S K – 21னின் அடுத்த பட தலைப்பு இதுதான்..!
பொதுவாக தமிழ் சினிமாவில்பெண்கள், பெரியவர்கள், சிறியவர்கள், குழந்தைகள் அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய கதாநாயகர்கள் ஒரு சிலர் மட்டுமே இருக்கிறார்கள்,அந்த வகையில் நம்ம சிவகார்த்திகேயன் அனைவரது மனதில் இடம்பிடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்துக் கொண்டு அவர்களை கவரும் படி நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் கடைசியாக வந்த இரண்டு படங்கள் டாக்டர்,டான், “டாக்டர்” படம் பார்த்தீங்கன்னா கொரோனா பாதித்த சூழ்நிலை யில் படம் ரிலீசாகி இந்த படம் ஓடுமா ஓடாதா என்ற நிலையில் 100 கோடி வரை வசூல் செய்தது
குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு தான் கடந்த மாதம் ரிலீஸ் ஆகி அப்பா சென்டிமென்ட் என்ற கதைக் களத்தோடு ரிலீசான இப்படம் அனைத்து தரப்பினரையும் பொதுவாக கல்லூரி மாணவ மாணவிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்த டான்.
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மிசுலபமா ரசிகர்களை கவர்ந்து விடுவார்.அது எப்படின்னு கேட்டீங்கன்னா இவருடைய முகம் ஈசியா நம்ம பக்கத்து வீட்டு பையன் மாதிரி இருக்கும் பார்த்ததும் எல்லோருக்கும் டக்குனு பிடிச்சிடும்.அடுத்தது இவர் தேர்ந்தெடுத்து நடிக்கிற கதைக்களம் ரொம்ப கேஷுவலா ஈஸியா ஒரு சாமானிய மனிதன் வாழ்க்கையில் வர்ற மாதிரியான விஷயங்கள்தான் இவரது படங்களில் கதைக் களமாக இருக்கும்.

அடுத்ததா இவரோட படங்களின் பெயரை குறிப்பிட்டு சொல்லலாம் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், ரேமோ,சீமராஜா, மான் கராத்தே, கேடி பில்லா கில்லாடி ரங்கா, டாக்டர்,டான்,போன்ற படங்களை உதாரணத்திற்கு சொல்லலாம்.இந்த மாதிரி பட தலைப்பில் தலைப்புகளே மேலே ரசிகர்களை கவர்ந்து விடுவார் சிவகார்த்திகேயன் .

தற்போது கூட ஒரு செய்தி வந்திருக்கிறது அது என்னன்னு கேட்டீங்கன்னா சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தோட தலைப்புதான் இவர் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு “மாவீரன்” சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஜினிகாந்த், அம்பிகா, நடித்து இயக்குநர் ராஜசேகர் இயக்கிய படத்தின் பெயர் “மாவீரன்”.
அதே தலைப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் படக்குழுவினரால் அறிவிக்கப்படுவார்கள்.