• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தியாகராஜன் குமாரராஜாவின் ‘பாக்கெட் நாவல்’ படப்பிடிப்பு துவங்கியது!

by Tamil2daynews
February 18, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தியாகராஜன் குமாரராஜாவின் ‘பாக்கெட் நாவல்’ படப்பிடிப்பு துவங்கியது!

தமிழ் சினிமாவின் தனித்துவமான கதை சொல்லல் பாணிக்காக கொண்டாடப்படும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படம் ‘பாக்கெட் நாவல்’. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. நேற்று வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா – விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், ரசிகர்களும் சினிமா வட்டாரமும் இந்த படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர். மேலும் கன்னட முன்னணி நட்சத்திரம் ராஜ் B ஷெட்டி, நடிகர் கிஷோர், நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். அவரது இசை இந்த படத்திற்கு ஒரு முக்கியமான பலமாக அமையும் எனக் கூறப்படுகிறது. பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். தற்போது படத்தின் இசைப்பணிகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘பாக்கெட் நாவல்’ படத்தை தியாகராஜன் குமாரராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான Tyler Durden And Kino Fist (TDKF) மூலம் தயாரிக்கிறார். கொலைகாரன் திரைப்படம், வதந்தி சீரிஸ் முதலான படைப்புகளை இயக்கிய Andrew Louis இப்படத்தின் கதை, திரைக்கதையை எழுதியுள்ளார். ஒளிப்பதிவில், இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான Nirav Shah இணைந்திருப்பது படத்தின் இன்னொரு பெரிய பலமாகும். ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் தனது எடிட்டிங் மூலம் கவனம் ஈர்த்த சத்யராஜ் நடராஜன் இந்த படத்திலும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது எடிட்டிங், படத்தின் கதை சொல்லல் வேகத்துக்கும் தாக்கத்துக்கும் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. வே.சண்முகராஜா கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.

இப்படத்தின் இசை உரிமையை முன்னணி இசை நிறுவனமான Think Music கைப்பற்றியுள்ளது. அதேபோல், படத்தின் டிஜிட்டல் உரிமைகளுக்காக முன்னணி ஓடிடி நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது படத்தின் வணிக மதிப்பையும் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது.

தற்போது படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்கட்டத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

‘பாக்கெட் நாவல்’ வித்தியாசமான கதை சொல்லல், வலுவான நடிகர்களின் பங்களிப்பு மற்றும் இசைஞானியின் இசை ஆகிய அனைத்தும் இணைந்த ஒரு தனித்துவமான திரைப்படமாக உருவாகி வருகிறது. தியாகராஜன் குமாரராஜாவின் சினிமா உலகில், இந்த படம் இன்னொரு முக்கியமான மைல்கல்லாக அமையும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

தொழில் நுட்ப குழு

தயாரிப்பு – தியாகராஜன் குமாரராஜா, S.D. எழில்மதி (Tyler Durden And Kino Fist (TDKF)
இயக்கம் – தியாகராஜன் குமாரராஜா
இசை – இசைஞானி இளையராஜா
கதை, திரைக்கதை – ஆண்ட்ரூ லூயிஸ்
ஒளிப்பதிவு – நீரவ் ஷா
எடிட்டிங்  – சத்யராஜ் நடராஜன்
கலை இயக்கம் – வே.சண்முகராஜா
உடை வடிவமைப்பு – S.D. எழில்மதி
பாடல்கள் – யுகபாரதி
பப்ளிசிட்டி டிசைனர் – கோபி பிரசன்னா
ஸ்டில்ஸ்  – C. H. பாலு
கலரிஸ்ட் – G. பாலாஜி
ஒலி வடிவமைப்பு  – தபஸ் நாயக்
SFX – அருண் சீனு
VFX supervisor: அரவிந்த் நாகா
தயாரிப்பு மேற்பாவையாளர் – அருண் அருணாசலம்
நிர்வாக தயாரிப்பாளர் (Executive Producer) – சத்யராஜ் நடராஜன்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)
Previous Post

சைபர் த்ரில்லர் திரைப்படமான அச்சுத அவதாரம் – ஃபர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

Next Post

“ஹேப்பி ராஜ்” படத்தின் முதல் சிங்கிள் “ஆடினே இருப்பேன்” வெளியீடு – இளமையான மற்றும் உற்சாகத்தின் வண்ணமயமான கொண்டாட்டம்!

Next Post

“ஹேப்பி ராஜ்” படத்தின் முதல் சிங்கிள் “ஆடினே இருப்பேன்” வெளியீடு – இளமையான மற்றும் உற்சாகத்தின் வண்ணமயமான கொண்டாட்டம்!

Popular News

  • டார்க் ஜெயண்ட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆட்டி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து U சான்றிதழ் பெற்ற “அங்கீகாரம்” திரைப்படம் ஜூன் 26-ல் ரிலீஸ்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.