ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நெஞ்சுக்கு நீதி திரைப்பட வெற்றி கொண்டாட்டம் !

by Tamil2daynews
June 5, 2022
in சினிமா செய்திகள்
0
Talk Of The Town  திரை பிரபலம் Sathish (Cinema Wala)..!
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நெஞ்சுக்கு நீதி திரைப்பட வெற்றி கொண்டாட்டம் !

தயாரிப்பாளர் போனி கபூர்  வழங்க, ZEE STUDIOS & BAYVIEW PROJECTS  உடன்  ROMEO PICTURES இணைந்து தயாரிக்க,  அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான திரைப்படம்  “நெஞ்சுக்கு நீதி”. சமூக அவலத்தை சாடும் ஒரு அழுத்தமான திரைப்படமாக இப்படம் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டது. வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி அடைந்த நிலையில் படக்குழு இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தது.

இந்நிகழ்வினில்
கலை இயக்குனர் மெவின் கூறியதாவது…
இந்த படம் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த படத்திற்கு கடின உழைப்பை கொடுத்துள்ளோம். ஆர்டிகள் 15 நிறைய விருது வாங்கிய படம், அதன் சாராம்சம் குறையாமல் அருண் உருவாக்கியுள்ளார். உதய் சார் அடுத்தடுத்து நிறைய படங்கள் பண்ண வேண்டும். அருண்ராஜா உடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியான விஷயம். படக்குழு அனைவருக்கும் நன்றி.

நடிகர் மயில்சாமி கூறியதாவது….
நெஞ்சுக்கு நீதி நன்றி விழாவில் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி. உதயநிதி சாருடன் இது எனக்கு ஐந்தாவது படம். படத்தில் நான் நடிப்பதற்கு காரணம் உதயநிதி சார் தான். எனக்கு வண்டி ஓட்ட தெரியாது, இந்த படத்தில் எனக்கு டிரைவர் பாத்திரம். என் கதாபாத்திரத்தை முதலில் செய்ய இருந்தவர் பொன்வண்ணன் தான். சில காரணங்களால் அவர் செய்ய முடியவில்லை. படத்தில் காமெடி மயில்சாமி கதாபாத்திரமாக இருக்க கூடாது என இயக்குனர் கூறினார். படத்தில் நான் பேசிய வசனங்களுக்கு மக்கள் பாராட்டு தர காரணம் எழுத்தாளர் தமிழ். எழுத்தாளர் தமிழ் வசனங்களை மிகுந்த சிரத்தை எடுத்து உருவாக்கினார். படத்தின் வசனங்களை பேசும் போது மிகுந்த சந்தோசத்தில் இருந்தேன். இந்த படம் நல்ல பெயர் பெற்று தந்துள்ளது. ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் என மனமார்ந்த் நன்றி.
எழுத்தாளர்  தமிழ் கூறியதாவது…
இந்த படத்தை நாங்கள் நினைத்ததை விட மக்களிடம் நீங்கள் கொண்டுபோய் சேர்ததுள்ளீர்கள். எங்களுக்கு இந்த படம் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. நீங்கள் அதை செய்திருக்கிறீர்கள். எல்லா மக்களுக்குமான படமாக இந்த படம் மாறியுள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி. மயில்சாமி சார் படத்தின் உள்ளே வந்த பிறகு, அந்த கதாபாத்திரம் முக்கியமானதாக மாறியது. இந்த படத்தின் கடைசி நிகழ்வு இது. ஆனாலும் இது நிறைவான ஒன்றாய் இருக்கிறது. அனைவருக்கும் நன்றி.

எடிட்டர் ரூபன் கூறியதாவது…
இந்த படத்தில் சமூக அக்கறை உள்ள அருண்ராஜா அவர்களை தேர்ந்தெடுத்ததற்கு உதய் சாருக்கு நன்றி. கலை மற்றும் சினிமா மேல் மிகுந்த ஆர்வம் உள்ள நபர். இந்த படம் ஒரிஜினல் படமாக இல்லாமல், தமிழுக்கு ஏற்றார் போல் உருவாக்கியுள்ளார் இயக்குனர். படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் பெரிய பங்களிப்பை அளித்துள்ளனர். படத்தின் வெற்றிக்கு அனைவரும் காரணம். எல்லோருக்கும் நன்றி.

நடிகை யாமினி கூறியதாவது….
இந்த படத்தில் என் கதாபாத்திரத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. அதற்கு அருண்ராஜா சார் தான் காரணம். அவருக்கு நன்றி. இந்த படத்தில் உதய் சார் உடன் நடித்தது சந்தோசமாக இருக்கிறது. படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி கூறிகொள்கிறேன். எனக்கு இந்த படத்தில் வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு நன்றி. பத்திரிக்கையாளர்களுக்கும் நன்றி கூறிகொள்கிறேன்.
நடிகர் ரமேஷ் திலக் கூறியதாவது..
இந்த படத்திற்கு மக்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த படத்தில் எனக்கும், என் மனைவிக்கும் வாய்ப்பளித்த இயக்குனர் அவர்களுக்கு நன்றி.
நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி கூறியதாவது…
இந்த படத்தில் பங்களிப்பு கொடுத்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி. இந்த படத்திற்கு பெரிய வரவேற்பு கொடுத்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. எனக்காகவே இந்த பாத்திரத்தை எழுதியது போல் இருந்தது. என் மேல் பெரிய நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்த அருண்ராஜா, எழுத்தாளர் தமிழரசு, தயாரிப்பாளர்கள், உதயநிதி சார் ஆகியோருக்கு நன்றி. படத்தில் உதவி இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் ஆகியோருக்கு நன்றி. படத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி.
நடிகர் இளவரசு கூறியதாவது…
படத்தின் பெரிய பலத்தில் ஒரு பலம் கலை இயக்குனர். இந்த படத்தில் சுரேஷ் ஒரு காட்சியில் எல்லோரையும் தாண்டி நடித்தார். என் கதாபாத்திரத்தை அருண்ராஜா வடிவமைத்த விதம், எனக்கு மன அழுத்தத்தை கொடுத்ததது. அந்த அளவு அந்த கதாபாத்திரம் அவ்வளவு சிக்கலை சந்திக்கும் என்பதை வெளிகாட்டி இருந்தது. அருண்ராஜா நினைத்ததை என்னால் முழுதாய் கொடுக்க முடியவில்லை என்று நினைக்கிறேன். படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். தம்பி உதயநிதி இந்த படத்தில் கொடுத்த நடிப்பிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன். நன்றி
நடிகர் ஆரி கூறியதாவது….
இந்த படம் சமுகத்திற்கு  தேவையான ஒன்றாக இருந்தது எங்களுக்கு மகிழ்ச்சி. இந்த படம் எதிர்காலத்தில் சமூகநீதிக்கான ஒன்றாய் இருக்கும். இந்த படத்தின் உருவாக்கத்திற்கு முழு காரணம் இயக்குனர் குழு. என் பாத்திரம் இப்படி வரவேற்பு பெற காரணம் இயக்குனர், உதய் சார் மற்றும் எடிட்டர் தான் காரணம். அவர்களுக்கு நன்றி. படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. இந்த படத்தை வெற்றி படமாக்கிய பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி.

நடிகை தான்யா ரவிச்சந்திரன் கூறியதாவது….
இந்த படத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குனர், உதய் சார் மற்றும் தயாரிப்பாளர் அவர்களுக்கு நன்றி.
இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கூறியதாவது…
பாடலாசிரியராக இந்த மேடையில் தான் அறிமுகமானேன். எல்லோருக்கும் இந்த மேடையில் நன்றி கூறிகொள்கிறேன். இந்த படத்தை இயக்க நான் சரியான ஆள் என என்னை தேர்ந்தெடுத்த உதய் சாருக்கு நன்றி. உதய் சார் எனக்கு இந்த படத்தில் முழு சுதந்திரம் கொடுத்தார். கனா படத்தில் நான் புதுமுகங்களை பயன்படுத்தியது போல், இந்த படத்திலும் இருக்க வேண்டும் என உதய் சார் கூறினார். இந்த படத்தில் வசனகர்த்தா தமிழ் பெரும் உழைப்பை கொடுத்துள்ளார். யுகபாரதி அவர்களுக்கு நன்றி, அவர் பல விஷயங்களை கற்றுகொடுத்தார். வட்டார மொழிக்கு எனக்கு பலர் உதவினர், அவர்களுக்கு நன்றி. இந்த படம் சமூகநீதி பேசும் படம், அதற்காக தான் நாங்கள் அனைவரும் உழைத்துள்ளோம். நெஞ்சுக்கு நீதி என்ற தலைப்பு இந்த படத்திற்கு பொருத்தமான ஒன்று. அதை வாங்கிகொடுத்த உதய் சாருக்கு நன்றி. உதவி இயக்குனர்கள் பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் படத்திற்கு உயிர் கொடுத்துள்ளனர். படத்தின் வெற்றிக்கு ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் உடைய பங்களிப்பு முக்கியமானது. இந்த படத்திற்கு பத்திரிக்கையாளர்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. என்னுடைய மனைவிக்கு நன்றி. இந்தப்படத்தை செய்ய அவர் தான் தூண்டுகோலாக இருந்தார் அனைவருக்கும் நன்றி.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது…
மனதுக்கு நேர்மையான படத்தை கொடுத்துள்ளோம். அதற்கு நீங்கள் கொடுத்த பாராட்டிற்கு நன்றி. தயாரிப்பாளர்கள் இருவருக்கும் நன்றி. எனக்கு எந்தவிதமான கஷ்டம் இல்லாமல் படம்பிடித்த  ஒளிப்பதிவாளருக்கு நன்றி. படத்தில் என்னுடன் நடித்த ரமேஷ் திலக்கிற்கு நன்றி. ரமேஷ் திலக் மனைவிதான் அவர் உடன் நடிக்கிறார் என்பது தெரியாமல் அவரை சந்தேகப்பட்டேன். கலை இயக்குனர் உடைய பணி எல்லாராலும் பாராட்டபட்டது. சுரேஷ் உடைய கதாபாத்திரம் தான் இந்த படத்தின் உயிர்.  தமிழரசு இந்த படத்தில் பெரிய உழைப்பை கொடுத்துள்ளார். அவருக்கு நன்றி. எடிட்டர் அவர் உழைப்புக்கு நன்றி. நடிகை யாமினிக்கு நன்றி. நடிகர் இளவரசு உடன் நடித்தது மகிழ்ச்சி. படம் பார்த்தபிறகு தான் படத்தில் ஆரி தான் ஹீரோ என்று தெரிந்தது. தன்யா அவர்களுக்கு நன்றி. படத்தின் இயக்குனர் படத்தை தமிழுக்கு தகுந்தாற்போல் மாற்றியுள்ளார். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் அவர் தான். ஜெயித்து காட்டிவிட்டார் அருண். படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இந்த படத்தின் வெற்றி அருண் மற்றும் அவரது மனைவிக்கு சமர்ப்பணம். நன்றி

Previous Post

இந்தப் படத்தின் கலை இயக்குனரும் நான்தான் இயக்குனர் பிரவீன் Open Talk

Next Post

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள் !!

Next Post
Talk Of The Town  திரை பிரபலம் Sathish (Cinema Wala)..!

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள் !!

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • அப்புக்குட்டிக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்கும் என்கிறார் “சூரியனும் சூரியகாந்தியும்” படத்தை இயக்கியுள்ள இயக்குனர் ஏ.எல்.ராஜா.

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட ‘தலைக்கவசமும் 4 நண்பர்களும்’ டீஸர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • முகேன் ராவ், தேஜு அஷ்வினி நடிப்பில், மகேஷ் ராம் கே இயக்கத்தில், எஸ் ஜி சி மீடியா தயாரிப்பில், தரண் குமார் இசையில் கலகலப்பான பிரேக் அப் ஆல்பம் ‘சிங்கிள் ஆயிட்டேன் டி’

    0 shares
    Share 0 Tweet 0
  • வந்தியத்தேவன் , குந்தவையின்* *அழகான காதல் பாடல்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பர்சா பிக்சர்ஸ் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ பி கார்த்திகேயன் வழங்கும், கௌதம் கார்த்திக் & சரத்குமார் நடிக்கும் ‘கிரிமினல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

March 21, 2023

முகேன் ராவ், தேஜு அஷ்வினி நடிப்பில், மகேஷ் ராம் கே இயக்கத்தில், எஸ் ஜி சி மீடியா தயாரிப்பில், தரண் குமார் இசையில் கலகலப்பான பிரேக் அப் ஆல்பம் ‘சிங்கிள் ஆயிட்டேன் டி’

March 21, 2023

ZEE5 வழங்கும் “செங்களம்” இணையத் தொடர் டிரெய்லர் வெளியீட்டு விழா !

March 21, 2023

‘பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

March 21, 2023

அப்புக்குட்டிக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்கும் என்கிறார் “சூரியனும் சூரியகாந்தியும்” படத்தை இயக்கியுள்ள இயக்குனர் ஏ.எல்.ராஜா.

March 21, 2023
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நற்பணி  இயக்கம் சார்பில் தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் தென்மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நற்பணி இயக்கம் சார்பில் தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் தென்மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி.

March 21, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!