசிகர்களின் அமோக வரவேற்பு!

March 3, 2026

இயக்குனர் விஜய் – இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியின் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்தின் முன் வெளியீட்டு விழா

March 3, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.