• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மலையாள சினிமாவில் பாட்டெழுதும் அண்ணாத்த படத்தின் பாடலாசிரியர் அருண் பாரதி

by Tamil2daynews
December 18, 2021
in சினிமா செய்திகள்
0
மலையாள சினிமாவில் பாட்டெழுதும் அண்ணாத்த படத்தின் பாடலாசிரியர் அருண் பாரதி
0
SHARES
30
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இளம் தலைமுறை பாடலாசிரியர்களில் தனக்கென தனி அடையாளத்துடன் முன்னனி திரைப்படங்களில் பாடல்கள் எழுதி வருபவர் பாடலாசிரியர் கவிஞர் அருண்பாரதி
ரஜினி, அஜித், விஷால், விஜய்ஆண்டனி என முன்னனி நடிகர்களுக்கு பாடல்கள் எழுதி வரும் இவரது சமீபத்திய ஹிட் அண்ணாத்த திரைப்படத்தில் இடம்பெற்ற வா சாமி பாடல்.
இதனைத் தொடர்ந்து நேரடி மலையாள திரைப்படமாக உருவாகி வரும் ப்ரீசர் நம்பர் 18 திரைப்படத்தில் தமிழ் பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.
இது குறித்து அருண்பாரதி பேசுகையில் …
ரஜினிசாரின் அண்ணாத்த படத்தில் நான் எழுதியிருந்த ” வா சாமி ” பாடலை இவ்வளவு பெரிய வெற்றிப்பாடலாக்கிய ரசிகர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போது மாநிலம் கடந்து நம் தமிழ் மொழியின் பெருமையை கொண்டு செல்வதில் நானும் ஒரு கருவியாக இருக்கிறேன் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இந்த  பாடலை ஒரு மணி நேரத்தில் எழுதி முடித்துவிட்டேன் , எழுதும் போது இயக்குநர் மனோஜ் கே வர்க்கீஸ், இசையமைப்பாளர் சுனில்குமார் ஆகியோர் வரிகளில் உள்ள சப்தத்தையும் அர்த்தத்தையும் உணர்ந்து வியந்து பாராட்டினார்கள், அதற்கு நான் நீங்கள் பாராட்ட வேண்டியது என்னையல்ல தமிழ் மொழியை என்று அவர்களுக்கு பதிலளித்தேன்.
இக்கதை கேரளம் மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் நடைபெறும் கதையாக இருப்பதால் முழுக்க முழுக்க தமிழிலேயே இப்பாடலை எழுதியுள்ளேன் என்கிறார் புன்னகையுடன்.
இதனைத் தொடர்ந்து அருண்பாரதியின் சூழலியல் குறித்த ” ஈமக்கலயம் ” என்னும் கவிதை கேரள அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு பன்னிரன்டாம் வகுப்பு சிறப்புத்தமிழ் நூலில் மாணவர்களுக்கு பாடத் திட்டமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அது ஒரு தமிழ் கவிஞனுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்றுதான் சொல்லவேண்டும்.
Previous Post

சீனியர் கலைஞன் ஜனகராஜிற்கு விஜய் சேதுபதி செய்த மரியாதை

Next Post

ஏரியை  புனரமைக்கும் பணிக்காக டாக்டர் சூசன் மார்த்தாண்டன்  முன்னெடுப்பில் நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது

Next Post
ஏரியை  புனரமைக்கும் பணிக்காக டாக்டர் சூசன் மார்த்தாண்டன்  முன்னெடுப்பில் நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது

ஏரியை  புனரமைக்கும் பணிக்காக டாக்டர் சூசன் மார்த்தாண்டன்  முன்னெடுப்பில் நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது

Popular News

  • விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரஜினியின் ‘தர்மன்’.

    0 shares
    Share 0 Tweet 0
  • டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மேரிகோல்ட்’

    0 shares
    Share 0 Tweet 0
  • ’மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

August 15, 2026

தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

August 15, 2026

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மேரிகோல்ட்’

August 15, 2026

’மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

August 15, 2026

விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரஜினியின் ‘தர்மன்’.

August 15, 2026

மகுடம் – விமர்சனம்

August 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.